Business Idea: லட்சங்களை அள்ள... ‘முளை விட்ட’ கோதுமை மாவு பிஸினஸ்!

Business Idea:  சத்து மாவு தொழில் தொடங்க மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் மூலப்பொருட்கள் தேவைப்படும். இதற்கு சுமார் ரூ.1 லட்சம் செலவாகும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 13, 2023, 11:04 AM IST
  • வட இந்திய உணவு என்று அறியப்படும் சப்பாத்தி, தென்னிந்திய வீடுகளிலும் இன்றியமையாத உணவாகி விட்டது.
  • முளை விடும் போது தானியங்களின் சத்து இரட்டிப்பாகிறது.
  • பலரது வீடுகளில் காலை அல்லது இரவு காலை உணவாக பயன்படுத்தப்படுகிறது.
Business Idea: லட்சங்களை அள்ள...  ‘முளை விட்ட’  கோதுமை  மாவு பிஸினஸ்! title=

Business Idea: குறைந்த முதலீட்டில் தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு உதவிடும் வகையில், தொழில் குறித்து பேசுகையில், சத்தான சாப்பாத்தி தயாரிப்பதற்கான சத்து மாவு தயாரிக்கும் தொழில் (Nutritious Flour for Making Chapatti) சிறந்த தேர்வாக இருக்கும். அதிக கிராக்கி மற்றும் பம்பர் வருமானம் கொண்ட  இந்த வணிக யோசனையை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளலாம். இதை ஆரம்பித்தால் உடனே கோடீஸ்வரன் ஆகலாம். சத்து மாவு தயாரிப்புக்கு நகரங்கள் முதல் கிராமங்கள் வரை அதிக தேவை உள்ளது.  ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ள நிலையில், ஆர்கானிக் உணவுகளுக்கான தேவையும் சந்தையில் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இது மிகவும் பெயரளவிலான முதலீட்டில் தொடங்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் பெரிய பணத்தை சம்பாதிக்கலாம். உண்மையில், தற்போது சந்தையில் சுகாதார உணவுப் பொருட்களுக்கு அதிக தேவை உள்ளது.

இன்றைய காலகட்டத்தில் வட இந்திய உணவு என்று அறியப்படும் சப்பாத்தி, தென்னிந்திய  வீடுகளிலும் இன்றியமையாத உணவாகி விட்டது. பலரது வீடுகளில் காலை அல்லது இரவு காலை உணவாக பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தொழிலைத் தொடங்க (Business Idea), உங்களுக்கு பெரிய அளவில் முதலீடு தேவையில்லை. மேலும், பெரிய அளவில் டிமாண்ட் உள்ள வணிக சப்பாத்தி மாவு  வகை வணிகமாகும். அது தோல்வியடைவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. முளை விட்ட கோதுமை மாவை பயன்படுத்துவதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதனுடன், உடல் பருமன் மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. இதயம், சுகர், பிபி நோயாளிகளுக்கு இந்த மாவு அருமருந்தாக இருக்கும். முளை விடும் போது தானியங்களின் சத்து இரட்டிப்பாகிறது.

சத்தான மாவு எப்படி தயாரிக்கப்படுகிறது?

சப்பாத்தி தயாரிக்க பயன்படுத்தப்படும் சாதாரண மாவில் சத்தானதாக இருக்க சில பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. அதைத் தயாரிக்க, கோதுமை முளைக்க வைக்க வேண்டும். கோதுமையை 12 மணி நேரம் தண்ணீரில் வைத்திருந்த பிறகு, அதை வெளியே எடுத்து 12 மணி நேரம் நிழலில் உலர வைக்க வேண்டும். நன்றாக உலர்ந்த பிறகு, அதை மெஷினில் அரைக்க வேண்டும். 700 கிராம் மாவில், 50 கிராம் முருங்கை இலைப் பொடி, 100 கிராம் ஓட்ஸ் மாவு, 50 கிராம் வறுத்த ஆளி விதை பொடி, 50 கிராம் வெந்தய இலைப் பொடி அல்லது பெருங்காயப் பொடி, 25 கிராம் அஸ்வகந்தா, 25 கிராம் இலவங்கப்பட்டை பொடி ஆகியவற்றை கலக்க வேண்டும்.

சத்து மாவு மூலம் எவ்வளவு வருமானம்கிடைக்கும்?

சத்தான சத்து மாவு மொத்த விலையில் 60 ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில் 80 ரூபாய்க்கும் விற்கப்படும். இதனை தயாரிக்க ஆகும் செலவு விலை 30-35 ரூபாய். சந்தைப்படுத்துவதற்கு ஐந்து ரூபாய் செலவாகும். ரூ.1 லட்சத்தை முதலீடு செய்வதன் மூலம் இதைத் தொடங்கலாம், ஒவ்வொரு மாதமும் ரூ.40,000 - 50,000 வரை மிக எளிதாக சம்பாதிப்பீர்கள்.

மேலும் படிக்க | Business Idea: லட்சங்களில் வருமானம் தரும் ஆலோவேரா ஜெல் பிஸினஸ்... நீங்களும் தொடங்கலாம்!

உரிமம் சான்றிதழை பெறும் முறை

சத்தான மாவைத் தயாரிப்பதற்கு முன், மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் - மைசூர் மற்றும் தேசிய உணவுத் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவு மேலாண்மை நிறுவனம் ஆகியவற்றிலிருந்து உங்கள் தயாரிப்புகளுகான உரிமத்தை பெறலாம். காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையத்திடம் பதிவு செய்து உரிமம் பெறலாம் மற்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்திடமும் உரிமம் பெறலாம்.

மேலும் படிக்க | Business Tips: வெறும் ரூ.10,000 முதலீடு செய்தால் போதும்.. மாதம் 40,000-50,000 வரை சம்பாதிக்கலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News