கொரோனா தாக்குதலுக்கு மத்தியில், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முதலுக்கான வட்டி கட்ட தேவையில்லை என SBI வங்கி அறிவித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வணிகங்கள் மற்றும் தனிநபர்கள் மீது கொரோனா வைரஸ் பாதிப்பைத் தணிக்கும் முயற்சியில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உட்பட மூன்று வணிக கடன் வழங்குநர்கள், தங்களிடம் கடன் வாங்கியவர்களுக்கு கால கடன் தவணைகளில் மூன்று மாத கால அவகாசத்தை வழங்கியுள்ளனர்.


நாட்டின் மிகப் பெரிய கடன் வழங்குநரான SBI, சமமான மாதாந்திர தவணைகளை (EMI) தள்ளிவைப்பதற்கும், மார்ச் 1 முதல் மே 31 வரை வரவிருக்கும் கால கடனுக்கான வட்டி தள்ளிவைப்பதற்கும், திருப்பிச் செலுத்தும் காலத்தை மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.


ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான மூலதன வசதிகளுக்கான வட்டி மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக பொதுத் துறை வங்கிகளான பாரத ஸ்டேட் வங்கி (SBI), கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, ஐடிபிஐ, பாங்க் ஆஃப் பரோடா, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, ஆந்திரா வங்கி, யூகோ வங்கி உள்ளிட்டவை தங்களது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


அதன்படி வாடிக்கையாளா்களின் மாா்ச் 1 முதல் மே மாதம் 31-ஆம் தேதி வரை மாதாந்திர தவணைகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. எனினும், கடன் பெற்றவா்கள் இந்த மூன்று மாதங்களுக்கும் கடன் தவணை செலுத்த விரும்பினால், அதற்கும் வாய்ப்பு அளிக்கப்படுவதாகவும் வங்கிகள் அறிவித்துள்ளது. இது தொடா்பான முழு விவரங்களுக்கு வாடிக்கையாளர்கள் வங்கிக் கிளைகளை அணுகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


எனினும், தனியாா் வங்கிகள் இந்த மூன்று மாத EMI சலுகை தொடா்பாக எந்த அதிகாரப்பூா்வ தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடதக்கது.