IRCTC Singapore -Malaysia Tour Package: விடுமுறை காலமான கோடை காலம் அதிக அளவில் சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் காலமாகும். குடும்பத்தினர், தங்கள் மனைவி குழந்தைகளுடன் சுற்றுலா செல்வதை தவிர, தேனிலவிற்காகவும் புதுமணத் தம்பதிகள் சுற்றுலா செல்கிறார்கள். நீங்கள் விடுமுறை காலமான மே மாதத்தில் வெளிநாட்டிற்குச் செல்ல திட்டமிட்டிருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். IRCTC பட்ஜெட் கட்டணத்தில் சிறப்பு விமானப் பயண பேக்கேஜை (IRCTC Air Tour Package) கொண்டு வந்துள்ளது. இதில் நீங்கள் இரண்டு அழகான நாடுகளுக்குச் செல்லலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் இருந்து சிஙக்ப்பூர் மலேஷியா பயணம்


IRCTC வழங்கும் சிறப்பு விமானப் பயணப் பேக்கேஜின் பெயர் ASIAN EXTRAVAGANZA SINGAPORE MALAYSIA EX CHENNAI (SMO29). விமான பயணம் அடங்கிய இந்த பேக்கேஜ், 5 இரவுகள் மற்றும் 6 பகல்களுக்கானது. இந்த சிறப்புத் பேக்கேஜில், சென்னையில் இருந்து சிங்கப்பூர் மலேஷியாவிற்கு இம்மாதம், அதாவது மே 24ஆம் தேதி சுற்றுலா செல்லலாம். இதில் சென்னையில் இருந்து கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூரில் இருந்து கோலாலம்பூர் வழியாக சென்னைக்கு பாடிக் ஏர் மலேசியா விமானம் மூலம் பயணம் மேற்கொள்ளலாம்.


சிங்கப்பூர்- மலேசியா பேக்கேஜ் விபரம்


IRCTC வழங்கும் இந்த பேக்கேஜில் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு ஆகியவை அடங்கும். IRCTC வழங்கும் சுற்றுலா பேக்கேக் மூலம், நீங்கள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிற்குச் செல்லலாம். அதில் நீங்கள் சிங்கப்பூரில் ஒரு ஹோட்டலில் 3 இரவுகள் மற்றும் மலேசியாவில் 2 இரவுகள் தங்கலாம். உணவிற்கான ஏற்பாட்டை பொறுத்த வரையில், இந்த தொகுப்பில் உங்களுக்கு காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு கிடைக்கும். அதில் உங்களுக்கு ஹோட்டலில் தினசரி காலை உணவு கிடைக்கும். இதனுடன், ஆங்கிலம் பேசும் ஒரு சுற்றுலா வழிகாட்டி, சுற்றுப்பயணம் முழுவதும் உங்களுடன் வருவார்.


மேலும் படிக்க | கேரளா டூர் செல்ல பிளானா... IRCTC வழங்கும் இந்த அசத்தல் பேக்கேஜை மிஸ் பண்ணாதீங்க!


சிங்கப்பூர்- மலேசியா பேக்கேஜ் கட்டண விபரம்


IRCTC வழங்கும் இந்த பேக்கேஜில் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிற்கு சுற்றுலா விசாவும் கிடைக்கும். மேலும், 59 வயது வரை உள்ளவர்களும் இந்த பேக்கேஜில் பயணக் காப்பீடும் கிடைக்கும். இந்த டூர் பேக்கேஜின் கட்டணத்தில் ஜிஎஸ்டியும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விமான டூர் பேக்கேஜின் கட்டணம், தனி நபராக தங்க சிங்கிள் ஷாரிங்கில் முன்பதிவு செய்தால் ஒரு நபருக்கு ரூ.1,52,500 கட்டணம் செலுத்த வேண்டும். அதேசமயம் இரட்டைப் பகிர்வு எனப்படும் double sharing கட்டணம் ரூ.1,28,000 மற்றும் triple sharing கட்டணம் ரூ.1,26,000 என்ற அளவில் இருக்கும். இது தவிர, 2 வயது முதல் 11 வயது வரை உள்ள குழந்தைக்கு தங்கும் வசதிக்கும் ரூ.1,14,500 மற்றும் 2 வயது முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கன தங்கும் வசதிக்கு ரூ.99,500 செலவிட வேண்டும். நீங்கள் இந்த விமானப் பயணப் பேக்கேஜை முன்பதிவு செய்ய நினைத்தால், ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று நீங்களே முன்பதிவு செய்யலாம்.


மேலும் படிக்க | PPF மற்றும் EPF -ல் ஒரே நேரத்தில் முதலீடு செய்யலாமா? விதிகள் என்ன சொல்கிறது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ