ATM vs Debit Cards: இரண்டு கார்டுகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா?
ATM vs Debit Cards: ஏடிஎம் கம் டெபிட் கார்டுகள் இப்போது பெரும்பாலான வங்கிகளால் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. இருப்பினும், இரண்டிற்கும் இடையே சில குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன.
ஏடிஎம் vs டெபிட் கார்டுகள்: பெரும்பாலான பயனர்கள் ஏடிஎம் கார்ட் மற்றும் டெபிட் கார்டை ஒன்றென கருதுகின்றனர். ஏனென்றால், இரண்டும் நோக்கத்திலும் செயல்பாட்டிலும் ஒரே மாதிரியானவை. ஆனால் இரண்டுக்கும் இடையில் சில வேறுபாடுகள் உள்ளன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அடிப்படை வேறுபாட்டைப் பற்றி பேசுகையில், ஏடிஎம் கார்ட் என்பது PIN அடிப்படையிலான அட்டையாகும். இதன் மூலம் நீங்கள் ஏடிஎம் களில் மட்டுமே பரிவர்த்தனைகளை செய்ய முடியும். அதேசமயம் டெபிட் கார்டு பல செயல்பாட்டு அட்டையாகும். இவற்றின் மூலம் கடைகள், உணவகங்கள், ஆன்லைன் என பல இடங்களில் பரிவர்த்தனை செய்யலாம். இருப்பினும், ஏடிஎம் கம் டெபிட் கார்டுகள் இப்போது பெரும்பாலான வங்கிகளால் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. இருப்பினும், இரண்டிற்கும் இடையே சில குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன.
ஏடிஎம் அட்டை
ஏடிஎம் கார்டின் மிக முக்கியமான அம்சம் ஏடிஎம்மில் இருந்து பணத்தைப் பரிவர்த்தனை செய்வதாகும். ஏடிஎம் கார்டுகள் உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட 4 இலக்க PIN அல்லது தனிப்பட்ட அடையாள எண்ணைப் பயன்படுத்துகின்றன. இதற்குப் பிறகு, உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ரியல் டைமில் பணம் எடுக்கப்படும்.
மேலும் படிக்க | Aadhaar Fraud: 6 லட்சம் ஆதார் அட்டைகளை UIDAI ரத்து செய்தது ஏன்
ஏடிஎம் கார்டுகளுக்கு எந்த வட்டியும் வசூலிக்கப்படாது. ஆனால் அவற்றை வேறு எங்கும் பயன்படுத்த முடியாது. ஏடிஎம் கார்டுகள் குறைந்த பயன்பாட்டு அட்டைகளாகும். அதாவது பல பெரிய விற்பனை நிலையங்களில் அவற்றைப் பயன்படுத்த முடியாது.
இது தவிர, உங்கள் வங்கியைத் தவிர வேறு வங்கியின் ஏடிஎம்மில் பணம் எடுத்தால், அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இது தவிர, வங்கிக் கணக்கில் போதுமான பணம் இல்லை என்றால், ஏடிஎம் கார்டுகளில் ஓவர் டிராஃப்ட் வசதியைப் பயன்படுத்த முடியாது.
டெபிட் கார்டுகள்
டெபிட் கார்டுகள் பண பரிவர்த்தனை செயல்முறையை எளிதாக்குகின்றன. நீங்கள் அனைத்து இடங்களிலும் ரொக்கமாக பணத்தை எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. இவை பல விற்பனை நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. உள்ளூர் மளிகைக் கடைக்காரர்கள் முதல் பெரிய உணவகங்கள் வரை எங்கு வேண்டுமானாலும் அவற்றைப் பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க | ITR Filing AY22-23: காலக்கெடு நீட்டிக்கப்படுமா? சமீபத்திய அப்டேட் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ