See Pic: கண்ணில் படும் பெண்களை எல்லாம் நயன்தாராவாக மாற்றும் இளைஞன்!

இணையத்தை கலக்கும் அச்சு அசலாக நயன்தாரா போலவே இருக்கும் பெண் ஒருவரின் புகைப்படம் வைரலாகி வருகிறது..!

Last Updated : Jul 14, 2020, 11:49 AM IST
See Pic: கண்ணில் படும் பெண்களை எல்லாம் நயன்தாராவாக மாற்றும் இளைஞன்! title=

இணையத்தை கலக்கும் அச்சு அசலாக நயன்தாரா போலவே இருக்கும் பெண் ஒருவரின் புகைப்படம் வைரலாகி வருகிறது..!

இந்த உலகத்தில் ஒருவரைப் போன்று ஏழு பேர் ஒரே மாதிரி இருப்பார்கள் என்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் பிரபலங்கள் போல இருந்தால் அவர்களுக்கு ஏற்படும் பெயரும் புகழும் பற்றி சொல்லவா வேண்டும். அதுவும், TIK TOK போன்ற பொழுது போக்கு செயலிகள் வந்த பின்னர் அச்சு அசலாக பிரபலங்களை போன்றே இருக்கும் பல்வேறு சாமானிய மனிதர்களின் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவத் துவங்கியது. முன்னதாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா போலவே இருக்கும் பெண் ஒருவரின் வீடியோ சமீபத்தில் டிக்டாக், ஹலோவில் வைரலானது. 

இந்நிலையில், தற்போது இன்ஸ்டாகிராமில் பெண் ஒருவர் நயன்தாரா போலவே மேக்கப் போட்டு விதவிதமான ஸ்டில்களை எடுத்து பதிவு செய்துள்ளார். மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நயன்தாரா இருப்பது போலவே இருக்கும் இந்த புகைப்படத்தை நயன்தாராவின் ரசிகர்களும் ரசித்து வருவது தான் ஆச்சரியம். 

இவருக்கு மலேசியாவைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணரான கண்ணன் ராஜமாணிக்கம் என்பவர் தான் நயன்தாராவை போல ஒப்பனை செய்துள்ளார். என்னது நயன்தாராவைப் போல் முகத்தோற்றம் வேண்டுமென்றால் மேக்-அப் செய்தாலே சாத்தியமா? என ஆச்சரியமாக உள்ளதா..? உங்கள் ஆச்சரியத்தை சாத்தியமாக்கியவர் தான் இவர். இவருக்கு மேக்-அப்பில் சாத்தியமில்லாதது எதுவுமில்லை. ஒரு ஆண் மேக் அப் போடுகிறாரா என்கிற விமர்சனங்களைக் கடந்து இன்று அவர் தான் எனக்கு மேக்-அப் போட வேண்டும் என்று வரிசை கட்டி நிற்கு பெண்களின் பட்டியல் ஏராளம். இவரின் டேட் கிடைக்கவில்லை எனில் தன் திருமணத்தையே அவர் தரும் டேட்டிற்கு மாற்றிக்கொள்கிறார்கள் எனில் ஆச்சரியம் தான்.

READ | ஏர்டெல், வோடபோன் ஐடியா பிரீமியம் திட்டங்களுக்கு ட்ராய் தடை விதிப்பு!

மேலும், இவர் உலக அழகி ஐஸ்வர்யா மற்றும் நடிகை ஸ்ரேயா போன்றவர்களின் தோற்றத்திலும் முக ஒப்பனை வேறு சில பெண்களுக்கு செய்துள்ளார். அந்த புகைபடங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. விரைவில் இவர்கள் நயன்தாராவுக்கு டூப்பாக நடிக்க அழைக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே தோன்றுகிறது. 

Trending News