Small Savings Schemes: நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை (DEA) முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. பல்வேறு தேசிய சிறுசேமிப்பு திட்டங்களின் கீழ், தபால் நிலையங்கள் மூலம் ஒழுங்கற்ற முறையில் திறக்கப்பட்ட கணக்குகளை முறைப்படுத்துவதற்கான வழக்குகளை செயலாக்குவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதனால் என்ன மாற்றங்கள் ஏற்படும்? ஏற்கனவே கணக்குகளை வைத்திருப்பவர்கள் எதை கவனிக்க வேண்டும்? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

DEA, ஆகஸ்ட் 21 அன்று ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. இதில் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. இதில் பின்வரும் கணக்குகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது:


- ஒழுங்கற்ற NSS கணக்குகள்
- சிறார் (மைனர்) பெயரில் திறக்கப்பட்ட PPF கணக்குகள்
- ஒன்றுக்கு மேற்பட்ட பிபிஃப் கணக்குகள் (PPF Accounts)
- NRI மூலம் PPF கணக்கு நீட்டிக்கப்படுவது
-  சிறார் பெயரில் தொடங்கப்பட்ட சிறு சேமிப்பு திட்ட கணக்குகள் (பிபிஎஃப் மற்றும் எஸ்எஸ்ஏ தவிர) 
- பாதுகாவலர் (கார்டியன்) தவிர தாத்தா பாட்டி மூலம் திறக்கப்பட்ட சுகன்யா சம்ரித்தி கணக்கை (SSA) முறைப்படுத்துதல்.


Sukanya Samriddhi Accounts: இரண்டுக்கு மேற்பட்ட  SSY கணக்குகள்


ஒரு பெண் குழந்தையின் பெயரில் இரண்டுக்கும் மேற்பட்ட SSY கணக்குகள் மற்றும் தாத்தா பாட்டியின் பாதுகாப்பில் தொடங்கப்பட்ட கணக்குகளுக்கான வழிகாட்டுதல்களையும் DEA வழங்கியுள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் என்ன நடக்கும்?


- கார்டியன்ஷிப்: தாத்தா பாட்டி (தாத்தா பாட்டி சட்டப்பூர்வ பாதுகாவலர்களாக இல்லாத பட்சத்தில்) கார்டியனாக இருந்து, அவர்களின் கீழ் திறக்கப்பட்ட கணக்குகளின் விஷயத்தில், பாதுகாவலர் சட்டத்தின் கீழ் உரிமையுள்ள ஒருவருக்கு, அதாவது இயற்கையான பாதுகாவலர் (உயிருள்ள பெற்றோர்) அல்லது சட்டப் பாதுகாவலருக்கு, கார்டியன்ஷிப் மாற்றப்படும்.


- செல்வமகள் சேமிப்பு கணக்கு: சுகன்யா சம்ரித்தி திட்டம் (Sukanya Samriddhi Yojana), 2019 இன் பாரா 3ஐ மீறி ஒரு குடும்பத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட கணக்குகள் தொடங்கப்பட்டால், முறையற்ற கணக்குகள் திட்ட வழிகாட்டுதல்களுக்கு மாறாக திறக்கப்பட்ட கணக்காகக் கருதப்பட்டு, அவை மூடப்படும்.


சுற்றறிக்கையில், அனைத்து அஞ்சல் அலுவலகங்களும், கணக்கு வைத்திருப்பவர்/பாதுகாவலரின் பான் மற்றும் ஆதார் விவரங்களைத் தவறாமல் பெற வேண்டும் (ஏற்கனவே இல்லை என்றால்) என்றும், முறைப்படுத்தல் கோரிக்கைகளை அலுவலகத்திற்கு அனுப்புவதற்கு முன், அதை கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


சுற்றறிக்கையின் முக்கிய அமசங்கள்:


- அனைத்து அஞ்சல் அலுவலகங்களும் அத்தகைய கணக்குகளை அடையாளம் காண அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அனைத்து வழிகளின் மூலமாகவும் அங்கீகரிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை கணக்கு வைத்திருப்பவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். 
- சிறு சேமிப்புத் திட்டங்களின் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சிரமத்தைத் தவிர்க்க, அனைத்து வட்டங்கள்/பிராந்தியங்கள்/பிரிவுகள் முறைப்படுத்தல் தேவைப்படும் வழக்குகளை முன்கூட்டியே கண்காணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


மேலும் படிக்க | 8வது ஊதியக்குழுவில் ஏற்றத்துடன் மாற்றம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு மெகா சம்பள உயர்வு


சுகன்யா சம்ரித்தி கணக்கு: இதை யார் திறக்கலாம்?


- சுகன்யா சம்ரித்தி யோஜனா பெண் குழந்தைகளுக்காக திறக்கப்பட்ட திட்டமாகும். 
- சுகன்யா சம்ரித்தி கணக்கை பெண் குழந்தைகளின் பெயரில் 10 வயது வரை தொடங்கலாம். 
- இந்த கணக்கை தபால் அலுவலகங்கள் மற்றும் வணிக வங்கிகளின் அறிவிக்கப்பட்ட கிளைகளில் தொடங்கலாம். 
- சுகன்யா சம்ரித்தி கணக்கின் வட்டி விகிதம் ஆண்டுக்கு 8% ஆகும்.
- இது ஆண்டு அடிப்படையில் கணக்கிடப்பட்டு ஆண்டுதோறும் கூட்டப்படுகிறது.


ஒரு நிதியாண்டில் குறைந்தபட்ச தொகையாக ரூ 250 மற்றும் அதிகபட்ச தொகையாக ரூ 1,50,000 கொண்டு இந்த கணக்கை தொடங்கலாம். அடுத்தடுத்த டெபாசிட்கள் ரூ. 50 -இன் மடங்குகளில் செய்யப்படுகின்றன. மொத்தத் தொகையாகவும் இந்த திட்டத்தில் டெபாசிட் செய்யலாம். ஒரு மாதத்திலோ அல்லது ஒரு நிதியாண்டிலோ செய்யப்படும் டெபாசிட்களின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | NPS Vatsalya Scheme: மோடி அரசின் புத்தம்புது நலத்திட்டம் நாளை அறிமுகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ