அரசாங்கம் சட்டவிரோதமாக செய்யப்படும் பரிவர்த்தனைகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இதற்கென அரசு பண வரம்பிற்கான விதிகளில் சில திருத்தங்களை மேற்கொண்டது, குறிப்பிட்ட வரம்புக்கு மேல் பணம் டெபாசிட் செய்தாலோ அல்லது பணத்தை பெற்றாலோ அவர்கள் பெறக்கூடிய தொகையில் 100 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும்.  மத்திய நேரடி வரிகள் வாரியம் விதித்திருக்கும் புதிய விதிகளின்படி, ஒரு வருடத்தில் ரூ.20 லட்சத்திற்கும் மேல் டெபாசிட் செய்ய விரும்பும் தனிநபர் அவரது பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.  முன்னர் ஒரு நாளில் ரூ.50,000 டெபாசிட் செய்யும்போது பான் கார்டு விவரங்களை கொடுக்க வேண்டும், ஆனால் அப்போது வருடத்திற்கான டெபாசிட் வரம்புகள் எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | SBI Alert: கவனமாக இல்லையென்றால் முழு பணமும் காலி!! SBI விடுத்த எச்சரிக்கை



ஆனால் தற்போது விதிக்கப்பட்டுள்ள புதிய விதிகளின்படி, ஒரு ஆண்டில், பல வங்கிகளிலும் டெபாசிட் செய்யப்படும் தொகை மற்றும் பணமெடுக்கும் தொகை ஆகிவற்றை கண்காணிக்கும் வகையில் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு விவரங்களை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  பான் கார்டு இல்லாத நபர்கள் வங்கியில் நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு மேல் டெபாசிட் செய்வதற்கோ அல்லது பணமெடுப்பதற்கோ ஏழு நாட்களுக்கு முன்னதாக பான் கார்டுக்கு விண்ணப்பித்திருக்க வேண்டியது அவசியமாகும்.  அதேசமயம் ரொக்கமாக ரூ.2 லட்சத்திற்கு மேல் பண பரிவர்த்தனை செய்வதும் முடியாது, உதாரணமாக ரூ.3 லட்சத்துக்கு மேல் தங்க நகைகளை வாங்கும்பொழுது ரொக்கமாக செலுத்தாமல் செக், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது வங்கி டிரான்ஸாக்ஷன் மூலமாக மட்டும் தான் கட்டணத்தை செலுத்த வேண்டும்.


அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளில் ரொக்க பரிவர்த்தனையை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு ரூ.2 லட்சத்திற்கு மேல் ரொக்க பரிவர்த்தனை செய்யக்கூடாது என்கிற விதிமுறையை விதித்துள்ளது.  உங்களது குடும்ப உறுப்பினர் அல்லது உறுப்பினர்களிடமிருந்து பணம் பெறும்போதும் நீங்கள் இந்த விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.  ஒரே சமயத்தில் யாரிடமிருந்தும் ரூ.2 லட்சத்திற்கு மேலான ரொக்க பரிசை பெற்றுக்கொள்ள கூடாது, அப்படி பெற்றால் அதற்கு அபராதம் விதிக்கப்படும்.  ஒருவர் ஒருவரிடமிருந்து ரூ.20,000க்கு மேல் கடன் பெற்றுக்கொள்ள கூடாது, சொத்து பரிவர்தனைகளிலும் ரூ.20,000 மட்டுமே ரொக்கமாக அனுமதிக்கப்படும்.  மேலும் வரி செலுத்துவோர் காப்பீட்டு பிரீமியத்தை ரொக்கமாக செலுத்தாமல் வங்கி மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும், அப்படி அவர்கள் ரொக்கமாக செலுத்தினால் பிரிவு 80டி விலக்குக்கு தகுதியற்றவர்களாக கருதப்படுவார்கள்.


மேலும் படிக்க | 8th Pay Commission: ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி, 44%-க்கும் மேலாக அதிகரிக்கும் ஊதியம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ