வங்கிகள் அளிக்கும் பம்பர் சலுகை: வீட்டு சாமான்களை அட்டகாச விலையில் வாங்கலாம்

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கவோ அல்லது பிற செலவுகளுக்கோ, பல வங்கிகள் குறைவான வட்டி விகிதத்தில் எளிய கடன்களை வழங்கி வருகின்றன.

Written by - ZEE Bureau | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 25, 2021, 02:03 PM IST
  • கொரோனா காலத்தில் மக்கள் பல சிக்கல்களை எதிர்கொண்டனர்.
  • SBI-யில் குறைந்த வட்டி விகிதத்தில் நீங்கள் ரூ .20 லட்சம் வரை கடன் பெற முடியும்.
  • யூனியன் வங்கி 5 ஆண்டுகளுக்கு ரூ .5 லட்சம் தனிநபர் கடனுக்கு 8.9 சதவீத வட்டி வசூலிக்கிறது.
வங்கிகள் அளிக்கும் பம்பர் சலுகை: வீட்டு சாமான்களை அட்டகாச விலையில் வாங்கலாம்

டெல்லி: கொரோனா காலத்தில் வருமானம் குறைந்ததால், மக்கள் பல சிக்கல்களை எதிர்கொண்டனர். இதன் காரணமாக, மக்களால் அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்க முடியவில்லை. இப்போது ஹோலி பண்டிகை நெருங்கிவிட்டது. ஹோலியில் உங்கள் வீட்டிற்கு பொருட்களை வாங்க விரும்பினால், குறைந்த வட்டி விகிதத்தில் எந்த வங்கி தனிப்பட்ட கடனை வழங்குகிறது என்பதை தெரிந்துகொள்வது மிக அவசியம். 

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

நீங்கள் SBI-ல் கடன் வாங்க விரும்பினால், 72089-33142 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுத்தால் போதும். இதற்குப் பிறகு, வங்கியில் இருந்து உங்களுக்கு அழைப்பு வரும். உங்களிடம் சில அடிப்படைக் கேள்விகள் கேட்கப்படும். நீங்கள் அளிக்கும் பதிலில் திருப்தி ஏற்பட்டவுடன், உங்கள் கடன் செயல்முறை தொடங்கப்படும். வாடிக்கையாளர்கள் கட்டணமில்லா எண் 1800-11-2211 என்ற எண்ணிலும் அழைத்து இதற்கான தகவல்களை தெரிந்து கொள்ளலாம். மேலும், எஸ்எம்எஸ் மூலமும் தனிநபர் கடன் பற்றிய தகவல்களை பெறலாம். எஸ்பிஐ தனிநபர் கடனின் வட்டி விகிதம் 9.60 சதவீதமாகும். இந்த வட்டி விகிதத்தில் நீங்கள் ரூ .20 லட்சம் வரை கடன் பெற முடியும். 

ALSO READ: EPFO latest news, வருமான வரி விலக்கு குறித்த முக்கிய முடிவு: உங்களை எப்படி பாதிக்கும்?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

பஞ்சாப் நேஷனல் வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank) நாட்டின் இரண்டாவது பெரிய அரசு வங்கியாகும். பஞ்சாப் நேஷனல் வங்கி குறைந்தபட்சம் ரூ .25,000 முதல் அதிகபட்சம் ரூ .15 லட்சம் வரை தனிநபர் கடன்களை வழங்கி வருகிறது. கடன் பெற விரும்பும் நபர்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியின் தனிப்பட்ட கடனுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும். பி.என்.பியின் தனிப்பட்ட கடன் 12 மாதங்கள் முதல் 60 மாதங்கள் வரை திருப்பிச் செலுத்தும் கால அளவைக் கொண்டுள்ளது. அதன் வட்டி விகிதம் 8.95 சதவீதம் ஆகும்.

யூனியன் பாங்க் ஆப் இந்தியா

யூனியன் பாங்க் ஆப் இந்தியா மிக மலிவான தனிநபர் கடன்களை வழங்குகிறது. குறைந்தபட்சம் ஐந்து லட்சம் ரூபாய் முதல் அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரையிலான தனிநபர் கடனை யுபிஐ (UBI) வழங்குகிறது. யூனியன் வங்கி 5 ஆண்டுகளுக்கு ரூ .5 லட்சம் தனிநபர் கடனுக்கு 8.9 சதவீத வட்டி வசூலிக்கிறது. கடன் வாங்க விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் ஆக இருக்க வேண்டும். தனிநபர் கடன்கள் திருப்பிச் செலுத்தும் காலம் 60 மாதங்கள் வரை அல்லது ஓய்வு பெறுவதற்கு ஒரு வருடம் வரை இருக்கலாம்.

ALSO READ: Gold Rates Today: அதிகரிக்கத் துவங்குகிறது தங்க விலை: இன்றைய தங்க விலை நிலவரம் இதோ

More Stories

Trending News