சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவிப்பு..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி: சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


இறுதியாக, சஸ்பென்ஸுக்கு முற்றுப்புள்ளி வைத்து, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்க்’ சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்கான தேதியை இன்று உறுதிப்படுத்தியுள்ளார். சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு முடிவுகள் 2020 நாளை அதாவது ஜூலை 15, 2020 அன்று அறிவிக்கப்படும் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.



நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் பிப்ரவரி மாதம் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வும், மார்ச் மாதம் 10 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் நடைபெற்றது. சில பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்ற போதும் பின்னர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து, ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு அகமதிப்பீடு, செயல்முறை தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்க கடந்த மாதம் 26 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது. இதனால் மாணவர்களின் மதிப்பெண்களை கணக்கீடும் பணியில் சிபிஎஸ்இ ஈடுபட்டு வருகிறது.


READ | See Pic: கண்ணில் படும் பெண்களை எல்லாம் நயன்தாராவாக மாற்றும் இளைஞன்!


இந்தநிலையில், ஜூலை 15 முதல் ஜூலை 11 ஆம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் அறிவிப்பு தேதியை முன்கூட்டியே வெளியிட சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது. இந்த போலியான செய்திகள் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளிடையே பெரும் குழப்பத்தை உருவாக்கி வந்தது. இதை தொடர்ந்து, அவர்களின் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என தெரிவித்துள்ளார்.