ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஏடிஎம் விதிகள்: பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக பயனளிக்கும்.
இதன்படி, வாடிக்கையாளர்கள் ரூ. 1 லட்சம் வரை பேலன்ஸ் வைத்திருந்தால், ஏடிஎம் பரிவர்த்தனைக்கு கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. இது மட்டுமின்றி, வேறு எந்த வங்கியின் ஏடிஎம்மிலும் பணம் எடுத்தால், மூன்று பரிவர்த்தனைகள் இலவசமாக கிடைக்கும். அதே நேரத்தில், எஸ்பிஐ அல்லாத ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு தனி வரம்பு உள்ளது.
வங்கி தகவல் அளித்துள்ளது
இப்போது புதிய விதியின்படி, ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு குறிப்பிட்ட வரம்புக்குப் பிறகு வாடிக்கையாளர்கள் தனிக் கட்டணம் செலுத்த வேண்டும். இப்போது நீங்கள் எஸ்பிஐ மற்றும் எஸ்பிஐ அல்லாத ஏடிஎம்களைப் பொறுத்து ரூ.5 முதல் 20 வரை கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்பிஐ ஏடிஎம்மில் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக பணம் எடுத்தால், ரூ.10 வரை கட்டணம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில், எஸ்பிஐ அல்லாத ஏடிஎம்களில் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக எடுத்தால், ரூ.20 கட்டணம் செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க | எஸ்பிஐ வங்கியின் டிரான்ஸாக்ஷன் விதிகளில் மாற்றம்!
புதிய விதிகளை அறிந்து கொள்ளுங்கள்
இப்போது புதிய விதியின்படி, எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம்மில் இருப்பைச் சரிபார்க்க ரூ.5 கட்டணமும், மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் இருப்பைச் சரிபார்க்க ரூ.8 செலுத்த வேண்டும். ஆனால் ரூ.1 லட்சத்துக்கு மேல் இருப்பு வைத்திருந்தால், அதற்கு கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
மறுபுறம், சர்வதேச இருப்பு பரிவர்த்தனையில், நீங்கள் மொத்த பரிவர்த்தனை கட்டணத்தில் 3.5 சதவீதம் மற்றும் ரூ.100 கூடுதலாக செலுத்த வேண்டும். அதாவது, புதிய விதியின் கீழ், எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு பெரிய பலன்கள் கிடைக்கும்.
இப்போது நீங்கள் எந்தக் கட்டணமும் செலுத்தாமல், வங்கி ஏடிஎம்-மை வசதியாகப் பயன்படுத்த முடியும். எனினும் இதற்காக உங்கள் கணக்கில் 1 லட்சம் ரூபாய் கட்டாயமாகப் பராமரிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்வது அவசியமாகும்.
மேலும் படிக்க | Mutual Fund: முதலீட்டை துவங்குவது எப்படி, எந்த ஆவணங்கள் தேவை, முழு விவரம் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR