HRA கொடுப்பனவிற்கு வரி விலக்கு... ‘இந்த’ தவறுகளை செய்யாதீங்க... சிக்கல் ஏற்படும்!
வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 10 (13A) இன் கீழ் HRA என்னும் வீட்டு வாடகை கொடுப்பனவிற்கு வரி விலக்கு கிடைக்கும்.
வாடகை வீட்டில் இருப்பவர்கள் வீட்டு வாடகை கொடுப்பனவிற்கான விரி விலக்கை கோரலாம். எந்தவொரு பணியாளரும் இந்த வரி விலக்கு சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த விலக்கின் பலன் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 10 (13A) இன் கீழ் கிடைக்கும். இந்த விலக்கு காரணமாக உங்கள் மொத்த வரி குறைக்கப்படுகிறது. இந்த விலக்கின் பலனை குறைந்தபட்சம் வரிப் பொறுப்பு மிக அதிகமாக உள்ளவர்களாவது பெற வேண்டும். நீங்கள் பெரிய நகரங்களில் வாடகை வீட்டில் வசிக்கிறீர்கள் என்றால், இந்த விலக்கு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பெரிய நகரங்களில் வீட்டு வாடகை அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம். நிதி ஸ்திரத்தன்மையின் அடையாளமாக கருதப்படுவதால், HRA என்னும் வீட்டு வாடகை கொடுப்பனவிற்கு விலக்கு கோருவது ஒரு நபரின் கிரெடிட் ஸ்கோருக்கும் நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். HRA விலக்கு கோரும் போது சில விஷயங்களை மனதில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம், ஏனெனில் விதிகளின்படி விலக்கு கோரப்படாவிட்டால், வருமான வரித் துறையிடம் இருந்து உங்களுக்கு நோட்டீஸ் வரலாம்.
சில குறிப்பிட்ட விஷயங்களை கவனிக்கவில்லை என்றால் வருமான வரி துறை மூலம் சிக்கல் ஏற்பாடும்
பல சந்தர்ப்பங்களில், சிலர் HRA விலக்கு பரிந்துரைக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக கோருகிறார்கள். சிலர் HRA விலக்கு கோருவதற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பிப்பதில்லை. சில சந்தர்ப்பங்களில், வாடகை வீட்டில் வசிக்காவிட்டாலும், நபர் HRA விலக்கு கோருவதும், போலி ஆவணங்களை சமர்ப்பிப்பதும் கூட நடக்கின்றன. இந்த சூழ்நிலையில், வருமான வரித்துறை (Income Tax) வரிசெலுத்துவோருக்கு நோட்டீஸ் அனுப்பலாம். HRA வரி விலக்கு கோரிக்கைகளை விசாரிக்கலாம். இந்த விலக்கு பெறுவதற்கு போலி ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டதாக வருமான வரித்துறை கண்டறிந்தால், அபராதமும் விதிக்கலாம்.
மேலும் படிக்க | யூபிஐ மூலம் பணம் செலுத்துவது தோல்வியடைந்தால் எப்படி திரும்பப்பெறுவது?
HRA கொடுப்பனவுக்கு வரி விலக்கு பெற தேவையான ஆவணங்கள்
HRA வரிவிலக்கு தொடர்பாக வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்தால், அதற்கு முறையாக பதிலளிக்க வேண்டும் என்று எஸ்ஏஜி இன்ஃபோடெக் எம்டி அமித் குப்தா கூறினார். HRA க்ளைம் செய்வதற்கான நிபந்தனைகளை அறிந்து கொள்வது முக்கியம் என்று குப்தா கூறுகிறார். முதலில் நீங்கள் வசிக்கும் வீட்டின் வாடகை ஒப்பந்தம் அவசியம். HRA விலக்கு கோருவதற்கான மிக முக்கியமான ஆவணம் இதுவாகும். கட்டணம் செலுத்தும் வழிமுறைகளும் வெளிப்படையாக இருக்க வேண்டும். நீங்கள் ஆன்லைன் பயன்முறையைப் பயன்படுத்தலாம் அல்லது வாடகையைச் செலுத்தி சரிபார்க்கலாம்.
நில உரிமையாளரின் பான் விவரங்கள் அவசியம்
உங்கள் வீட்டின் ஆண்டு வாடகை ரூ. 1 லட்சத்திற்கு மேல் இருந்தால், உங்கள் வீட்டு உரிமையாளரின் பான் விவரங்களைப் (PAN CARD) பெறுவது முக்கியம் வாடகை ரசீதில் PAN குறித்த சரியான விவரங்கள் எழுதப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்ப்பதும் முக்கியம். உங்கள் வீட்டு உரிமையாளரிடம் பான் எண் இல்லை என்றால், நீங்கள் படிவம் 60 உடன் PAN எண் இல்லை என்பதற்கான தகவலை உறுதி படுத்த வேண்டும். நீங்கள் நெருங்கிய உறவினரிடமிருந்து வாடகை ரசீதை வாங்கினால், இரு தரப்பினரும் தங்கள் வரிக் கணக்குகளில் அதைப் பற்றிய முழுமையான தகவலை வழங்குவது முக்கியம். வாடகை ரசீதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல் உங்கள் ITR ரிட்டனுடன் பொருந்த வேண்டும்.
மேலும் படிக்க | Business Idea: லட்சங்களை அள்ள... ‘முளை விட்ட’ கோதுமை மாவு பிஸினஸ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ