புதுடெல்லி: தங்கத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. அதனால், சந்தை வல்லுநர்கள் தங்கம் வாங்க இது சரியான நேரம் என அறிவுறுத்துகிறார்கள். இதற்கிடையில், இந்த பண்டிகை காலத்தில், மலிவான தங்கத்தை வாங்குவதற்கான வாய்ப்பை மத்திய அரசு கொடுத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 2020-21 தங்கப் பத்திர முதலீட்டு திட்டத்தின் கீழ், அக்டோபர் 12 முதல் அக்டோபர் 16 வரை தங்கத்தில் முதலீடு செய்யலாம். இந்திய பத்திர விலை, கிராமுக்கு ரூ .5,051 என இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


2020-21 தங்கப் பத்திர முதலீட்டு திட்டத்தின் கீழ்,  முதலீட்டாளர்கள் தங்கத்தில் ஆன்லைனில் முதலீடு செய்யலாம். அதன் மூலம் ரூ .50 தள்ளுபடி பெறலாம். 


அந்நிலையில், முதலீட்டாளர்களுக்கு தங்கப் பத்திரத்தின் விலை கிராமுக்கு ரூ.5,001 என்ற விலையில் கிடைக்கும். 


தங்கப் பத்திரங்களை வாங்கும் முதலீட்டாளர்களுக்கு தங்கம் ஆவண வடிவில் கிடைக்கும். அதாவது தங்கம் உங்கள் கைகளுக்கு வராது, ஆவண வடிவில் இருக்கும். இது மிகவும் பாதுகாப்பானதும் கூட. ஏனென்றால், இதனை களவு போவதில் இருந்து பாதுகாக்கும் தேவையோ, கவலையோ இல்லை,


தங்க பத்திர திட்டத்தின் கீழ், (sovereign gold bond)  முதலீட்டாளர்கள் ஆண்டுக்கு அதிகபட்சம் 400 கிராம் தங்கப் பத்திரங்களை வாங்கலாம். குறைந்தபட்சமாக முதலீட்டாளர்கள்,  குறைந்தது ஒரு கிராம் தங்கத்தை வாங்குவது அவசியம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் வரியைச் சேமிக்க முடியும். ஏனென்றால் இதன் கீழ் ஜிஎஸ்டி வரி கிடையாது, ஆபரணமாக அல்லது காயினாக வாங்கும் போது தான் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். 


ALSO READ | Loan Moratorium: நீதிமன்றம் அரசின் நிதிக் கொள்கையில் தலையிட இயலாது-மத்திய அரசு


அறங்காவலர்கள், HUF கள், அறக்கட்டளைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு பத்திரங்களை விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.


தங்கப் பத்திரத்திற்கு விண்ணப்பிக்கும்போது உங்கள் பான் அட்டை எண்ணை வழங்க வேண்டும். 


தங்க பத்திரங்கள், வங்கிகள், போஸ்ட் ஆபீஸ்கள் மற்றும் பங்கு சந்தைகள் மூலம் விற்பனை செய்யப்படும்.


தங்க பத்திரம் முதிர்வு காலத்தில், அதிலிருந்து கிடைக்கும் முதலீட்டு வருமானத்திற்கு வரி விதிக்கப்படாது.


தங்க பத்திர முதலீட்டாளர்களுக்கு வருடத்திற்கு 2.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி உங்கள் வருமானமாக சேர்க்கப்பட்டு, அதற்கு நீங்கள் வருமான வரியும் செலுத்த வேண்டியிருக்கும். வட்டி வருவாயில் டிடிஎஸ் எனப்படும் வரிப்பிடித்தம் செய்யப்படுவதில்லை.


தங்க முதலீட்டு பத்திர திட்டத்தின் கீழ், முதலீட்டாளர்கள் ஆண்டுக்கு அதிகபட்சம் 400 கிராம் தங்கப் பத்திரங்களை வாங்கலாம்.


 2020-21  தங்கப் பத்திரத் திட்டத்தில், அக்டோபர் 12 முதல் அக்டோபர் 16 வரை தங்கத்தில் முதலீடு செய்யலாம்.


மேலும் படிக்க | ஊரக பகுதியில் 100% குழாய் நீர் வழங்கும் மோடியின் கனவு திட்டத்தை நனவாக்கிய கோவா..!!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe