Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana Life Insurance Policy: மத்திய அரசால் வழங்கப்படும் தனிநபர் காப்பீட்டு திட்டம் தான் பிரதம மந்திரி ஜோதி பீமா யோஜனா.  இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஏழை எளிய நடுத்தர பிரிவில் உள்ள மக்கள் இன்னும் காப்பீடு ஏதும் எடுக்காமல் தான் இருக்கிறார்கள். இதற்கான காரணங்களை முக்கியமான ஒன்று, காப்பீடு குறித்து புதிய விழிப்புணர்வு இல்லாத நிலை. இதற்கான மற்றொரு காரணம், காப்பீடு எடுப்பதற்கான பிரீமியம் தொகை, அதிகமாக இருப்பது தான். இன்றைய காலகட்டத்தில் காப்பீடு என்பது அனைவருக்கும் மிக முக்கியமானது. எதிர்பாராத வகையில், கடுமையான நோய் காரணமாகவோ, விபத்து காரணமாகவோ, குடும்ப வருமானத்தின் ஆதாரமாக இருக்கும் நபர் இறந்து விட்டால், அந்தக் குடும்பத்தை கை தூக்கி விடும் முக்கிய பணிகள் செய்வது ஆயுள் காப்பீடு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா


ஏழை எளிய நடுத்தர பிரிவு மக்களின் நலனை கருத்தில் கொண்டு மிகக் குறைந்த பிரீமியம் தொகை கொண்ட காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்னும் அந்த காப்பீட்டு திட்டத்தில், சேரும் தனி நபர் ஒருவர், ஆண்டு பிரிமியமாக ரூபாய் 436 செலுத்தினால்  போதும். அவருக்கு இரண்டு லட்சம் மதிப்பிலான காப்பீடு கிடைக்கும். காப்பீடு எடுத்த நபர், எதிர்வாராத வகையில் பிரதிஷ்டவசமாக இறந்து போகும் பட்சத்தில், அவரது குடும்பத்திற்கு தொகை வழங்கப்படும்.


PMJJBY திட்டத்திற்கான பிரிமியம் தொகை


பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 31 ஆம் தேதி, வருடத்திற்கான பிரிமியம் கட்டணத்தை செலுத்த வேண்டும். ஆண்டு பிரீமியம் செலுத்துவதன் அடிப்படையில், ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல், மே மாதம் 31ஆம் தேதி வரை, இந்த ஆயுள் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பலனை பெறலாம். ஆண்டு பிரிமியம் தொகை, காப்பீடு எடுத்தவரின் வங்கி சேமிப்பு கணக்கிலிருந்து, ஆட்டோ டெபிட் மூலம் கழிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் மே மாத முப்பத்தி ஒன்றாம் தேதி அன்று செலுத்தப்படும். இந்தக் காப்பீட்டை ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்க வேண்டும்.


மேலும் படிக்க | உங்கள் PF கணக்கில் இருந்து ஒரே நேரத்தில் எவ்வளவு பணம் வரை எடுக்க முடியும்?


PMJJBY திட்டத்தில் சேருவதற்கான வயது வரம்பு


மத்திய அரசின் இந்த ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் இணைய, வயதுவரம்பு 18 குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆண்டுகள். அதிகபட்ச வயது வரம்பு 55 ஆண்டுகள். அதாவது 18 வயது முதல் 55 வயதுக்குட்பட்ட நபர்கள் அனைவரும் இந்தத் திட்டத்தில் இணையலாம். திட்டத்தில் சேருபவர்கள் கண்டிப்பாக வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும். காப்பீடுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு மூடப்பட்டாலோ, பிரீமியம் வசூலிக்கும் தேதியான மே மாதம் 25 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையினான காலகட்டத்தில், கணக்கில் போதுமான பணம் இல்லை என்றாலும் காப்பீடு காலாவதி ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. திட்டத்தில் சேர உங்கள் வங்கி கண்ணால் கோடு ஆதார் எண்ணெய் கண்டிப்பாக இணைத்து இருக்க வேண்டும்.


மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்தில் சேர்வதற்கான நிபந்தனை


பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா காப்பீட்டு திட்டத்தில் சேருவதற்கு மருத்துவ பரிசோதனை எதுவும் தேவையில்லை. எனினும் குறிப்பிட்ட நோயால் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் உத்தரவாத கடிதத்தை நீங்கள் அளிக்க வேண்டும்.


காப்பீட்டு திட்டத்தில் சேர்வதற்கான காலம்


PMJJBY திட்டத்தில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பதிவு செய்தால்,  ஆண்டு பிரீமியமாக ரூ.436 செலுத்த வேண்டும். அதே நேரத்தில் செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பதிவு செய்தால் ரூ.342 மட்டுமே பிரீமியமாக செலுத்த வேண்டும். அதெ எபோன்று, டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பதிவு செய்தால் ரூ.228 பிரீமியமாக செலுத்த வேண்டும். இறுதியாக, நீங்கள் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பதிவு செய்தால், பிரீமியம் தொகை ரூ.114 ஆக இருக்கும்.


மேலும் படிக்க | உங்கள் சிறுதாெழிலில் இருந்து அதிக வருமானம் பார்க்கலாம்! ‘இதை’ மட்டும் செய்யுங்கள்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ