இயற்கை அழகுக்காக பிரபலமான நேபாளத்தை கண்டு களிக்க ஆண்டுதோறும் பலர் அங்கு சுற்றுலா செல்கின்றனர். நீங்களும் நேபாளத்திற்குச் செல்ல திட்டமிட்டிருந்தால், IRCTC உங்களுக்கு சிறந்த வாய்ப்பை கொடுக்கும். இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் (IRCTC) நேபாளத்திற்கு சுற்றுலா செல்ல ஒரு சிறப்புத் பேக்கேஜை கொண்டு வந்துள்ளது. இதில் குறைவான கட்டணத்தில் நேபாளம் செல்ல முன்பதிவு செய்யலாம். மிஸ்டிகல் நேபால் எக்ஸ் பெங்களூர் (Mystical Nepal Ex Bangalore) என்று பெயரிடப்பட்ட இந்த சுற்றுலா பேக்கேஜ் பெங்களூரில் இருந்து தொடங்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IRCTC வழங்கும் மிஸ்டிகல் நேபால் எக்ஸ் பெங்களூர் டூர் பேக்கேஜ் ஜனவரி 27, 2023 முதல் தொடங்கும். இதில் காத்மாண்டு மற்றும் பொக்காரா போன்ற நேபாளத்தின் புகழ்பெற்ற இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.


பேக்கேஜ் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும்?


நேபாளத்தின் இந்த சிறப்பு பேகேஜ் 5 பகல் மற்றும் 6 இரவுகளுக்கானது. இதில் பெங்களூரில் இருந்து காத்மாண்டு செல்ல விமான டிக்கெட் கிடைக்கும். காத்மாண்டுவில் இருந்து பெங்களூருக்கு திரும்ப விமான வசதியும் வழங்கப்படும். இதில், காத்மாண்டுவில் 3 நாட்களும், பொக்காராவில் 2 நாட்களும் தங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும். பெங்களூரில் இருந்து செல்ல திட்டமிட்டால் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.


சிறப்பு வசதிகள் குறித்த விபரங்கள் 


1. நீங்கள் பெங்களூருவிலிருந்து நேபாளம் செல்லவும், திரும்பி வரவும் ஆன விமான டிக்கெட்டுகளைப் பெறுவீர்கள்.


2. பயணிகள் 3 நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதற்கான ஏற்பாடுகள் கிடைக்கும்.


3. ஆங்கிலம் பேசும் வழிகாட்டி வசதியும் கிடைக்கும்.


4. பயணிகளுக்கு பயணக் காப்பீட்டின் பலனும் வழங்கப்படும்.


5. நேபாளத்தில் நகரங்களில் பயணிக்க ஏசி பேருந்து வசதி ஏற்படுத்தப்படும்.


6. அனைத்து பிரபலமான இடங்களுக்கும் பயணிகள் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள்.


7. பயணத்திற்கான பேகேஜில் இரண்டு வேளை உணவு வழங்கப்படும். இதில் காலை உணவு மற்றும் இரவு உணவு வசதியும் இருக்கும்.


கட்டணம் விபரம்


தனியாக சென்று ஹோட்டலில் தங்கும் நபர்களுக்கான கட்டணம் ஒரு நபருக்கு ரூ.51,150 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர, இருவராக தங்கும் வசதிக்கும் ஒரு நபருக்கு ரூ.43,960 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூன்று பேராக தங்கும் வசதி கொண்ட அறையில் தங்கும் நபர்களுக்கு ஒரு நபருக்கு ரூ.41,800 கட்டணம் வசூலிக்கப்படும்.


மேலும் படிக்க | பட்ஜெட் 2024... மூத்த குடிமக்களுக்கு 50% ரயில் டிக்கெட் சலுகை மீண்டும் கிடைக்குமா..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ