போஸ்ட் ஆபீஸ் RD திட்டம்... மாதம் ரூ.7000 முதலீட்டில் ரூ.12 லட்சம் பெறலாம்...!
வங்கிகளைப் போலவே, பல சேமிப்புத் திட்டங்கள் அஞ்சலக அலுவலகத்திலும் செயல்படுத்தப்படுகின்றன. அதில் ஒன்று போஸ்ட் ஆபிஸ் RD. ஆர்டி திட்டம் ஒரு உண்டியல் போன்றது.இதில் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்ய வேண்டும்.
வங்கிகளைப் போலவே, பல சேமிப்புத் திட்டங்கள் அஞ்சலக அலுவலகத்திலும் செயல்படுத்தப்படுகின்றன. அதில் ஒன்று போஸ்ட் ஆபிஸ் RD. ஆர்டி திட்டம் ஒரு உண்டியல் போன்றது.இதில் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்ய வேண்டும்.
பாதுகாப்பான முதலீடு என்று வரும் போது அஞ்சலம் என்னும் போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள், பொதுத்துறை வங்கிகளின் முதலீட்டு திட்டங்கள் ஆகியவை சிறந்த தேர்வாக இருக்கும். அதொடு இவற்றிற்கு நல்ல வருமானமும் கிடைக்கின்றன.
அஞ்சல் அலுவலக RD திட்டம்
போஸ்ட் ஆபீஸ் ஆர்டி திட்டம், பன்ணத்தை பம்மடங்காக்கும் சிறந்த திட்டங்களில் ஒன்று. இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட தொகை முதிர்வுக்குப் பிறகு வட்டியுடன் உங்களுக்கு வழங்கப்படும். அஞ்சல் அலுவலக RD திட்ட முதலீட்டு காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
தற்போது, இந்த RD திட்டத்திற்கு 6.7% வட்டி வழங்கப்படுகிறது. வட்டி காலாண்டு அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. நீங்கள் எவ்வளவு சிறந்த தொகையை டெபாசிட் செய்கிறீர்களோ, அவ்வளவு பெரிய தொகையை வட்டி மூலம் சேர்க்கலாம்.
நீங்கள் விரும்பினால், நீங்கள் தபால் அலுவலக RD மூலம் 12 லட்சம் வரை சேர்க்கலாம். இதற்கு நீங்கள் ஒவ்வொரு மாதமும் 7000 ரூபாய் RD முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம் 12 லட்சம் எப்படி கிடைக்கும் என்பதை கணக்கிடலாம்.
போஸ்ட் ஆபீஸ் ஆர்டி திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.7000 முதலீடு செய்தால், 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.4,20,000 போஸ்ட் ஆபிஸ் ஆர்டியில் முதலீடு செய்வீர்கள். இதில் உங்களுக்கு 6.7 சதவீதம் வட்டி கிடைக்கும்.
மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை முதல் டிஏ ஹைக்: அறிவிப்பு எப்போது?
வட்டி கணக்கீட்டின்படி, 5 ஆண்டுகளில் உங்களுக்கு வட்டியாக ரூ.79,564 கிடைக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் முதலீடு செய்த தொகை மற்றும் வட்டியைக் கூட்டினால், உங்கள் முதிர்வுத் தொகை ரூ. 4,99,564 அதாவது சுமார் ரூ. 5 லட்சமாக இருக்கும்.
ஆர்டி முதிர்ச்சியடைவதற்கு முன் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும், அதாவது ஆர்டியை முழுமையாக 10 ஆண்டுகளுக்கு செய்ய வேண்டும். 10 வருடங்கள் தொடர்ந்து முதலீடு செய்தால், உங்கள் மொத்த முதலீடு ரூ.8,40,000 ஆக இருக்கும். இதற்கு, 6.7 சதவீத வட்டியில், 3,55,982 ரூபாய் கிடைக்கும்.
அஞ்சல் அலுவலக RD திட்டத்தை நீட்டிக்க, நீங்கள் சம்பந்தப்பட்ட தபால் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். முதலில் கணக்கு தொடங்கப்பட்ட அதே வட்டி விகிதம் நீட்டிக்கப்பட்ட கணக்கிற்கும் பொருந்தும். நீட்டிக்கப்பட்ட கணக்கை நீட்டிப்பு காலத்தில் எந்த நேரத்திலும் மூடலாம். முழு ஆண்டுகளுக்கு நீங்கள் RD வட்டி விகிதத்தின் பலனைப் பெறுவீர்கள், ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திற்கு, அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கு வட்டி விகிதம் பொருந்தும்.
நீங்கள் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட கணக்கிலிருந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு பணத்தை எடுத்தால், நீங்கள் மூன்று ஆண்டுகளுக்கு 6.7 சதவீத வட்டி கிடைக்கும், ஆனால் 6 மாதங்களுக்கு முன்னதாக பணத்தை திரும்ப பெற்றால், வழங்கப்படும் விகிதம் சேமிப்பு கணக்கிற்கான 4 சதவீத வட்டி மட்டுமே. எனவே நீங்கள் போஸ்ட் ஆபிஸ் ஆர்டியில் இருந்து ரூ.12 லட்சம் சம்பாதிக்க விரும்பினால், 5 வருட நீட்டிக்கப்பட்ட காலத்திற்கு ரூ.7000 முதலீடு செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | ITR தாக்கல் செய்ய போறீங்களா... இந்த ஆவணங்களை ரெடியா வச்சுகோங்க..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ