50% வரை குறைந்த விமான கட்டணம்; வெறும் 1000 ரூபாய்க்கு பயணம் செய்யலாம்

Air Ticket Price Down: விமான டிக்கெட்: மத்திய அரசின் முடிவால் விமான டிக்கெட்டுகள் 50 சதவீதம் வரை குறைந்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 8, 2022, 07:24 PM IST
  • விமான டிக்கெட் கட்டணங்களுக்கான உச்ச வரம்பு நீக்கம்.
  • பயணிகள் குறைந்த விலையில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
  • விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு சிறப்பு சலுகை டிக்கெட்.
50% வரை குறைந்த விமான கட்டணம்; வெறும் 1000 ரூபாய்க்கு பயணம் செய்யலாம் title=

Air Ticket Booking: விமான டிக்கெட் முன்பதிவு: விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. வரும் நாட்களில் நீங்களும் விமானத்தில் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால், விலை குறைவான டிக்கெட் மூலம் நீங்கள் பயணம் செய்யலாம். விமான டிக்கெட்டுக்கான கட்டண உச்சவரம்பை மத்திய அரசு நீக்கியதையடுத்து, விமானக் கட்டணம் குறைந்துள்ளது. பல விமான வழித்தடங்களில், 50 சதவீதம் வரை கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அதாவது, இனி உங்களுக்கு 50 சதவீதம் குறைந்த விலையில் டிக்கெட்டுகள் கிடைக்கும்.

ஊடக செய்திகளின்படி, மத்திய அரசாங்கம் கடந்த வாரம் உள்நாட்டு விமான டிக்கெட் கட்டணங்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த வரம்புகளை நீக்கப்போவதாக அறிவித்தது. மத்திய அரசாங்கத்தின் இந்த அறிவிப்புக்கு பிறகு, பயணிகளை கவரவும், சலுகைளை அறிவிக்கவும் விமான நிறுவனங்கள் முழு வீச்சியில் செயல்பட்டு வருகிறது. இதன்காரணமாக, ஆகாச ஏர், இண்டிகோ, கோ ஃபர்ஸ்ட், ஸ்பைஸ்ஜெட் போன்ற நிறுவனங்கள் தங்கள் விமான கட்டணத்தில் அதிரடியான விலை குறைப்பை செய்துள்ளன. இனி பயணிகளின் டிக்கெட் முன்பதிவு குறைந்த விலையில் புக் செய்யலாம். 

ஆகாசா ஏர்லைன்ஸ் ஒரு மாதத்திற்கு முன்பு செயல்படத் தொடங்கியது. இப்போது இந்த நிறுவனம் மும்பை-பெங்களூரு வழித்தடத்தில் 2,000-2,200 ரூபாய்க்கு விமானப் பயண சேவையை வழங்கி வருகிறது. அதுவே கடந்த மாதத்துடன் ஒப்பிட்டால், அப்போது இந்த வழித்தடத்தின் கட்டணம் ஒரு நபருக்கு ரூ.3,948 ஆக இருந்தது.. அதே சமயம், மும்பை-அகமதாபாத் பயணக் கட்டணம் முன்பு ரூ.5000 ஆக இருந்தது, தற்போது ரூ.1500 ஆகக் குறைந்துள்ளது.

மேலும் படிக்க: விமான பயணிகளுக்கு குட் நியூஸ்: டிக்கெட் தொகை குறையக்கூடும்

டெல்லியில் இருந்து லக்னோவிற்கு விமானத்தில் பயணித்தால், முன்பு ரூ.3,500-4,000 வரை கட்டணம் இருந்தது. ஆனால் இப்போது இந்த கட்டணத்தை 1900 முதல் 2000 வரை குறைத்துள்ளன. அதே சமயம், கொச்சி மற்றும் பெங்களூருவின் கட்டணத்தைப் பற்றி பேசினால், இந்த வழித்தடத்தின் கட்டணமும் 1100 முதல் 1300 வரை குறைந்துள்ளது. இந்த வழித்தடத்தில் மலிவான விமான கட்டண சேவையை Go-First, IndiGo மற்றும் Air Asia ஆகிய நிறுவனங்கள் வழங்குகின்றன.

மே 2020 இல் கொரோனா காலத்தில் உள்நாட்டு விமானக் கட்டணங்களின் விலையை மத்திய அரசாங்கம் நிர்ணயித்தது. கொரோனா காலத்திற்கு பிறகு கடந்த மாதம் முதல் விமானத்துறையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக உள்நாட்டு விமான நிறுவனங்களின் கட்டண வரம்பை நீக்கியதால், விமான டிக்கெட்களின் விலை குறைக்கப்பட்டு உள்ளது என இந்தியன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம், விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குகின்றன. விமான நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தை விரைவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: தொடர்ச்சியாக விமானத்தில் பயனிப்பவரா? - உஷார்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News