ஜம்மு காஷ்மீரில் ஜனவரி 18 கண்ணிவெடி வெடித்ததில் பணியில் இருந்த அஜய்குமார் என்ற ராணுவ வீரரின் மரணத்திற்கு கொடுக்க வேண்டிய நிதி தொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்தில் பொய் கூறியதாக எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டிற்குக் இந்திய இராணுவம் எக்ஸ் வலைதளத்தில் பதில் அளித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மைக்ரோ பிளாக்கிங் தளமான X (முன்னாள் ட்விட்டர்) புதன்கிழமை (2024 ஜூலை 3) வெளியிட்ட பதிலில் ராகுல் காந்தியின் குற்றச்சாடு தவறானது என்று சுட்டிக் காட்டியுள்ளது.



"அக்னிவீரர்கள் உட்பட" நாட்டுக்கான பணியின்போது உயிர் துறந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு சேர வேண்டிய பணத்தை விரைவாக வழங்கப்படுவதாக அந்த எக்ஸ் செய்தி தெரிவித்தது. சமூக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் பதிவுகளை நிராகரித்த பாதுகாப்புத்துறை, பணியின் போது உயிரிழந்த அக்னிவீர் அஜய் குமாரின் குடும்பத்திற்கு நிதி வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் நிராகரித்தது.


இந்திய இராணுவத்தின் எக்ஸ் பதிவை ரீட்வீட் செய்த ​​​​மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் அலுவலகம், "இந்திய இராணுவம் அக்னிவீரர்களின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது!" என குறிப்பிட்டுள்ளது.


மேலும் படிக்க | 'நீட் தேர்வே தேவையில்லை... மாநில உரிமையும் முக்கியம்' பாஜகவை சீண்டுகிறாரா விஜய்...?


"அக்னிவீர் அஜய் குமார் செய்த உன்னத தியாகத்திற்கு இந்திய ராணுவம் வணக்கம் செலுத்துகிறது என்பதை அழுத்திச் சொல்கிறோம். அவருக்கான இறுதி சடங்குகள் முழு ராணுவ மரியாதையுடன் செய்யப்பட்டன" என்று இந்திய ராணுவம் ட்வீட் செய்திருந்தது.


பணியின்போது உயிரிழந்த அக்னிவீர் அஜய்யின் குடும்பத்திற்கு, கொடுக்க வேண்டிய மொத்தத் தொகையில், ஏற்கனவே ரூ.98.39 லட்சம் வழங்கப்பட்டுள்ளது, அதே சமயம் கருணைத் தொகை மற்றும் பிற நன்மைகள் சுமார் ரூ.67 லட்சம், அக்னிவீர் திட்டத்தின் விதிகளின்படி பொருந்தும். காவல்துறை சரிபார்ப்புக்குப் பிறகு, இறுதிக் கணக்குத் தீர்வு முடிக்கப்படும் என சமூக ஊடகப் பதிவில் கூறப்பட்டுள்ளது. "அஜய் குமாரின் குடும்பத்திற்குக் கொடுக்கப்படும் மொத்த தொகை தோராயமாக ரூ. 1.65 கோடியாக இருக்கும்" என்று பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜனவரி 18 அன்று ஜம்மு காஷ்மீரில் கண்ணிவெடி வெடித்ததில் பணியின் போது வீரமரணம் அடைந்த அஜய் குமாரின் குடும்பத்திற்கு வழங்க வேண்டிய ஊதியம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் பொய் கூறியதாக குற்றம் சாட்டியிருந்தார். குமாரின் தந்தையின் குடும்பத்திற்கு அரசாங்கத்திடம் இருந்து எந்த இழப்பீடும் கிடைக்கவில்லை என்று கூறுவதாகக் கூறும் வீடியோவை ராகுல் காந்தி X இல் பகிர்ந்துள்ளார்.



தியாகிகளின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் முன்னதாக குறிப்பிட்டிருந்தார் என்பதால் ராகுல் காந்தியின் கருத்து முக்கியத்துவம் பெற்றது.


மேலும் படிக்க | என்னது? நடிகர் விஜய் ஒன்னாங்கிளாஸ் பாஸ் பண்ணலையா? என்ன கொடுமை சார் இது? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ