மானிய விலையில் அரிசி: 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன், 'பாரத் அரிசி'யை, கிலோவுக்கு, 25 ரூபாய் தள்ளுபடி விலையில், அரசு அறிமுகப்படுத்தலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அதிகரித்து வரும் உணவுப் பொருட்களின் விலையை சமாளிக்க, ஒரு கிலோவுக்கு 25 ரூபாய் என்ற மானிய விலையில் 'பாரத் அரிசி' (Bharat Brand Rice) அறிமுகப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றான. 
 
'பாரத் அட்டா' மற்றும் 'பாரத் தால்' என, கோதுமை மாவு மற்றும் பருப்பு வகைகளுக்கான விநியோகம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்படுள்ளது. இந்த ஆண்டு 
நவம்பரில் தானியங்களின் விலை 10.3% உயர்ந்து, ஒட்டுமொத்த உணவுப் பணவீக்கத்தை 8.7% என உயர்த்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவைத் தேர்தல்


அதிகரித்து வரும் உணவுப் பணவீக்கத்தை சமாளிக்க பாரத் பிராண்ட் என்ற பெயரில் உணவு தானியங்களை மக்களுக்கு வழங்கும் கொள்கையை அரசு அறிமுகப்படுத்த உள்ளது. பாரத் அரிசி அறிமுகப்படுத்தப்பட்டால், இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (National Agricultural Cooperative Marketing Federation of India (Nafed)), இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (National Cooperative Consumers' Federation of India (NCCF)) மற்றும் கேந்திரிய பண்டார் விற்பனை நிலையங்கள் மற்றும் மொபைல் வேன்கள் போன்ற அரசு நிறுவனங்களின் மூலம் இந்த அரிசி விற்பனை செய்யப்படும்.  


மேலும் படிக்க | Tax Regimes: உங்களுக்கு ஏற்ற வரிமுறை எது? பழையதா? புதியதா? எதில் வரிவிலக்கு கிடைக்கும் -முழுவிவரம்


தற்போது, பாரத் கோதுமை மாவு மற்றும் கடலைப் பருப்பு ஒரு கிலோவுக்கு ரூ.27.50 மற்றும் ரூ.60 என தள்ளுபடி விலையில் அரசு வழங்குகிறது. பாரத் கோதுமை மாவு மற்றும் கடலைப் பருப்பு ஆகியவை 2,000 சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் விற்கப்படுகின்றன.


நவம்பரில் உணவுப் பணவீக்கம் நவம்பரில் 8.7 சதவீதமாக இருந்தது, அக்டோபரில் 6.61 சதவீதமாகவும், கடந்த ஆண்டு நவம்பரில் 4.67 சதவீதமாகவும் இருந்தது. தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) தரவுகளின்படி, தானியங்களின் விலை சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்ததைவிட 10.3 சதவீதம் உயர்ந்துள்ளது.


உணவுப் பணவீக்கம் சில்லறை பணவீக்கத்தின் கணிசமான பகுதியைக் கொண்டுள்ளது. உணவுப் பொருட்களின் விலை உயர்வால் சில்லறை பணவீக்கம் நவம்பரில் 5.55 சதவீதமாக இருந்தது. நுகர்வோர் விலை குறியீட்டு எண் (consumer price index (CPI)) அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் 4.87 சதவீதமாக இருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பணவீக்கம் 6.83 சதவீதத்தை தொட்டதில் இருந்து சரிந்து வந்தது. 2022 நவம்பரில் சில்லறை பணவீக்கம் 5.88 சதவீதமாக இருந்தது.


ஏற்கனவே பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு இலவசமாக அரிசி தரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | புத்தாண்டுக்குள் இந்த வேலைகளை முடிச்சிடுங்க: டிசம்பர் 31 நினைவிருக்கட்டும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ