புதுடெல்லி: பொதுத்துறை கடன் வழங்கும் பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank (PNB) ) செயலற்ற/செயல்படாத கணக்குகளை மூடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 3 வருடங்களாக இயக்கப்படாத கணக்குகள் தொடர்பாக இந்த அறிக்கை வெளிவந்துள்ளது. பல கணக்குகளில் வாடிக்கையாளர்களால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதையும், இந்தக் கணக்குகளில் பண இருப்பு ஏதும் இல்லை என்பதையும் கவனித்த பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பயன்படுத்தபடாமல் இருக்கும் இந்தக் கணக்குகள் தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவும், ஏதேனும் அபத்துகள் ஏற்படாமல் தடுக்கவும், அத்தகைய கணக்குகளை மூட வங்கி முடிவு செய்துள்ளது என்று வங்கி தெரிவித்துள்ளது.


மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கணக்கை இயக்காதவர்கள், ஜீரோ பேலன்ஸ் அல்லது கணக்கில் வங்கிக் கணக்கில் பண இருப்பு இல்லாதவர்கள், தங்கள் பிஎன்பி கணக்குகளை செயலுக்குக் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது. பலமுறை இந்தக் கோரிக்கைகளை விடுத்த பிறகும் பெரும்பான்மையான கணக்குகள் இயக்கப்படவோ அல்லது மூடப்படவோ இல்லை.


எனவே, இவை ஜூன் 1 அல்லது அதற்குப் பிறகு மூடப்படும் என்று வங்கி அறிவித்திருந்தது. வங்கிக்கணக்கு வைத்திருக்கும் அந்தந்த கிளையில் KYC ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் கணக்கை மீண்டும் செயல்படுத்திக் கொள்ளலாம்.


மேலும் படிக்க | 2 இடங்களில் நீட் தேர்வு மோசடி நடைபெற்றிருப்பதாக திடுக் தகவல்


ஜூன் முதல் தேதி வரை இந்த கால அவகாசம் கொடுக்கப்பட்ட போதிலும், வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தைத் தவிர்ப்பதற்காக, காலக்கெடுவை ஜூன் 30, 2024 வரை நீட்டிக்க வங்கி முடிவு செய்தது. அத்தகைய கணக்கு வைத்திருப்பவர்கள் 30 ஜூன் 2024 அதாவது அதற்கு முன் தங்கள் கணக்கை மீண்டும் செயல்படுத்துமாறு வங்கி நினைவூட்டியுள்ளது, கணக்கை செயல்படுத்தினால் அவர்கள் தடையின்றி வங்கிச் சேவைகளைப் பெற முடியும்.


30 ஜூன் 2024 க்குள் அந்தந்த கிளைகளில் KYC ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் கணக்கு செயல்படுத்தப்படாவிட்டால், இந்தக் கணக்குகள் எந்த அறிவிப்பும் இல்லாமல் ஜூலை 01, 2024 அன்று அல்லது அதற்குப் பிறகு மூடப்படும்.


கணக்குகள் மூடப்பட்டாலும், DEMAT உடன் இணைக்கப்பட்ட கணக்குகள், லாக்கர் வசதியை மட்டும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் வாடிக்கையாளரின் அந்த குறிப்பிட்டக் கணக்கு, 25 வயதுக்குட்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்ட மாணவர் கணக்குகள், சிறார்களின் கணக்குகள், PMJJBY/PMSBY/SSY/APY, DBT போன்ற குறிப்பிட்ட நோக்கத்திற்காக திறக்கப்பட்ட கணக்குகள் மற்றும் பிற சட்டப்பூர்வ கணக்குகளை பிஎன்பி வங்கி மூடாது.


வாடிக்கையாளர்கள், PNB இன் எந்த கிளையிலும் தங்கள் KYC-ஐ சமர்ப்பிக்கலாம். அது சுயசான்றளிக்கப்பட்ட ஆவணங்களாக இருக்க வேண்டும். மொபைல் வழியாக KYC புதுப்பிக்க, வாடிக்கையாளர் IBS/PNB ONE தொகுதியைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் அவர்களின் தற்போதைய முகவரி, ஆண்டு வருமானம் மற்றும் வருடாந்திர வருவாய் (பொருந்தினால்) ஆகியவற்றை உள்ளடக்கிய சுய-சான்றிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.


மேலும் படிக்க | நுழைவுத்தேர்வுகளுக்கான வடிவத்தை மாற்றிய NTA !புதிய தேர்வு தேதிகள் அறிவிப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ