புதுடெல்லி: மக்கள் நலனுக்காக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் மூலம், மக்கள் நலனுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதே நேரத்தில், இந்தத் திட்டங்கள் மூலம் மக்கள் சேமிக்கவும் முதலீடு செய்யவும் முடியும். அத்தகைய திட்டங்களில் ஒன்று பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம், மக்கள், எதிர்கால நலன்களுக்காக பணத்தை சேமிப்பதுடன் வரி விலக்கின் பலனையும் பெறலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறந்த முதலீட்டு திட்டமான இந்தத் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்பவர்கள், ஒரு விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும், இல்லையெனில் அவர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதை பற்றி தெரிந்து கொள்வோம்..


ppf கணக்கு
 
PPF திட்டம் ஒரு நீண்ட கால திட்டமாகும். 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் திட்டத்தில் முதிர்வுப் பலன் கிடைக்கும்.இந்தக் கணக்கில், மக்கள் ஒவ்வொரு ஆண்டும் பணத்தை முதலீடு செய்ய வேண்டும். தற்போது, ​​பிபிஎஃப் கணக்கில் செய்யப்படும் முதலீட்டுக்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. ஒரு நிதியாண்டிலும் இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச பணத்தை முதலீடு செய்யவில்லை என்றால், அது கணக்கு வைத்திருப்பவருக்கு சிக்கல்களைச் சந்திக்க நேரிடலாம். மேலும், PPF கணக்கு செயலற்றதாகிவிடும்.


பொது வருங்கால வைப்பு நிதி
உண்மையில், PPF திட்டத்தில் முதலீடு செய்யும் நபர்கள், ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் முதலீடு செய்யலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதேபோல, குறைந்தபட்ச முதலீடு ஒரு நிதியாண்டில் 500 ரூபாய் என்று வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


அதே நேரத்தில், ஐடிஆர் தாக்கல் செய்யும் போது, ​​பழைய வரி முறையின் கீழ் வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் இந்தத் திட்டத்தின் மூலம் ரூ. 1.5 லட்சம் வரையிலான வரிச் சலுகையைப் பெறலாம்.


மேலும் படிக்க | இனி செப்பல் வாங்கும் போது இந்த விஷயங்களை பார்த்து வாங்குங்க!


பிபிஎஃப் கணக்கு
ஒரு நபர் ஒரு நிதியாண்டில் பிபிஎஃப் கணக்கில் ரூ 500 கூட முதலீடு செய்யவில்லை என்றால், நஷ்டத்தை சந்திக்க நேரிடும், ஏனெனில் குறைந்தபட்ச மூதலீடு செய்யதாக கணக்கு செயலற்றதாகிவிடும். அந்த நிலையில், பிபிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்திற்கான வட்டியும் பாதிக்கப்படுகிறது.


அதுமட்டுமல்ல, செயலிழந்த கணக்கை மீண்டும் தொடங்குவதற்கும் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். எனவே, இதுபோன்ற சூழ்நிலையில், மக்கள் ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகையை பிபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும்.


பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) நீண்ட கால முதலீட்டிற்கு நல்ல முதலீடாகக் கருதப்படுகிறது. இதில் நல்ல வட்டி விகிதத்துடன் வரி விலக்கும் கிடைக்கும். முதிர்வு காலம் முடிவதற்குள் அதை மூடும் வசதியும் சில சூழ்நிலைகளில் உள்ளது. 


பிபிஎஃப் கணக்கை மூடுவது எப்படி?


பிபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர், கணக்கு முதிர்வு அடையும் காலத்திற்கு முன் பணத்தை எடுக்க விரும்பினால், அவர் அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து, PPF கணக்கு வைத்திருக்கும் தபால் அலுவலகம் அல்லது வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். பிபிஎஃப் பாஸ்புக்கின் நகல் மற்றும் அசல் பாஸ்புக் ஆகியவையும் தேவை.


பிபிஎஃப் கணக்கு வைத்திருப்பவரின் மரணம் காரணமாக PPF கணக்கு மூடப்பட்டிருந்தால், அந்தக் கணக்கு மூடப்பட்ட மாதத்தின் இறுதி வரை வட்டி கிடைக்கும். அதற்கு பிறகு வட்டி கிடைக்காது என்பதை அவரது வாரிசுதாரர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். 


மேலும் படிக்க | உங்கள் வங்கி கணக்கில் குறைந்தபட்சம் எவ்வளவு தொகை வைத்திருக்க வேண்டும்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ