KYC விதிகளை மாற்றும் RBI: ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக்கணக்குகள் வைத்திருப்பவர்களுக்கு சிக்கல்?

RBI Latest Update: நீங்களும் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருக்கும் நபராக இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 6, 2024, 08:59 AM IST
  • ஆர்பிஐ செய்யக்கூடிய மாற்றங்கள் என்ன?
  • இதனால் ஏற்படும் நன்மை என்ன?
  • இந்த புதிய விதி யாருக்கு பொருந்தும்?
KYC விதிகளை மாற்றும் RBI: ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக்கணக்குகள் வைத்திருப்பவர்களுக்கு சிக்கல்?  title=

RBI Latest Update: வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட் உள்ளது. வங்கிக் கணக்குகளின் பாதுகாப்பை அதிகப்படுத்த, இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளுடன் இணைந்து KYC விதிகளை கடுமையாக்கலாம் என்று கூறப்படுகின்றது. விரைவில், வங்கி வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் விவரங்களை சரிபார்ப்பதற்கான, அதாவது வெரிஃபை செய்வதற்கான வழிமுறைகளில் மற்றொரு அடுக்கை கூட்டலாம் என கூறப்படுகின்றது. இது குறித்து இந்த பதிவில் காணலாம். 

நம்மில் பெரும்பாலானோரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் (Bank Accounts) உள்ளன. நீங்களும் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருக்கும் நபராக இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். பொதுவாக, வங்கிகளில் நாம் கணக்கை திறக்க சென்றால், KYC படிவத்தை நிரப்புமாறு கேட்கப்படுகின்றது. இதில், கணக்கின் சரிபார்ப்பு அதாவது வெரிஃபிகேஷன் மற்றும் வாடிக்கையாளர் தகவல் தொடர்பான அனைத்து தகவல்களும் இருக்கும். அப்படி இருக்க, உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் இருந்து, அந்த கணக்குகளை நீங்கள் மொபைல் எண்ணுடன் இணைத்திருந்தால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். வங்கிகளுடன் இணைந்து இதற்கான வழிமுறைகளில் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) மாற்றங்களை கொண்டுவரக்கூடும். 

ஆர்பிஐ செய்யக்கூடிய மாற்றங்கள் என்ன?

வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளின் பாதுகாப்பை அதிகரிக்க, ஆர்பிஐ (RBI) வங்கிகளுடன் இணைந்து KYC விதிகளை கடுமையாக்கலாம் என கூறப்படுகின்றது. வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் சரிபார்ப்பு வழிமுறைகளில் கூடுதல் அடுக்கை கொண்டுவரலாம் என்றும் அதன் மூலம் பாதுகாப்பு இன்னும் பலப்படுத்தப்படலாம் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க | விமான டிக்கெட்களை குறைந்த விலையில் பெறுவது எப்படி?

இதனால் ஏற்படும் நன்மை என்ன?

- இதனால் வங்கி வாடிக்கையாளர்களின் (Bank Customers) கணக்கின் பாதுகாப்பு வளையம் அதிகரிக்கப்படும்.

- பண மோசடிகள், ஏமாற்று வேலைகள் குறைக்கப்படும்.

- கூட்டு கனக்குகளுக்கு (Joint Accounts), பான், ஆதார் மற்றும் தனிப்பட்ட மொபைல் எண் போன்ற பல வகை இரண்டாம் நிலை அடையாள முறைகளையும் ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகின்றது.

- ஒரு தனிநபரின் பல கணக்குகள் இணைக்கப்படாமலும், வெவ்வேறு KYC ஆவணங்களுடன் திறக்கப்படாமலும் இருந்தால், இரண்டாம் நிலை அடையாள வழிமுறை அதை கண்டுபிடிப்பதை எளிதாக்கும். 

- கூட்டு கணக்குகளுக்கு அகவுண்ட் அக்ரிகேட்டரை (AA) விரிவுபடுத்துவதற்கான உதவியும் இதன் மூலம் கிடைக்கும். 

- தற்போது, AA கட்டமைப்பின் கீழ் சிங்கிள் ஆபரேடட் தனிநபர் கணக்குகள் மட்டுமே நிதித் தகவலைப் பகிர்வதற்காக கவர் செய்யப்படுகின்றன. 

- அகவுண்ட் அக்ரிகேட்டர், வாடிக்கையாளரின் நிதிச் சொத்துக்கள் தொடர்பான தகவல்களை, அத்தகைய தகவல்களை வைத்திருப்பவர்களிடமிருந்து பெற்று, அவற்றை ஒருங்கிணைத்து, குறிப்பிட்ட பயனர்களுக்கு அதை வழங்குகின்றன.

இந்த புதிய விதி யாருக்கு பொருந்தும்?

இந்த புதிய விதி அமலுக்கு வந்தால், ஒரே எண்ணைக் கொண்டு கூட்டுக் கணக்கு மற்றும் பல கணக்குகளை வைத்திருப்பவர்கள் மீது அதிக தாக்கம் இருக்கும். பல கணக்குகள் இருந்தால், அவர்கள் KYC படிவத்தில் மற்றொரு எண்ணை உள்ளிட வேண்டும். கூட்டுக் கணக்காக இருந்தால், வாடிக்கையாளர்கள் மாற்று எண்ணையும் உள்ளிட வேண்டும். நிதித்துறை செயலர் டி.வி.சோமநாதன் தலைமையிலான குழு நிதித்துறை முழுவதும் இயங்கக்கூடிய KYC நெறிமுறைகளை உறுதி செய்யவும் தரப்படுத்தவும் செயல்பட்டு வருகிறது.ஃபின்டெக் நிறுவனங்களால் KYC விதிமுறைகளை தளர்த்துவது குறித்த தகவல்கள் சமீப காலங்களில் வங்கித் துறையில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளன. இது வங்கிகள் போன்ற கடன் வழங்குபவர்களுக்கு அபாயங்களை அதிகரிக்கக்கூடும். இதை நிவர்த்தி செய்வதை ஆர்பிஐ -இன் இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது

மேலும் படிக்க | ஸ்விகியுடன் கைக்கோர்த்த IRCTC! இதனால் பயணிகளுக்கு என்ன பயன்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News