இந்தியாவிற்கு 12,660 மெட்ரிக் டன் வெங்காயம் இறக்குமதியாக இருக்கும் நிலையில் வெங்காயத்தின் விலை ரூ.5-க்கும் குறையும் என கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

12,660 மெட்ரிக் டன் வெங்காயம் இறக்குமதிக்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவிற்கு இந்த வெங்காயம் வரும் டிசம்பர் 27 முதல் கூடுதல் வெங்காயம் வரத் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. இதன் மூலம், இப்போது இறக்குமதி செய்யப்படும் மொத்த வெங்காயத்தின் அளவு சுமார் 30,000 மெட்ரிக் டன் எட்டும் எனவும், இதன் காரணமாக வெங்காயத்தில் விலை பெருமளவில் குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வெங்காயம் விலை ஏற்றம் தொடர்பான செய்திகளை படிக்க...


பாராளுமன்ற கேள்வி நேரத்தின் போது மேலும் சில கேள்விகளுக்கு பதிலளித்த வேளாண் அமைச்சர் தோமர், விவசாயிகளின் நலனில் சிறப்பாக செயல்படுவதன் மூலம் பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தப் போகிறது எனவும் குறிப்பிட்டார். இத்திட்டத்தின் செயல்திறன் திருப்திகரமாக உள்ளது எனவும், திட்டத்தில் பங்கேற்கும் உரிமைகோரல்களில் 80 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.


தோமர் விவசாயத்தில் காலநிலை மாற்றத்தின் விளைவுகளை விரிவாக விளக்கினார். அதன் விளைவுகளை குறைப்பதில் அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும், இதற்காக பல திட்டங்களும் ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


வெங்காயம் விலை ஏற்றம் தொடர்பான செய்திகளை படிக்க...


இது தவிர, வானிலை குறித்து விவசாயிகளுக்கு உடனடி தகவல்களை வழங்கும் அமைப்பின் நன்மை குறித்து, நாட்டின் நான்கு கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு அவர்களின் மொபைல்களில் குறுஞ்செய்திகள் மூலம் தகவல்கள் வழங்கப்படுகின்றன என்று தோமர் தெரிவித்தார். மாறிவரும் பருவத்திற்கு ஏற்ப பல மேம்பட்ட இனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார். 


முன்னதாக, காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன், விவசாயிகளை விட வர்த்தகர்களின் நலனுக்காக அரசாங்கம் செயல்படுவதாக குற்றம் சாட்டினார். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தில் வறுமை இரு மடங்காக அதிகரித்துள்ளது எனவும் வருத்தம் தெரிவித்தார்.