LIC ஜீவன் ஆனந்த் பாலிசி... தினம் ரூ.45 சேமித்தாலே போதும்... ரூ.25 லட்சம் கையில் இருக்கும்..!!

LIC Jeevan Anand Policy: எல்ஐசியின் ஜீவன் ஆனந்த் பாலிசியில் ஒரு நாளைக்கு ரூ.45 சேமிப்பதன் மூலம் ரூ.25 லட்சத்தை பெறலாம். இது தவிர, வேறு பல நன்மைகளும் இந்த எல்ஐசி திட்டத்தின் மூலம் கிடைக்கின்றன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 30, 2024, 12:33 PM IST
  • எல்ஐசி ஜீவன் ஆனந்த் பாலிசியில் தினம் ரூ.45 முதலீடு செய்து ரூ.25 லட்சம் பெறும் வழிமுறை.
  • போனஸுடன் கிடைக்கும் தொகை விபரம்.
  • சிறு சேமிப்பில் பெரிய அளவில் லாபம்.
LIC ஜீவன் ஆனந்த் பாலிசி... தினம் ரூ.45 சேமித்தாலே போதும்... ரூ.25 லட்சம் கையில் இருக்கும்..!! title=

LIC Jeevan Anand Policy: இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாக திகழும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) சேமிப்புத் திட்டங்கள் பாதுகாப்பு மற்றும் வருமானம் ஆகிய இரண்டு அம்சங்களையும் கொண்டுள்ளதால் மிகவும் பிரபலமான காப்பீட்டு திட்டங்களாக உள்ளன. இதில், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்களுக்கு என வயது அடிப்படையில் பாலிசிகள் உள்ளன. இவற்றில் பலவற்றில் சிறிய தொகையை முதலீடு செய்தாலும் பெரிய அளவில் நிதியை சேமிக்கலாம். அத்தகைய திட்டங்களில் ஒன்று எல்ஐசியின் ஜீவன் ஆனந்த் பாலிசி (LIC Jeevan Anand). இதில் ஒரு நாளைக்கு ரூ.45 சேமிப்பதன் மூலம் ரூ.25 லட்சத்தை பெறலாம். இது தவிர, வேறு பல நன்மைகளும் இந்த எல்ஐசி திட்டத்தின் மூலம் கிடைக்கின்றன.

சிறு சேமிப்பில் பெரிய அளவில் லாபம்

குறைந்த பிரீமியத்தில், பெரிய அளவில் நிதியை சேமிக்க விரும்பினால், ஜீவன் ஆனந்த் பாலிசி  ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். ஒரு வகையில் ஒரு டேர்ம் பாலிசி போன்ற திட்டம் இது. உங்கள் பாலிசி நடைமுறையில் இருக்கும் வரை நீங்கள் பிரீமியத்தை செலுத்தலாம். இந்தத் திட்டத்தில், பாலிசிதாரர் ஒன்றல்ல, பல முதிர்வுப் பலன்களைப் பெறுகிறார். எல்ஐசியின் இந்தத் திட்டத்தில், குறைந்தபட்சத் காப்பீட்டு தொகை ரூ. 1 லட்சம். அதேசமயம் அதிகபட்ச வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

ரூ.45 முதலீடு செய்து ரூ.25 லட்சம் பெறும் வழிமுறை

எல்ஐசி ஜீவன் ஆனந்த் பாலிசியில், ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.1358 டெபாசிட் செய்வதன் மூலம் ரூ.25 லட்சத்தைப் பெறலாம். அதாவது, தினமும் ரூ.45 என்ற அளவில் மட்டுமே சேமிக்க வேண்டும். இருப்பினும், எல்ஐசியின் இந்த பாலிசி நீண்ட கால முதலீட்டு திட்டமாகவே (Investment Tips) பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் பாலிசி காலம் 15 முதல் 35 ஆண்டுகள். அதாவது, இந்த பாலிசியின் கீழ் தினமும் ரூ.45 சேமித்து 35 வருடங்கள் முதலீடு செய்தால், இந்தத் திட்டத்தின் முதிர்வுக்குப் பிறகு, உங்களுக்கு ரூ.25 லட்சம் கிடைக்கும். ஆண்டு ஒன்றுக்கு நீங்கள் சேமித்த தொகையைப் பார்த்தால். அது சுமார் 16,300 ரூபாய் இருக்கும்.

போனஸுடன் கிடைக்கும் தொகை விபரம்

ஜீவன் ஆனந்த் எல்ஐசி பாலிசியில் 35 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.16,300 முதலீடு செய்தால், மொத்த முதலீட்டு தொகை ரூ.5,70,500 ஆக இருக்கும். பாலிசி காலத்திற்கு ஏற்றபடி, அடிப்படை காப்பீட்டுத் தொகை ரூ. 5 லட்சமாக இருக்கும், முதிர்வு காலத்திற்குப் பிறகு உங்களுக்கு ரூ. 8.60 லட்சம் ரிவைசரி போனஸ் மற்றும் ரூ. 11.50 லட்சம் இறுதி போனஸ் வழங்கப்படும். எல்ஐசியின் ஜீவன் ஆனந்த் பாலிசியில் போனஸ் இரண்டு முறை வழங்கப்படுகிறது. ஆனால் இதற்கு உங்கள் பாலிசி 15 வருடங்களாக இருக்க வேண்டும்.

மேலும் படிக்க | வருகிறது மலிவான ஏசி, ஃப்ரிட்ஜ், டிவி, வாஷிங் மெஷின்.. முகேஷ் அம்பானியின் புதிய பிஸ்னஸ்!

ஜீவன் ஆனந்த் திட்டத்தில் கிடைக்கும் பிற நன்மைகள்

ஜீவன் ஆனந்த் பாலிசியை எடுக்கும் பாலிசிதாரருக்கு எல்ஐசி திட்டத்தின் கீழ் எந்த வரி விலக்கின் பலனும் கிடைக்காது. ஆனால் இதில் நீங்கள் நான்கு வகையான ரைடர்களைப் பெறுவீர்கள். விபத்து மரணம் மற்றும் ஊனமுற்றது தொடர்பான ரைடர், விபத்து பலன் ரைடர், புதிய டேர்ம் இன்சூரன்ஸ் ரைடர் மற்றும் புதிய கிரிட்டிகல் பெனிபிட் ரைடர் ஆகியவை இதில் அடங்கும். இறப்பு பலன் பற்றி குறிப்பிடுகையில், பாலிசிதாரர் ஏதேனும் காரணத்தால் இறந்தால், நாமினி பாலிசியின் 125 சதவீத இறப்பு பலனைப் பெறுவார்.

மேலும் படிக்க | உணவகத்தில் அதிகம் சாப்பிட்டாலும் குறைவாக பில் கட்டலாம்! ‘இதை’ செய்து பாருங்கள்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News