ஊழியர்களுக்கு மத்திய அரசு கொடுத்த இன்ப அதிர்ச்சி!
மத்திய அரசு ரயில்வே ஊழியர்களுக்கு டிஏவை 14% சதவீதமாக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள ரயில்வே ஊழியர்களுக்கு நல்ல செய்தியினை அரசு வெளியிட்டுள்ளது. அவர்களுக்கு ஆறாவது ஊதியக் குழுவின் கீழ், நிலுவைத் தொகையுடன் சேர்த்து அவர்களது அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்த அதிகாரபூர்வ அறிவிப்பின்படி14% சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில்வே ஊழியர்களுக்கு அனுமதிக்கப்படும் டிஏ விகிதம் ஜூலை 1, 2021ல் 189 சதவீதத்திலிருந்து 196 சதவீதமாகவும், ஜனவரி 1, 2022ல் 196 சதவீதத்திலிருந்து 203 சதவீதமாகவும் உயர்த்தப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரயில்வே வாரியம் டிஏ உயர்வை தலா 7 சதவிகிதம் என இரண்டு பகுதிகளாக அறிவித்துள்ளது மற்றும் ஆறாவது ஊதியக் குழுவின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு இது பொருந்தும் என்று கூறியுள்ளது.
மேலும் படிக்க | SBI ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கான 641 வேலைவாய்ப்புகள்
தற்போது ஊழியர்களுக்கு வழங்கப்படும் அலோவன்ஸ் 196 சதவீதத்திலிருந்து 203 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய டிஏவானது ஜூலை 1, 2022 முதல் அமலுக்கு வரும். ஜனவரி 1, 2022 முதல், மேலும் 7 சதவீத உயர்வு அறிவிக்கப்பட்டு இது ஜனவரி 1 முதல் 14 சதவீதமாக உயர்வு பெறும். சமீபத்தில், சில அரசு ஊழியர்களுக்கான அகவிலை நிவாரணம் 368 சதவீதத்திலிருந்து 381 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது நவம்பர் 18, 1960 மற்றும் டிசம்பர் 31, 1985 க்கு இடையில் சேவையில் இருந்து ஓய்வுபெற்ற சிபிஎஃப் பயனாளிகளுக்கானது. மேலும் சில தினங்களுக்கு முன்னர் வெளியான அறிக்கைகளின்படி, ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொது டிஏ நிலுவைத் தொகை தற்போது வழங்கப்படாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலைப்படியும் வழங்கப்படுகிறது. மார்ச் மாதம், 7வது ஊதியக் குழுவின் கீழ் அகவிலைப்படியை (டிஏ) 3 சதவீதமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த நடவடிக்கையால் 50 லட்சம் அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் லாபம் அடைகின்றனர். சமீபத்தில் அரசு டிஏ மற்றும் டிஆர்-ஐ உயர்த்தியது, தற்போது இவை இருமடங்காக உயர்ந்துள்ளது.
மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு ICICI வங்கி சிறப்பு பரிசு; இந்த வட்டி விகிதம் அதிகரிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR