டிஜிட்டல் பரிவர்த்தனை மற்றும் யுபிஐ பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க அவ்வப்போது, வங்கிகள், சிறப்பான சலுகைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில், தனியார் வங்கியான DCB வங்கி தற்போது கேஷ்பேக் ஆஃபரை வழங்கியுள்ளது. இது தொடர்பாக டிசிபி வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹேப்பி சேவிங்ஸ் அக்கவுண்ட் அல்லது யுபிஐ மூலம் டெபிட் செய்யும் பரிவர்த்தனைகளுக்கு ஒரு நிதியாண்டில் ரூ.7500 வரை கேஷ்பேக் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு குறைந்தபட்சம் ரூ.500 UPI பரிவர்த்தனை செய்ய வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

25,000 இருப்பு வைத்திருக்க வேண்டும்


UPI பரிவர்த்தனைகளில் கேஷ்பேக் பெற, குறைந்தபட்சம் 25,000 ரூபாயை கணக்கில் வைத்திருக்க வேண்டும் என்று DCB வங்கி அளித்த தகவல் தெரிவிக்கிறது. காலாண்டில் செய்யப்படும் பரிவர்த்தனைகளின் அடிப்படையில் கேஷ்பேக் வழங்கப்படும் மற்றும் ஒரு காலாண்டின் முடிவில் கணக்கில் வரவு வைக்கப்படும். எந்தவொரு கணக்கு வைத்திருப்பவருக்கும் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக ரூ.625 கேஷ்பேக் மற்றும் ஆண்டுக்கு ரூ.7500 கேஷ்பேக் கிடைக்கும்.


கூடுதலாக கிடைக்கும் வசதிகள்


கேஷ்பேக் உடன், வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு DCB இன் ஹாப்பி சேவிங்க்ஸ் கணக்கில் பல நன்மைகள் கிடைக்கும். இந்தக் கணக்கின் மூலம் நீங்கள் வரம்பற்ற இலவச RTGS, NEFT மற்றும் IMPS வசதிகளைப் பெறுவீர்கள். இதனுடன், நீங்கள் தனிப்பட்ட வங்கி மற்றும் DCB மொபைல் வங்கியின் பலனையும் பெறுவீர்கள். இது தவிர, டிசிபி வங்கியின் எந்த ஏடிஎம்மிலும் டெபிட் கார்டு மூலம் வரம்பற்ற பரிவர்த்தனைகளைச் செய்யலாம்.


மேலும் படிக்க | SIP Investment Calculator: 5000 ரூபாயை 20 லட்சம் ரூபாயாக மாற்றும் சூத்திரம்!


பழைய வாடிக்கையாளர்களும் பயன்பெறலாம்


புதிய மற்றும் பழைய வாடிக்கையாளர்கள் என இருவரும் இந்த வசதியைப் பெறலாம் என்று DCB வங்கி தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த வசதியை பெற அவர்கள் ஏற்கனவே இருக்கும் கணக்கை ஹாப்பி சேவிங்கஸ் என்னும் சேமிப்புக் கணக்கிற்கு மாற்ற வேண்டும்.


வட்டி விகிதத்தை அதிகரித்த  DCB வங்கி


முன்னதாக, புத்தாண்டு தொடங்குவதற்கு முன் தனியார் துறை வங்கியான DCB வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் FD முதலீடுகள் வட்டி விகிதத்தை அதிகரித்தது.  டிசிபி வங்கி ரூ.2 கோடிக்கும் குறைவான டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை 10 அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்தது. புதிய வட்டி விகிதங்கள் டிசம்பர் 13 முதல் அமலுக்கு வந்தன. DCB வங்கி FD கணக்குகள வைத்திருக்கும் தனது பொது வாடிக்கையாளர்களுக்கு 8 சதவீதமும் மூத்த குடிமக்களுக்கு 8.60 சதவீதமும் வட்டி வழங்குகிறது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | வரி செலுத்துவோர் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய வருமான வரி விதிகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ