வாடிக்கையாளர்களை ஈர்க்க பெரும்பாலான வங்கிகள் FD முதலீடுகளுக்கு அதிக வட்டியை வழங்குகின்றன. அதிலும், மூத்த குடிமக்களுக்கு, வழக்கமான வட்டியை விட கூடுதலாக 0.5% வட்டி கிடைக்கின்றன. வங்கி முதலீடுகளுக்கு நல்ல வட்டி கிடைக்கும் என்பதோடு, பாதுகாப்பான முதலீடு என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களும் (NBFC), வாடிக்கையார்களை ஈர்க்க அதிக வட்டி வழங்குகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எஃப்டி என்னும் நிலையான வைப்பு திட்டம் மூலம் அதிக வருமானத்தைப் பெறுவதற்கு நீங்கள் கொஞ்சம் ரிஸ்க் எடுக்கலாம் என்றால், கார்ப்பரேட் அல்லது என்பிஎஃப்சி எஃப்டி முதலீடு (Investment Tips) ஒரு சிறந்த வழி எனலாம். இதில் உள்ள நன்மை என்னவென்றால், வங்கிகளை விட சுமார் 2 சதவீதம் கூடுதல் வருமானம் கிடைக்கும். இருப்பினும், இவை வங்கி FD முதலீடுகளை விட குறைவான பாதுகாப்பு கொண்டதாகவே கருதப்படுகிறது.


பஜாஜ் ஃபின்சர்வ் (Bajaj Finserv)


பஜாஜ் ஃபின்சர்வ் தனது வாடிக்கையாளர்களுக்கு 18, 22, 33 மற்றும் 44 மாத காலத்திற்கான FD முதலீட்டு திட்டங்களை வழங்குகிறது. இந்த NBFC நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு FD முதலீடுகளில் 7.40 சதவீதம் முதல் 8.25 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. பஜாஜ் ஃபின்சர்வ் 18 மாத FD முதலீடுகளுக்கு 7.8 சதவீதம், 22 மாத FD முதலீடுகளுக்கு 7.9 சதவீதம், 33 மாத FD முதலீடுகளுக்கு 8.10 சதவீதம் மற்றும் 33 மாத FD முதலீடுகளுக்கு 8.25 சதவீதம் வட்டி விகிதங்களை வழங்குகிறது.


முத்தூட் மூலதனம் (Muthoot Capital)


7.45 சதவீதம் முதல் 8.5 சதவீதம் வரையிலான வட்டியை முத்தூட் கேபிடல் வழங்குகிறது. NBFC நிறுவனம் ஒரு வருட காலத்திற்கான FD முதலீடுகளுக்கு 7.45 சதவிகிதம், 15 மாத காலத்திற்கான FD முதலீடுகளுக்கு 8.5 சதவிகிதம், இரண்டு வருட காலத்திற்கான FD முதலீடுகளுக்கு 8 சதவிகிதம், மூன்று வருட காலத்திற்கான FD முதலீடுகளுக்கு 8.5 சதவிகிதம் மற்றும் ஐந்தாண்டு காலத்திற்கான FD முதலீடுகளுக்கு 7.5 சதவிகிதம் வட்டி வழங்குகிறது.


மேலும் படிக்க | Post Office FD: ரூ.5 லட்சத்தை 10 லட்சமாக்கும் அஞ்சலக வைப்பு திட்டம்..!!


ஸ்ரீராம் ஃபைனான்ஸ் (Shriram Finance)


ஸ்ரீராம் ஃபைனான்ஸ் FDயில் 7.85 சதவீதம் முதல் 8.8 சதவீதம் வரை வழங்குகிறது. ஒரு வருட காலத்திற்கான FD முதலீடுகளுக்கு 7.85 சதவிகிதம், இரண்டு வருட காலத்திற்கான FD முதலீடுகளுக்கு 8.15 சதவிகிதம், மூன்று வருட காலத்திற்கான FD முதலீடுகளுக்கு 8.70 சதவிகிதம் மற்றும் ஐந்தாண்டு காலத்திற்கான FD முதலீடுகளுக்கு 8.80 சதவிகிதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.


மஹிந்திரா ஃபைனான்ஸ் (Mahindra Finance)


மஹிந்திரா ஃபைனான்ஸ் நிறுவனத்தில் FD முதலீடுகளுக்கு 7.75 சதவீதம் முதல் 8.05 சதவீதம் வரை வட்டி கிடைக்கும். NBFC நிறுவனமான இந்த நிதி நிறுவனம் 15 மாத காலத்திற்கான FD முதலீடுகளுக்கு 7.75 சதவீத வட்டியையும், 30 மாத காலத்திற்கான FD முதலீடுகளுக்கு 7.9 சதவீத வட்டியையும், 42 மாத காலத்திற்கான FD முதலீடுகளுக்கு 8.05 சதவீத வட்டியையும் வழங்குகிறது.


மேலும் படிக்க | SCSS Vs மூத்த குடிமக்களுக்கான வங்கி FD... வட்டி வருமானத்தை அள்ளிக் கொடுப்பது எது..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ