Post Office அட்டகாசமான திட்டம்: ஒரு முறை முதலீடு... இரு மடங்குக்கு மேல் ரிட்டர்ன்
Post Office: பாதுகாப்பான திட்டங்களை நாடுபவர்களுக்கு தபால் நிலைய நிலையான வைப்புகள் (போஸ்ட் ஆபிஸ் எஃப்டி) மிக உதவியாக இருக்கும்.
நம் வாழ்வில் இன்றியமையாத விஷயங்களில் பணமும் ஒன்றாகும். பணத்தை ஈட்டுவதும், சேமிப்பதும் எத்தனை அவசியமோ, அதே போல பணத்தை முதலீடு செய்வதும் அவசியமாகும். ஆனால் முதலீடு செய்யும் முன் உங்களுக்கு ஏற்ற முதலீட்டு திட்டங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அவரவரது பண இருப்பு, வாழ்க்கை முறை, எதிர்கால தேவைகள், பொறுப்புகள் ஆகியவற்றை பொறுத்து முதலீட்டின் கால அளவும், திட்டங்களும் மாறுபடலாம்.
நீங்கள் முதலீடு செய்த பணம் வேகமாக அதிகரிக்க வேண்டும், அதே சமயம் அதில் எந்த விதமான ஆபத்தும் இருக்கக்கூடாது. அப்படிப்பட்ட பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களை தேர்ந்தெடுப்பது மிக அவசியமாகும். இப்படிப்பட்ட திட்டங்களை நாடுபவர்களுக்கு தபால் நிலைய நிலையான வைப்புகள் (போஸ்ட் ஆபிஸ் எஃப்டி) மிக உதவியாக இருக்கும். போஸ்ட் ஆஃபீஸ் எஃப்டி டைம் டெபாசிட் என்றும் அழைக்கப்படுகிறது. நீங்கள் 1,2,3 மற்றும் 5 ஆண்டுகள் வரை அஞ்சல் அலுவலக நேர வைப்புத்தொகையில் பணத்தை டெபாசிட் செய்யலாம்.
இந்த திட்டத்தில் வட்டி விகிதமும் ஆண்டுக்கு ஏற்ப மாறுபடும். ஆனால் நீங்கள் எஃப்டி மூலம் பெரிய பணம் சம்பாதிக்க விரும்பினால், அதில் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் விரும்பினால், எஃப்டி மூலம் நீங்கள் முதலீடு செய்த தொகையை இரட்டிப்பாக்கலாம். இதை எப்படி செய்வது என இந்த பதிவில் காணலாம்.
தொகையை எப்படி இரட்டிப்பாக்குவது என இங்கே காணலாம்:
தற்போது, 5 ஆண்டுகளுக்கு அஞ்சல் அலுவலக நேர வைப்புத் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்தால், உங்களுக்கு 7.5 சதவீத வட்டி கிடைக்கும். நீங்கள் ரூ. 5,00,000 போஸ்ட் ஆஃபீஸ் எஃப்டியில் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு 7.5% வட்டியாக ரூ. 2,24,974 கிடைக்கும். முதிர்வுக்கான அசல் மற்றும் வட்டி சேர்த்து மொத்தம் ரூ.7,24,974 கிடைக்கும்.
மேலும் படிக்க | ரேஷன் கார்டில் இனி ஈஸியாக பெயர் சேர்க்கலாம்... ஆன்லைனிலும் ஆப்லைனிலும்!
ஆனால் நீங்கள் இந்தத் தொகையை இரட்டிப்பாக்க விரும்பினால், திட்டம் முதிர்ச்சியடைந்த பிறகு இந்தத் தொகையை நீங்கள் திரும்ப எடுக்க வேண்டியதில்லை. அதை எடுக்காமல் நீங்கள் அதை மீண்டும் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். 5 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போதைய வட்டி விகிதத்தின்படி, இதற்கு ரூ. 3,26,201 வட்டி சேர்க்கப்படும். இதன் மூலம் ரூ. 5 லட்சம் முதலீட்டுக்கு வட்டியாக மட்டும் ரூ. 5,51,175 கிடைக்கும். 10 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தம் ரூ. 10,51,175 கிடைக்கும்.
ஆண்டு அடிப்படையில் தற்போதைய வட்டி விகிதம் இதுவாகும்
1 வருடத்திற்கு ஃபிக்ஸ் செய்தால் - 6.8%
2 ஆண்டுகளுக்கு ஃபிக்ஸ் செய்தால் - 6.9%
3 ஆண்டுகளுக்கு ஃபிக்ஸ் செய்தால் - 7.0%
5 ஆண்டுகளுக்கு ஃபிக்ஸ் செய்தால் - 7.5%
கூடுதல் தகவல்
இந்தியா போஸ்ட் டெபாசிட் திட்டங்கள்
இந்தியா போஸ்ட், முதலீட்டாளர்களுக்கு பல டெபாசிட் திட்டங்களை வழங்குகிறது. இவை பொதுவாக தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் என அழைக்கப்படுகின்றன. தற்போது, அரசு 9 தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களை வழங்குகிறது. இந்த ஒன்பது சிறு சேமிப்பு திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY), தேசிய சேமிப்பு பத்திரம் (NSC), தபால் அலுவலக நேர வைப்பு மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) ஆகியவை அடங்கும். இந்த திட்டங்களில் காலாண்டுக்கு ஒருமுறை வட்டி விகிதங்களை அரசாங்கம் மாற்றிக்கொண்டே இருக்கிறது.
மேலும் படிக்க | திருமணமான பெண்களுக்கான ஜாக்பாட் திட்டம்: கணக்கில் வரும் ரூ. 5,000
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ