Cheap Flight Ticket Booking: இந்த வரும் செப்டம்பர் வரை எங்காவது சுற்ற பிளேனிங் இருந்தால் இந்த செய்தியை கட்டாயம் படிங்க..ஏனெனில் இனி நீங்கள் ரயிலை விட விமான டிக்கெட்டை மலிவான விலையில் பெறலாம்..ஆம், குடியரசு தின விற்பனையில் ஸ்பைஸ்ஜெட் ஒரு சிறப்பு சலுகையை கொண்டு வந்துள்ளது. இதில் உங்கள் விமான டிக்கெட்டை வெறும் ரூ.1126க்கு நீங்கள் பெறலாம். ஆனால் இந்த டிக்கெட்டை எங்கு, எப்படி முன்பதிவு செய்வது என்பதை இந்த கட்டுரையின் மூலம் தெரிந்துக்கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வைரலாகும் ஸ்பைஸ்ஜெட் ட்வீட்
இந்த நிலையில் தற்போது ஸ்பைஸ்ஜெட் வெளியிட்டுள்ள ட்வீட் ஒன்று வைரலாகி வருகின்றது, அதன்படி 1126 ரூபாய்க்கு உள்நாட்டு விமானப் பயணத்தை மேற்கொள்ளலாம் என்று ஸ்பைஸ்ஜெட் அதிகாரப்பூர்வ ட்வீட்டில் பதிவிட்டுள்ளது. ஸ்பைஸ்ஜெட் உங்களுக்காக ஒரு சிறப்பு சலுகையை கொண்டு வந்துள்ளது, இதில் நீங்கள் மலிவாக விமானத்தில் பயணம் செய்யலாம் என்று கூறியுள்ளது.


மேலும் படிக்க | சுகன்யா சம்ரித்தி யோஜனா: இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் நிறுத்துங்கள்! பெரிய அப்டேட்



டிக்கெட் முன்பதிவுக்கான கடைசி தேதி என்ன?
டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர் 24 முதல் 29 ஜனவரி 2023க்குள் செய்ய வேண்டும். 


30 செப்டம்பர் 2023 வரை பயணம் மேற்கொள்ள முடியும்
இந்த சலுகையின் கீழ் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டில், நீங்கள் 24 ஜனவரி 2023 முதல் செப்டம்பர் 30 2023 வரை பயணிக்கலாம்.


டிக்கெட் முன்பதிவு எப்படி செய்வது
விமான நிறுவனத்தின் படி, இந்த விற்பனை அனைத்து ஸ்பைஸ் ஜெட் நகர அலுவலகங்கள், விமான நிலைய அலுவலகங்கள், இணையதளம், மொபைல் பயன்பாடு மற்றும் பயண முகவர்கள் மூலம் முன்பதிவு செய்துக்கொள்ள முடியும்.


எந்த நகரங்களுக்கு முன்பதிவு செய்ய முடியும்?
ஆக்ரா, அகமதாபாத், அஜ்மர், அமிர்தசரஸ், அவுரங்காபாத், பாக்தோரா, பெங்களூர், பவனகர், போபால், பூபானேஸ்வர், சண்டிகர், சென்னை, கோவா, டெஹ்ராடூன், தர்மசாலா, ஜுவாஹால், இந்தோர், இந்தோர் உள்ளிட்ட 68 நகரங்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்துக் கொள்ளலாம். இந்த சலுகை குறித்து கூடுதல் தகவலுக்கு, நீங்கள் அதிகாரப்பூர்வ இணைப்பைப் பார்வையிடலாம் https://www.spicejet.com/.


மேலும் படிக்க | Republic Day: குடியரசு தினத்தின் வரலாறு, முக்கியத்துவம் என்ன? இதோ முழு விவரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ