NPS Vatsalya Scheme: மோடி அரசின் புத்தம்புது நலத்திட்டம் நாளை அறிமுகம்

NPS Vatsalya scheme: என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தின் தொடக்க விழாவின் போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், என்.பி.எஸ் வாத்சல்யாவில் சேர்வதற்கான ஆன்லைன் தளத்தை தொடங்கிவைப்பார்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 18, 2024, 04:19 PM IST
  • என்பிஎஸ் வாத்சல்யா திட்டம் என்றால் என்ன?
  • NPS Vatsalya திட்டத்தின் நன்மைகள் என்ன?
  • குழந்தைகளின் எதிர்காலத்திற்கான நிதி பாதுகாப்பிற்காக இது கொண்டு வரப்பட்டுள்ளது.
NPS Vatsalya Scheme: மோடி அரசின் புத்தம்புது நலத்திட்டம் நாளை அறிமுகம் title=

NPS Vatsalya scheme: மத்திய அரசு மற்றொரு பரிசை மக்களுக்கு வழங்கவுள்ளது. 2024-25 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தை (NPS-Vatsalya scheme) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 18 செப்டம்பர் 2024 அன்று தொடங்கி வைப்பார். இந்த தொடக்க விழாவில், பள்ளி மாணவர்களும் பங்கேற்பார்கள் என்று நிதி அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

என்.பி.எஸ் வாத்சல்யா திட்டம்

என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தின் தொடக்க விழாவின் போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman), என்.பி.எஸ் வாத்சல்யாவில் சேர்வதற்கான ஆன்லைன் தளத்தை தொடங்கிவைப்பார். இதனுடன் இந்த திட்டத்துக்கான ப்ரவுசரையும் அவர் வெளியிடுவார். மேலும், புதிய சந்தாதாரர்களுக்கு நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் (PRAN) அட்டைகள் விநியோகிக்கப்படும். நாடு முழுவதும் சுமார் 75 இடங்களில் NPS வாத்சல்யா நிகழ்ச்சிகள் ஒரே நேரத்தில் ஏற்பாடு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

என்பிஎஸ் வாத்சல்யா திட்டம் என்றால் என்ன?

- என்பிஎஸ் வாத்சல்யா திட்டம் மோடி அரசாங்கத்தின் ஒரு புதிய திட்டமாகும். 
- குழந்தைகளின் எதிர்காலத்திற்கான நிதி பாதுகாப்பிற்காக இது கொண்டு வரப்பட்டுள்ளது. 
- இந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு குழந்தைகளின் பெற்றோர்களும் பாதுகாவலர்களும் பங்களிப்பார்கள் என்று நிதியமைச்சர் (Finance Minister) தனது பட்ஜெட் உரையில் தெரிவித்திருந்தார். 
- குழந்தைகள் தேவையான வயதை எடியவுடன், இந்தத் திட்டத்தின் கணக்கை வழக்கமான என்பிஎஸ் கணக்காக (NPS Account) எளிதாக மாற்றலாம். 
- என்பிஎஸ் வாத்சல்யா நெகிழ்வான பங்களிப்பு மற்றும் முதலீட்டு வசதிகளை வழங்குகிறது.
- இந்த திட்டத்தில் பெற்றோர்கள் குழந்தையின் பெயரில் ஆண்டுக்கு 1,000 ரூபாய் முதலீடு செய்யலாம்.
- இந்தத் திட்டம் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) கீழ் இயங்கும்.

மேலும் படிக்க | PF கணக்கில் எவ்வளவு பணம் இருக்கு? 4 எளிய வழிகளில் நிமிடங்களில் தெரிந்துகொள்ளலாம்

NPS Vatsalya scheme: இந்த திட்டத்தின் நன்மைகள் என்ன?

- என்.பி.எஸ்-வத்சல்யா திட்டன், பெற்றோர்/பாதுகாவலர்கள் தங்கள் மைனர் குழந்தைகளின் சார்பாக செய்யக்கூடிய நிதி முதலீடாகும். இத்திட்டத்தின் மற்ற பலன்களை பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.

- இந்த திட்டம், குழந்தைகள் தாமாக பணம் ஈட்டி, முதலீடு செய்யும் வயது வரும்வரை, அவர்களுக்கு நிதி உதவியை அளிக்க உதவுகிறது.

- சிறு வயதிலேயே முதலீடு செய்வது கூட்டு வட்டியின் பயனால், காலப்போக்கில் கணிசமான வளர்ச்சியை அடைய உதவுகிறது.

- குழந்தை 18 வயதை  எட்டியவுடன், இந்த ​​கணக்கை எளிதாக வழக்கமான NPS கணக்காக மாற்றலாம்.

- சில வருமான வரி விதிகள் NPS -க்கான பங்களிப்புகளுக்கு வரி விலக்கு அளிக்க அனுமதிக்கலாம்.

- பணி ஓய்வின் போது, கார்பஸின் ஒரு பகுதியை வரி இல்லாமல் எடுக்கலாம்.

- இந்த திட்டத்தின் மூலம் உங்கள் குழந்தை ஓய்வு பெறும் வயதிற்குள் பெரிய ஓய்வூதிய நிதியை சேகரிக்க முடியும்.

- இந்த திட்டத்தின் பயனாக, சிறு வயதிலேயே குழந்தைகளிடம் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கலாம்.

- நீண்ட காலத்திற்கான பட்ஜெட்டின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள இந்த திட்டம் குழந்தைகளுக்கு உதவும்.

மேலும் படிக்க | அதிக வருமானம், சிறந்த வட்டி: அசத்தலான தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News