மத்திய அரசு, 2016 ஆம் ஆண்டில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க, பாஸ்டேக் எனும் மின்னணு அட்டை முறையை அறிமுகப்படுத்தியது. இதன் முக்கிய நோக்கம், சுங்க சாவடிகளில், அதாவது டோல் ப்ளாஸாவில் கட்டணம் வசூலிக்கும் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முயற்சியாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வகையில், சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடக்கும்போது கட்டணம் செலுத்துவதற்கு நீண்டநேரம் நிற்காமல், பாஸ்டேக் அட்டையிலிருந்து பணம் வசூலிக்கப்படும்.வாகன உரிமையாளர்கள் தேவைக்கேற்ப,  பாஸ்டேக் (FASTag) அட்டையில் முன் கூட்டியே கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி கொள்ள வேண்டும்.


FASTag என்பது ஒரு மின்னணு அட்டை. அதனை உங்கள் வாகனத்தின் விண்ட்ஷீல்டில் ஒட்ட வேண்டும். இது RFID தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. இதன் மூலம் FASTag உடன் இணைக்கப்பட்ட உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாகவோ, அல்லது அதன் வாலெட்டில் நீங்கள் வைத்திருக்கும் இருப்பிலிருந்தோ கட்டணத்தை செலுத்தலாம். பணம்  எவ்வளவு செலுத்தப்பட்டது, இருப்பில் மீதமுள்ள பணம் குறித்த விவரங்களுடன், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு, எஸ்எம்எஸ் அனுப்பப்படும்.


இந்நிலையில் 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் அனைத்து 4 சக்கர வாகனங்களுக்கும் பாஸ்டேக் (FASTag) அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டிருந்தது.


தற்போது, இதற்கான கால வரம்பை மத்திய அரசு (Central Government) பிப்ரவரி 15ம் தேதி வரை நீட்டித்துள்ளது.பாஸ்டேக் மின்னணு அட்டைகளை, வங்கிகள் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஆகியவை வழங்கி வருகின்றன.


வாகன ஓட்டிகளுக்கு வசதியாக பாஸ்டேக் அட்டைகளை பெறும் வகையில், சுங்கச்சாவடிகளுக்கு அருகே பாஸ்டேக் பெறுவதற்கான முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. 


தற்போது 75-80 சதவிகித கட்டணங்கள், FASTag மின்னணு அட்டைகள் மூலம் பெறப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 


ALSO READ | புத்தாண்டில் அரசு வழங்கும் பரிசு; PF கணக்கில் 8.5% வட்டியை முழுமையாக செலுத்த ஒப்புதல்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR