வருமான வரி அறிக்கை AY 2022-23: நீங்கள் இதுவரை வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்றால், உடனடியாக அதை செய்து விடவும். வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும். இதை நீட்டிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பல இடங்களில் கோரிக்கை விடுக்கப்படுகின்றது. எனினும், கடைசி தேதியை நீட்டிக்க அரசு தெளிவாக மறுத்துவிட்டது. ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான தேதியை ஜூலை 31 க்கு மேல் நீட்டிக்கும் யோசனை அரசுக்கு தற்போது இல்லை என்று வருவாய்த்துறை செயலாளர் கூறியுள்ளார். 2021-22 நிதியாண்டு மற்றும் 2022-23 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வது ஜூன் 15, 2022 முதல் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசாங்கம் கூறியது என்ன?
கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே, இந்த முறையும் வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. உங்கள் அலுவலகத்தில் படிவம்-16 கிடைத்திருந்தால், தாமதமின்றி அதை நிரப்பவும். காலக்கெடுவிற்கு முன் நீங்கள் அதை நிரப்பவில்லை என்றால், அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இது தவிர, அதிக வரி செலுத்துவோர் வருமான வரி ஈ-ஃபைலிங் இணையதளத்தில் ரிட்டர்ன் தாக்கல் செய்யும்போது சுமை அதிகரிக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், வருமான வரி தாக்கல் செய்வதில் உள்ள சிக்கல்களைத் தவிர்க்க விரும்பினால், கடைசி நேரம் வரை காத்திருக்காமல் உடனே இந்த பணியை செய்து விடவும். கடந்த ஆண்டு கடைசி நாளில் 50 லட்சம் ரிட்டர்ன்கள் கிடைத்ததாக வருவாய்த்துறை செயலாளர் கூறினார். இந்த முறை ஒரு கோடி ஐடிஆர் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
ஜூலை 31க்கு முன் உங்கள் ரிட்டனைத் தாக்கல் செய்யுங்கள்
2021-22 நிதியாண்டு மற்றும் 2022-23 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாமதக் கட்டணம் இல்லாமல் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31, 2022 என்பது குறிப்பிடத்தக்கது. காலக்கெடுவிற்குப் பிறகு நீங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்தால், நீங்கள் வரி மீதான வட்டியுடன் சேர்த்து 234A பிரிவின் கீழ் மற்றும் வருமான வரியின் 234F பிரிவின் கீழ் அபராதம் செலுத்த வேண்டும்.
ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான விரிவான காலக்கெடு
இது தவிர, தனிப்பட்ட HUFக்கான ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31, 2022 ஆகும். தணிக்கை தேவைப்படுபவர்களுக்கு வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி அக்டோபர் 31, 2022 ஆகும். வணிகம் உள்ளவர்கள் மற்றும் அதில் TP அறிக்கை தேவைப்படுபவர்களுக்கு, வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நவம்பர் 30, 2022 ஆகும். அதாவது, அனைத்து வகையான வருமான வரி செலுத்துவோருக்கும் காலக்கெடுவைத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. காலக்கெடுவிற்கு முன் நீங்கள் வரி செலுத்தவில்லை என்றால், அபராதம் செலுத்த வேண்டி வரும்.
மேலும் படிக்க | ITR Filing Update: ITR தாக்கல் செய்ய வேண்டிய தேதியை தவறவிட்டால் என்ன நடக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ