உலகம் முழுவதும் உள்ள மக்கள் தங்கள் பாணியில் புதிய ஆண்டை வரவேற்று கொண்டாடியதை பார்த்தோம். ஆனால், சிலருக்கு வருடங்கள் மாறினாலும் நிலைமை மாறவில்லை என்ற நிலை இருக்கும். 2023ல் எந்த மாதிரியான பொருளாதார நெருக்கடி நம்மைத் தொந்தரவு செய்ததோ, அதேபோன்ற பிரச்சனை 2022-லும் சந்தித்து இருப்பார்கள். இந்தநிலை மாற வேண்டும் என்றால், அதற்கு திட்டமிட்ட சேமிப்பும் முதலீடும் தேவை. இதன் மூலம் 50,000 ரூபாய் சம்பளக்காரார் மட்டுமல்ல.. 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவரும் நிம்மதியாக பன தட்டுப்பாட்டின்றி இருக்கலாம்.
நிதி நிலையை எவ்வாறு மேம்படுத்ததுவது?
உங்களது ஒரே ஒரு முடிவின் மூலம் புத்தாண்டில் உங்கள் நிதி நிலையை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை இன்று அறிந்து கொள்ளலாம். உண்மையில், மனித ஆசைகள் தானாக ஒருபோதும் நிறைவேறாது. ஆனால் ஆசைகளை நிறைவேற்ற, முடிவுகளை எடுக்க வேண்டும். நீங்கள் நிதி நெருக்கடியைச் சமாளிக்க விரும்பினால், நீங்கள் வித்தியாசமாக சிந்திக்க வேண்டும்.
செலவினங்களைக் கட்டுப்படுத்துவது அவசியம்
முதலில் வருமானத்திற்கும் செலவிற்கும் இடையில் சமநிலையை பராமரிக்கவும். இதற்கு வருமானம் மிக அதிகமாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உங்களிடம் உள்ள வருமானத்தில் நீங்கள் தொடங்கலாம். காலம் தாழ்த்துவதால் நேரம் வீணாகிறது, கடந்த காலம் திரும்பி வராது. எனவே, புத்தாண்டில் சேமிப்பிற்கு (Investment Tips) முன்னுரிமை கொடுங்கள், அதன் பிறகு மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். இது எப்படி சாத்தியம் என்று யோசிக்கிறீர்களா?
இப்போது உங்கள் சம்பளம் அல்லது வருமானம் ரூபாய் 20 ஆயிரம் என்று வைத்துக் கொள்வோம். எப்படியாவது உங்கள் வீட்டுச் செலவுகளைச் சமாளிக்க முடிந்தால், அடுத்த ஆண்டு எப்படிச் சேமிப்பீர்கள்? இது உங்கள் கேள்வியாக இருக்கலாம். உங்கள் சம்பளம் ரூ.20 ஆயிரம் அல்ல ரூ.18000 என்பதை உறுதி செய்ய வேண்டும். உங்கள் சம்பளம் கிடைத்தவுடன், முதலீட்டிற்காக 2,000 ரூபாய் ஒதுக்குங்கள் அல்லது மியூச்சுவல் ஃபண்டில் உடனடியாக SIP முதலீடு செய்யுங்கள். இதில் வியக்கத்தக்க வகையில் வருமானம் கிடைக்கின்றன.
ஆரம்பத்தில் 10 சதவீதத்துடன் தொடங்குங்கள்
ரூ.2000 சேமிப்பு போக மீதி உள்ள ரூ.18 ஆயிரத்திற்குள் அனைத்து செலவுகளையும் ஈடுகட்டுங்கள். தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள், ஒவ்வொரு மாதமும் 2,000 ரூபாயை எளிதாகச் சேமிப்பீர்கள். ஒரு மாதத்தில் நீங்கள் செலவழித்தவற்றைப் பட்டியலிடுங்கள். அதில், சில பொருட்களை வாங்காவிட்டாலும், வீட்டை எளிதாக நடத்தலாம் என இருக்கும் பொருட்கள் எவை என்பதை முடிவு செய்யுங்கள். பின்னர் பட்டியலிலிருந்து அதை நீக்கி , மாதத்திற்கான மீதமுள்ள பொருட்களை ஒன்றாக வாங்க முயற்சிக்கவும்.
கை மேல் பலன் தெரியும்
முதல் 6 மாதங்களில் உங்களுக்கு சில சிக்கல்கள் இருக்கும், ஆனால் 2024 ஆம் ஆண்டின் இறுதியில், அசல் தொகையான ரூ.24 ஆயிரத்தை வைப்புத் தொகையாகவும், குறைந்தபட்சம் 12 சதவீத வட்டியும் உங்கள் கணக்கில் இருக்கும். அதே நேரத்தில், வேலை செய்பவர்களின் சம்பளம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கிறது. சம்பள அதிகரிப்புடன், முதலீட்டின் அளவையும் அதிகரிக்கவும். இப்படி ஒவ்வொரு ஆண்டும் முதலீட்டின் அளவை அதிகரிக்கும் போது, புத்தாண்டிற்காக ஆவலுடன் காத்திருப்பீர்கள். ஏனெனில் முதலீட்டுத் தொகையும் வட்டியும் சேர்ந்து வருடா வருடம் பெரிய நிதியாக மாறும். 5 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் சுமார் 2 லட்சம் ரூபாய் சேமித்திருப்பீர்கள். இதன் காரணமாக நீங்கள் நிதி ரீதியாக சற்று நிம்மதி அடைவீர்கள்.
வருவாயில் 10 சதவீதத்துடன் சேமிப்புப் பழக்கத்தை தொடங்குங்கள்
ஆனால், சேமிப்புப் பழக்கத்தை படிப்படியாக வளர்த்துக் கொள்ளும்போது, 10 ஆண்டுகளில் உங்கள் நிதி நிலை மாறும். முதலீட்டு நிதிகள் ஒரு பெரிய ஆதரவாக மாறும். இக்கட்டான காலங்களில் இந்தப் பணத்தைப் பயன்படுத்த முடியும். எனவே, நீங்கள் கஷ்டத்தில் இருந்து விடுபட வேண்டும் என நினைத்தால், புத்தாண்டிலிருந்து சேமிக்கத் தொடங்குங்கள். வருவாயில் 10 சதவீதத்துடன் தொடங்குங்கள். ஆனால் படிப்படியாக அதை 30 சதவீதமாக உயர்த்தினால், யாரிடமும் கை நீட்ட வேண்டிய அவசியமே இருக்காது.
மாதம் 5000 ரூபாய் முதலீடு
இது மட்டுமின்றி மாதம் ரூ.30 முதல் 40 ஆயிரம் வரை சம்பளம் என்றால், மாதம் ரூ.5000-ல் எஸ்ஐபி தொடங்கி, ஆண்டு வருமானம் அதிகரிக்கும்போது அதை 10 சதவீதம் அதிகரிக்கலாம். வெறும் 10 ஆண்டுகளில் வெறும் 12 சதவீத எளிய வட்டியில் 16,87,163 ரூபாய் கிடைக்கும். ஆனால், பொதுவாக பரஸ்பர நிதியத்தில், சுமார் 15 சதவிகிதம் வருமானம் கிடைக்கும். உங்களுக்கு 15 சதவீத வட்டி கிடைத்தால் சுமார் 20 லட்சம் ரூபாய் உங்கள் கையில்.
பலர், குறிப்பாக சேமிப்பு என்று வரும்போது இப்போது வருமானம் குறைவு, செலவுகள் அதிகம் என்று சிலர் வாதிடுகின்றனர். எனவே, வருமானம் அதிகரிக்கும் போது, சிறிது பணத்தை சேமித்து முதலீடு செய்வோம். ஆனால் நம்புங்கள், வருமானம் அதிகரிக்கட்டும் என காத்திராமல், முடிந்த அலவு சேமிக்க தொடங்குங்கள். வருடக்கணக்கில் சேமிப்பு என்ற பெயரில் ஒரு பைசா கூட இல்லாமல் இன்றும் பலர் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(குறிப்பு: பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு முன், நிதி ஆலோசகரின் உதவியைப் பெறவும்)
மேலும் படிக்க | பரஸ்பர நிதியம்.... 5000 ரூபாயை 1 கோடியாக மாற்றும் மேஜிக் பார்முலா..!!
மேலும் படிக்க | சூரியனின் அருளால்... தை மாதத்தில் பட்டையை கிளப்பப்போகும் ‘3’ ராசிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ