Indian Rupees - Reserve Bank of India: கிழிந்த நோட்டுகள் குறித்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) வகுத்துள்ளது. அந்த விதியின் அடிப்படையில், வங்கிகள் கிழிந்த ரூபாய் நோட்டை கையாளுகின்றன. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. கிழிந்த ரூபாய் நோட்டை பெறுவது பெரும்பாலும் நிகழ்கிறது. சில நேரங்களில் கவனக்குறைவாக ரூபாய் நோட்டு கிழிந்து விடுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இத்தகைய சூழ்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று குழப்பமாக இருக்கும். கிழிந்த நோட்டை (Indian Currency) ஏதாவது வங்கியில் டெபாசிட் செய்ய முடியுமா அல்லது பரிமாறிக்கொள்ள முடியுமா என்ற ஒரு கேள்வி பெரும்பாலும் வாடிக்கையாளர்களின் மனதில் கண்டிப்பாக எழும். 


இந்திய ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, வாடிக்கையாளர்கள் எந்த வங்கிக்கும் சென்று அத்தகைய கிழிந்த நோட்டுகளை பரிமாறிக்கொள்ளலாம்.


ALSO READ |  புதிய 20 ரூபாய் நாணயம் தயார்!! விரைவில் சந்தைக்கு வர உள்ளது -அதன் சிறப்பு என்ன? அறிக


இருப்பினும், நோட்டுகளை பரிமாறிக்கொள்ளலாமா வேண்டாமா என்பது வங்கியின் பொறுப்பாகும். ஏனென்றால், நோட்டுகளை சரிபார்த்த பின்னரே வாடிக்கையாளர்களின் கிழிந்த நோட்டுகளை மாற்ற ரிசர்வ் வங்கி (RBI) வங்கிகளுக்கு அதிகாரங்களை வழங்கியுள்ளது. 


எடுத்துக்காட்டாக, நோட்டுகளை வேண்டுமென்றே கிழிந்ததா என்பதை வங்கிகள் சரிபார்க்கின்றன. நோட்டு அந்த அளவிற்கு கிழிந்துள்ளது அல்லது நோட்டு போலியானதா? இல்லை? என்று பார்ப்பார்கள். 


இதன் அடிப்படையில் வாடிக்கையாளர் கொண்டு வந்த நோட்டில் எந்த பிழையும் காணப்படவில்லை எனில், நோட்டுகளை (Indian Rupees) மாற்ற வங்கி மறுக்க முடியாது. ஒருவேளை வங்கி வாங்க மறுத்தால் ​, அந்த வங்கிக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதிக்கலாம். 


ALSO READ |  ₹2000 நோட்டுகளுக்கு மீண்டும் செக் வைத்த மத்திய அரசு!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR