ஏழைகள் கூட ‘இந்த’ கார்களை வாங்கலாமாம்! மிஸ் பண்ணிடாதீங்க..
Cheapest Cars In India 2024: இந்தியாவில் ஏழைகள் கூட சில கார்களை வாங்கலாம, அப்படி அனைவரும் வாங்கக்கூடிய மிகக்குறைந்த விலையுடைய கார்கள் என்ன தெரியுமா?
Cheapest Cars In India 2024: 20 வருடங்களுக்கு முன்பு வரை, கார்கள் அனைத்து இல்லங்களிலும் இருக்குமா என்று கேட்டால், அதற்கு கண்ணை மூடிக்கொண்டு இல்லை என்று பதில் சொல்லாம். ஆனால், சமீப காலமாக, அனைத்து இல்லங்களிலும் கண்டிப்பாக, ஒரு டூ வீலர் இருக்கிறது. கொஞ்சம் அதிகமாக சம்பளம் வாங்குபவர் வீட்டில், கண்டிப்பாக ஒரு காரும் இருக்கிறது. ஆனால், இன்னும் கார் வாங்க முடியாத நிலையில் சிலர் இருக்கின்றனர். அப்படிப்பட்டவர்களும், சில விலை குறைவான கார்களை வாங்கலாம். அவை என்னென்ன தெரியுமா?
1.மாருதி ஆல்டோ 800:
இந்தியாவின் விலை குறைந்த கார்களுள் ஒன்று, மாருதி ஆல்டோ 800. இந்த காரின் விலை, தற்போது 3.54 லட்சமாக இருக்கிறது. இந்த காரில், ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டால் சுமார் 22 கிலோ மீட்டவர் வரை மைலேஜ் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதனை, நடுத்தர குடும்ப வர்க்கத்தினர் அதிகம் விரும்புவதாக கூறப்படுகிறது.
2.மாருதி ஏஸ்பிரெசோ:
மாருதி நிறுவனம், எஸ்யூவி காரின் டிசைன் போலவே இன்னொரு சிறிய ரக காரை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த கார், தற்போதுமார்கெட்டில் 4.86 லட்சம் வரை விற்பனையாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கார், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 25 கிலோ மீட்டர் வரி மைலேஜ் தரும் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | அகவிலைப்படியுடன் அதிகரிக்கும் பிற அலவன்சுகள்: பம்பர் ஊதிய ஏற்றம், ஊழியர்கள் ஹேப்பி
3.மாருதி ஆல்டோ:
மாருதி நிறுவனத்தின் இன்னொரு கார், கே 10 மாருதி. இதன் விலை, தற்போது 3.99 லட்சமாக இருக்கிறது. இந்த காரில் தற்போது சிஎஞி ஆப்ரேஷன்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 25 கி.மீ வரை மைலேஜ் தருவதாக கூறப்படுகிறது.
4.மாருதி செலிரியோ:
மாருதி நிறுவனத்தின் செலிரியோ கார், தற்போது மார்கெட்டில் ரூ.5.37 லட்சம் வரை விலைக்கு இருக்கிறது. இந்த காரில் சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் ஆப்ஷன்கள் இருக்கின்றன. இந்த கார், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் 26 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருமாம்.
5.டாடா டியாகோ:
டாடா நிறுவாம் டியொகா என்றா காரை சமீப காலமாக அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த காரின் சந்தை மதிப்பு, தற்போது 5.60 லட்சமாக இருக்கிறதாம். டியாகோ காரில், பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்கள், தற்போது உள்ளது. இந்த காரின் மைலேஜ் தற்போது, 19.43 முதல் 20 கிலோமீட்டர் வரை இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | நோ கிளைம் போனஸ் பற்றிய இந்த முக்கியத் தகவல்களை ஒருபோதும் மறக்க வேண்டாம்!
(பொறுப்பு துறப்பு: தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள இந்த குறிப்புகளை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக துறை சம்பந்தப்பட்டவர்களிடம் ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)