SCSS Vs மூத்த குடிமக்களுக்கான வங்கி FD... வட்டி வருமானத்தை அள்ளிக் கொடுப்பது எது..!!
Senior Citizen Saving Scheme Vs Bank FD: பெரும்பாலான வங்கிகள் மூத்த குடிமக்களான FD முதலீடுகளுக்கு மீது சற்று அதிக வட்டியை வழங்குகின்றன. மத்திய அரசும், வட்டி வருமானத்தை நம்பி இருக்கும் மூத்த குடிமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை (SCSS) கொண்டு வந்துள்ளது.
Senior Citizen Saving Scheme Vs Bank FD: பெரும்பாலான வங்கிகள் மற்ற முதலீட்டு திட்டங்களுடன் ஒப்பிடும்போது மூத்த குடிமக்களான FD முதலீடுகளுக்கு மீது சற்று அதிக வட்டியை வழங்குகின்றன. மத்திய அரசும், வட்டி வருமானத்தை நம்பி இருக்கும் மூத்த குடிமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை (SCSS) கொண்டு வந்துள்ளது. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) என்பது மத்திய அரசின் திட்டமாகும். வங்கி ஃபிக்ஸட் டெபாஸிட் திட்டம் என்பது அனைத்து பொது, தனியார் மற்றும் சிறு சேமிப்பு வங்கிகளாலும் வழங்கப்படுகிறது. லாக் இன் பீரியட் உட்பட, பேங்க் எஃப்டி மற்றும் எஸ்சிஎஸ்எஸ் திட்டங்கள் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. இரண்டிற்கும் இடையே சில வேறுபாடுகளும் உள்ளன. ஒவ்வொரு திட்டத்திற்கும் அதற்கென நன்மைகள் உள்ளன.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மற்றும் வங்கி எஃப்டி
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) மற்றும் மூத்த குடிமக்கள் நிலையான வைப்புத்தொகை (Senior Citizen FD) ஆகியவற்றில், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவரும் முதலீடு செய்யலாம். மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் சிறந்த வருமானத்தைப் பெறும் நோக்கில் மொத்தமாக பணத்தை முதலீடு செய்கிறார்கள். FD இல் செய்வது போல. மூத்த குடிமக்கள் FD உடன் ஒப்பிடும்போது இந்தத் திட்டம் (Investment Tips) அதிக வருமானத்தை அளிக்கிறது.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் பலன்கள்
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. இதில் உங்கள் பணம் நிச்சயம் பாதுகாப்பாக இருக்கும். முதலீட்டாளர்கள் வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு 80C இன் கீழ் ரூ. 1.5 லட்சம் வரை வரிவிலக்கு பெறுகிறார்கள். இந்த முதலீட்டு திட்டத்தில் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். அடுத்த மூன்று வருடங்களுக்கு நீட்டிக்கலாம். SCSS கணக்கைத் திறப்பது மிகவும் எளிதானதும் கூட. நாடு முழுவதும் உள்ள எந்த ஒரு வங்கி கிளை அல்லது தபால் அலுவலகத்திற்கு சென்று கணக்கைத் தொடங்கலாம். வாடிக்கையாளர்கள், தேவைப்பட்டால் தங்கள் SCSS கணக்கை நாடு முழுவதும் உள்ள எந்த கிளைக்கும் மாற்றலாம். இந்தத் திட்டத்தின் கீழ் நீங்கள் குறைந்தபட்சம் ரூ.1,000 கூட முதலீடு செய்யலாம். மேலும், ரூ.1,000 இன் மடங்குகளில் தொகையை அதிகரிக்கலாம். ஒரு நிதியாண்டில், அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
மேலும் படிக்க | Post Office MIS: மாதம் ரூ.9,250 வருமானம் கொடுக்கும் அசத்தலான அஞ்சலக திட்டம்!
மூத்த குடிமக்கள் வங்கி FD
சாதாரண FD திட்டங்களுடன் ஒப்பிடும்போது, மூத்த குடிமக்களுக்கு. சாதாரண வாடிக்கையாளர்களை விட கூடுதலாக, 0.5% அல்லது 0.75% என்ற அளவில் சிறப்பு வட்டி வழங்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு மாதமும், காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் வட்டிப் பணத்தைப் பெறலாம். சில பிக்ஸட் டெபாசிட்களில் வரிச் சலுகைகளும் கிடைக்கும். எனினும், அதன் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமாகும். பல சிறு நிதி வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு 9.50 சதவீத வட்டியை வழங்குகின்றன.
இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்ன?
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் மூலம் ஆண்டுதோறும் 8.2 சதவீத வட்டியை பெறலாம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் 80C இன் கீழ் வரிச்சலுகை கிடைக்கும். எனினும், நீங்கள் ஐந்து வருடங்களுக்கும் குறைவான காலத்திற்கு FD முதலீடு செய்தால், உங்களுக்கு எந்த வரிச் சலுகையும் கிடைக்காது. இரண்டிற்கும் இடையேயான இரண்டாவது வித்தியாசம், SCSS திட்டத்தின் கீழ் அதிகபட்ச முதலீட்டு வரம்பு உள்ளது. அதேசமயம் FD திட்டங்களில் அத்தகைய வரம்பு இல்லை. இது தவிர, FD திட்டங்கள் பல வகையான விருப்பங்களுடன் வருகிறது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு முதலீட்டு விருப்பங்களில், முதலீட்டாளரின் நிதி இலக்குகள், தேவை மற்றும் அவரிடும் இருக்கும் நிதியின் அளவைப் பொறுத்த பொருத்தமான முதலீட்டை தேர்ந்தெடுக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ