பட்ஜெட் 2024... மூத்த குடிமக்களுக்கு 50% ரயில் டிக்கெட் சலுகை மீண்டும் கிடைக்குமா..!!

இந்தியாவில், கோவிட்க்கு முன், மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட்டுகளில் 40 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டது, ஆனால் இந்த சலுகை கொரோனா நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 20, 2023, 07:28 AM IST
  • கொரோனா பரவல் தொடங்கும் முன் கிடைத்த சலுகை.
  • மூத்த குடிமக்கள் பட்ஜெட்டில் ரயில் டிக்கெட்டுகளில் 50 சதவீதம் வரை தள்ளுபடி கோருகின்றனர்.
  • மூத்த குடிமக்களுக்கான ரயில் டிக்கெட்டுகளில் தள்ளுபடியை அரசு அறிவிக்கலாம்.
பட்ஜெட் 2024... மூத்த குடிமக்களுக்கு 50% ரயில் டிக்கெட் சலுகை மீண்டும் கிடைக்குமா..!! title=

பட்ஜெட் 2024: இந்தியாவில், கோவிட்க்கு முன், மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட்டுகளில் 40 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டது, ஆனால் இந்த சலுகை கொரோனா நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.  நாட்டிலும் உலகிலும் கொரோனா தொடர்பான நெருக்கடிகள் நீங்கிய பிறகும், அரசாங்கம் இந்த விலக்கை மீண்டும் தொடங்கவில்லை. இப்போது மூத்த குடிமக்கள் பட்ஜெட்டில் ரயில் டிக்கெட்டுகளில் 50 சதவீதம் வரை தள்ளுபடி கோருகின்றனர். இந்த சலுகை அரசு மீண்டும் அளிக்கத் தொடங்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அடுத்த ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்திற்கு பிறகு நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளதால், இம்முறை பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கான ரயில் டிக்கெட்டுகளில் தள்ளுபடியை அரசு அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பரவல் தொடங்கும் முன் கிடைத்த சலுகை

இந்தியாவில், மூத்த குடிமக்களுக்கான அனைத்து வகை சிறப்பு விரைவு ரயில்களிலும் IRCTC சலுகைக் கட்டணத்தை வழங்கி வந்தது. கொரோனா பரவல் தொடங்கும் முன், IRCTC துரந்தோ, சதாப்தி, ஜன் சதாப்தி, ராஜ்தானி, மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் ரயில் டிக்கெட்டுகளில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 58 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த பெண் பயணிகளுக்கு கட்டணச் சலுகையை வழங்கி வந்தது. ஆண் மூத்த குடிமக்கள் 40 சதவீத சலுகைக்கு தகுதியுடையவர்கள். அதே நேரத்தில் பெண் மூத்த குடிமக்கள் ரயில் டிக்கெட்டுகளில் 50 சதவீத தள்ளுபடியைப் பெறலாம் என்ற சலுகை இருந்தது.

ரயில் டிக்கெட்டுகளில் மீண்டும் சலுகை பெற மூத்த குடிமக்களின் கோரிக்கை

கொரோனா பரவல் தொடங்கும் முன், மூத்த குடிமக்கள் ரயில் டிக்கெட் விலையில் 40 முதல் 50 சதவிகிதம் தள்ளுபடி பெறலாம் என இருந்தது. ராஜ்தானியின் முதல் வகுப்பு ஏசி டிக்கெட் ரூ.4,000 என்றால், மூத்த குடிமகன் ரூ.2,000 அல்லது ரூ.2,300க்கு பெறலாம். பின்னர் 2019 ஆம் ஆண்டின் இறுதியில் மற்றும் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கோவிட் நாடு மற்றும் உலகம் முழுவதும் பரவியது, அதன் பிறகு IRCTC இன் டிக்கெட் முன்பதிவில் இந்த சேவை கிடைப்பது நிறுத்தப்பட்டது. இப்போது பட்ஜெட்டில் மீண்டும் இந்த சிறப்பு தள்ளுபடி கிடைக்கும் என்று மூத்த குடிமக்கள் நம்புகின்றனர்.

மேலும் படிக்க | Indian Railways: ஒரே டிக்கெட்டில் 56 நாட்களுக்கு இந்தியா முழுவதும் சுற்றலாம்!

பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பார்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1, 2024 அன்று ஆறாவது முறையாக பட்ஜெட்டை (யூனியன் பட்ஜெட் 2024) தாக்கல் செய்கிறார். அதற்குப் பிறகு நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், மோடி அரசின் இரண்டாவது ஆட்சியின் கடைசி பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். அத்தகைய சூழ்நிலையில், அரசாங்கம் தனது வாக்கு வங்கியில், குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு சாதகமான அறிவிப்புகளை வெளியிடலாம். ஆனால், பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படாது என்றும், ஆனால் அரசு சில சிறப்பு அறிவிப்புகளை கண்டிப்பாக வெளியிட முடியும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | Indian Railways: விரைவில் வருகிறது வந்தே பாரத் சாதாரண்... குறைந்த கட்டண ரயில் சேவை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News