உங்கள் சிறுதாெழிலில் இருந்து அதிக வருமானம் பார்க்கலாம்! ‘இதை’ மட்டும் செய்யுங்கள்..

Small Scale Business Tips Tamil : சிறு தொழில்கள், நமது நாட்டில் பெருகி விட்ட நிலையில், இதிலிருந்து அதிக வருமானம் பார்ப்பது எப்படி என்று இங்கு பார்க்கலாம், வாங்க.   

Written by - Yuvashree | Last Updated : Mar 18, 2024, 06:05 PM IST
  • சிறு தொழிலில் வருமானத்தை பெருக்குவது எப்படி?
  • இதற்கான வழிமுறைகள் என்னென்ன?
  • முழு டிப்ஸ், இதோ!
உங்கள் சிறுதாெழிலில் இருந்து அதிக வருமானம் பார்க்கலாம்! ‘இதை’ மட்டும் செய்யுங்கள்.. title=

Small Scale Business Tips Tamil : 

கடந்த சில ஆண்டுகளாகவே, சுய தொழில் செய்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம், இந்தியாவில் இருந்து தாெழில் முனைவோர் பலர் உருவாக ஆரம்பித்தனர். இதனால், வேலை வாய்ப்புகளும் பெருகி, ஒவ்வொருவரின் பொருளாதாரமும் வாழ்வாதாரமும்  உயர ஆரம்பித்துள்ளது. வேலைக்கு செல்பவர்கள் கூட, தனக்கு கிடைக்கும் நேரங்களில் சிறு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். முறையாக தங்களின் தொழிலை பெருக்குவது குறித்து திட்டம் தீட்டிய பிறகு முழு நேரமாக தங்களின் தொழிலில் இறங்க ஆரம்பித்து விடுகின்றனர். இதற்கு காரணம், பலருக்கு தற்போது ஒருவருக்கு கீழ் வேலை செய்யவோ, இன்னொருவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லவோ விருப்பம் இல்லை. எனவே, அவரவர் கைகளில் இருக்கும் சிறு சேமிப்புகளை வைத்து தொழில் தொடங்குகின்றனர். ஆனால், இதிலும் ஒரு சிறிய சிக்கல் இருக்கிறது. ஒரு சிலருக்கு சிறு தொழில்கள் பல நேரங்களில் எதிர்பார்த்த அளவு லாபத்தை தருவதில்லை. இதற்கு காரணம் எதுவாக  வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், தற்போது வரும் லாபத்தை இன்னும் பெருக்குவதற்கு சில ஈசியான வழிமுறைகள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?

1. வழக்கமான வாடிக்கையாளர்களை ஊக்குவிக்க வேண்டும்:

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்பது பொருட்களுக்கு வேண்டுமானால் உகந்ததாக இருக்கலாமே அன்றி, தொழிலுக்கு இருக்க கூடாது. பல தொழில்கள், புதிய வாடிக்கையாளர்கள் வந்தவுடன் பழைய வாடிக்கையாளர்களை மறந்து விடுகின்றன. இதனாலேயே சில நிறுவனங்கள் திவால் ஆன கதை எல்லாம் இருக்கின்றன. வணிகம் என்பது ஒருவர் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையை அடித்தளமாக வைத்து கட்டப்படுவதாகும். அதனால், உங்களிடம் இருக்கும் வழக்கமான வாடிக்கையாளர்களை எப்போதும் போகாமல் உங்களுடைய வாடிக்கையாளர்களாக வைத்திருக்க வழிவகை செய்யலாம். 

மேலும் படிக்க | SBI அம்ரித கலசம் திட்டம்... இன்னும் 13 நாட்களே உள்ளன... மிஸ் பண்ணாதீங்க!

2.தள்ளுபடி-கூப்பன்கள்:

‘பணத்தை செலவு செய்துதான் பணத்தை சம்பாதிக்க வேண்டும்’ எனக்கூறுவர். இது மிகவும் உண்மை என வியாபாரம் செய்பவர்கள் கூறுகின்றனர். அதனால் பண்டிகை கால சமயங்கள், ஸ்பெஷலான நாட்களில் ஆஃப்ர், கூப்பன்கள் கொடுக்கலாம். இதனால், உங்கள் விற்பனை அதிகமாவதோடு மட்டுமன்றி வாடிக்கையாளர்களும் கூடி, வருமானமும் இரட்டிப்பாகும். 

3.நிபுணத்துவத்தை பிரபலப்படுத்த வேண்டும்:

நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்களோ, அந்த தொழிலுக்கு 100 % உண்மையாக இருப்பீர்கள் என்றும் அதில் நிபுணராக இருப்பீர்கள் என்றும் உங்களுக்கு தெரியும். ஆனால் அது பிறருக்கு எப்படி தெரியும்? எனவே, உங்களது நிபுணத்துவத்தை பிறருக்கு எடுத்துக்காட்டும் வகையிலான விஷயங்களை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். அதற்கு, நீங்கள் கொடுக்கும் விளம்பரம் மிகவும் முக்கியம். இதற்காக சில விளம்பர நிறுவனங்களும் இயங்குகின்றன. இவர்களுடன் தொடர்பு கொண்டு, உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில் உங்கள் சிறு தொழிலை பிரபலப்படுத்தலாம். 

4.மின் வணிகம்:

ஒரு சில தொழில் நிறுவனங்கள், தங்களுக்கான இணையதளத்தை தொடங்குவதோ, சமூக வலைதள கணக்குகளை தொடங்குவதோ இல்லை. நாட்டில் உள்ள 50 சதவிகிதத்திற்கும் அதிகமான தொழில் நிறுவனங்களுக்கு தனியாக இணையதள பக்கமே இல்லை என ஒரு தரவு தெரிவிக்கிறது. எனவே, உங்கள் தொழில் நிறுவனத்திற்கு முதலில் ஒரு இணையதள பக்கத்தை உருவாக்க வேண்டும். இ-காமர்ஸ் தளத்தை பயன்படுத்தி, உங்கள் வருமானத்தை பெருக்க வேண்டும். 

(பொறுப்பு துறப்பு: இந்த செய்தி தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள இந்த குறிப்புகளை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக துறை சம்பந்தப்பட்டவர்களிடம் ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஜாக்பாட்! மாதம் 5000 பென்ஷன் கிடைக்கும் சூப்பர் அரசு திட்டம், முழு விவரம் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News