Major Change In PPF: சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) ஒரு சிறந்த வழியாகும். இங்கு குறைந்த பணத்தில் முதலீடு செய்வது தொடங்கி, ஒரு வருடத்தில் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம். இந்த திட்டம் முற்றிலும் பாதுகாப்பானதும் ஆகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் அரசு சாரப்பில் பிபிஎஃப் மீதான வட்டி விகிதம் கடந்த நாட்களாக 7.10 சதவீதமாக வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் அரசு பிபிஎஃப் மீதான வட்டி விகிதம் தொடர்பாக பல மாற்றங்களை செய்துள்ளது. இந்த மாற்றங்கள் பற்றி தெரிந்துக் கொள்வோம்.


மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ ஹைக் பற்றிய முக்கிய அப்டேட், ஊதியத்தில் பம்பர் அதிகரிப்பு 


தொகையை மாதம் ஒரு முறை மட்டுமே டெபாசிட் செய்யலாம்
பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) கணக்கில் முதலீடு செய்ய ரூ.50 என்கிற மடங்குகளில் முதலீடு செய்ய வேண்டும். இந்த தொகை ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.500 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். ஆனால், பிபிஎஃப் கணக்கில், முழு நிதியாண்டிலும் 1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இது தவிர,  ஒரு மாதத்திற்கு ஒருமுறை மட்டும் இந்த பிபிஎஃப் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்ய முடியும்.


குறைந்தது வட்டி விகிதம்
அதேபோல் உங்கள் பிபிஎஃப் கணக்கில் உள்ள நிலவைத் தொகைக்கு எதிராகவும் நீங்கள் கடன் பெறலாம். முன்னதாக இதற்கான வட்டி விகிதம் 2 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.


இனி 15 ஆண்டுகளுக்கு பிறகு கணக்கு ஆக்டிவாக இருக்கும்
தொடர்ந்து 15 ஆண்டுகள் நீங்கள் முதலீடு செய்து அதற்கு பிறகு நீங்கள் முதலீடு செய்யவில்லை என்றாலும் உங்களின் பிபிஎஃப் கணக்கு ஆக்டிவ் ஆக இருக்கும். 


இதில் அக்கவுண்ட் திறக்க இந்த ஃபார்ம் நிரப்ப வேண்டும்
பிபிஎஃப் கணக்கை தொடங்க ஃபார்ம் ஏகக்கு பதிலாக ஃபார்ம் 1 ஐ சமர்பிக்க வேண்டும். 15 பி ஆண்டுகளுக்கு பிறகும் அக்கவுண்ட் செயல் பட ஃபார்ம் எச்க்கு பதிலாக ஃபார்ம் 4 இல் விண்ணபிக்க வேண்டும்.


பிபிஎஃப் இல் லோன் எவ்வாறு வழங்கப்படும்
பிபிஎஃப் கணக்கிலும் கடன் கிடைக்கும். இதற்கான விண்ணப்பித்த நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் உங்கள் கணக்கில் இருப்பு இருக்க வேண்டும் என்பதான் விதி, மேலும் அதில் 25% மட்டுமே கடன் பெற முடியும். 


மேலும் படிக்க | 7th Pay Commission: பம்பர் டிஏ உயர்வு, ஊதியத்தில் பெரிய ஏற்றம் இருக்கும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR