சேமிப்பு திட்டங்கள்: நிலையான வைப்புத்தொகை (Fixed deposits) மற்றும் பிற வைப்புத் திட்டங்களில் முறையான இடைவெளியில் பணத்தை போட்டால், உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும் மற்றும் சரியான திட்டத்தில் முதலீடு செய்தால் நுகர்வோர் நல்ல வருமானத்தை பெற முடியும். அத்தகைய ஒரு திட்டம் போஸ்ட் ஆஃபீஸ் கால வைப்புத் திட்டங்கள் ஆகும். அவை கிட்டத்தட்ட வங்கிகளின் எஃப்.டி.க்களைப் போலவே வட்டி விகிதங்கள் கிடைக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான (Small Savings Schemes) வட்டி வீதத்தைக் குறைக்கும் முடிவை மத்திய அரசாங்கம் வாபஸ் பெற்றது. இதனால் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாமல், முதலில் கிடைத்த வட்டி விகிதத்தை தான் வழங்குகிறது.


ALSO READ | வங்கிகள் அளிக்கும் பம்பர் சலுகை: வீட்டு சாமான்களை அட்டகாச விலையில் வாங்கலாம்


தபால் அலுவலக கால வைப்புத் திட்டங்கள் (Post Office Term Deposit Schemes) ஒரு வருடம் முதல் ஐந்து ஆண்டுகள் வரை முதலீடு திட்டங்களை உள்ளடக்கியது மற்றும் தபால் அலுவலக வைப்புக்கான திட்டத்தின் வட்டி ஏப்ரல் 1, 2021 அன்று திருத்தப்பட்டது. 1 முதல் 3 ஆண்டுகள் வைப்பு காலத்திற்கு 5.5% வட்டி வீதத்தையும், 5 வருடத்திற்கான முதலீடு திட்டத்தில் 6.7% வட்டி விகிதத்தை வழங்குகிறது.


தபால் அலுவலக கால வைப்புத் திட்டத்தின் வட்டி விவரம்: 


1 ஆண்டு: 5.5%


2 ஆண்டு: 5.5%


3 ஆண்டு: 5.5%


5 ஆண்டு: 6.7%


ALSO READ | Post Office திட்டங்களுக்கு புதிய விதி: 20 லட்சத்துக்கு மேலாக பணம் எடுக்க 2% TDS


எஸ்பிஐயின் (State Bank of India) சமீபத்திய எஃப்.டி திட்டத்தில் 7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை 2.9% வட்டியை வழங்கி வருகிறது. அதேபோல இந்த வங்கியின் பிற FD திட்டங்களில் வங்கியின் வட்டி விகிதங்கள் குறித்து கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. 


7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை - 2.9%


46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை - 3.9%


180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை - 4.4%


211 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவான நாட்கள் - 4.4%


1 வருடம் முதல் 2 வருடங்களுக்கும் குறைவான நாட்கள் - 5%


2 ஆண்டுகள் முதல் 3 வருடங்களுக்கும் குறைவான நாட்கள் - 5.1%


3 ஆண்டுகள் முதல் 5 வருடங்களுக்கும் குறைவான நாட்கள் - 5.3%


5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரை - 5.4%


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR