Loan Moratorium: நீதிமன்றம் அரசின் நிதிக் கொள்கையில் தலையிட இயலாது-மத்திய அரசு

அக்டோபர் 2 ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வாக்குமூலத்தில், கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் வட்டிக்கு வட்டி விதிப்பதை தள்ளுபடி செய்து அதன் சுமையை ஏற்க அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 10, 2020, 02:07 PM IST
  • அக்டோபர் 2 ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வாக்குமூலத்தில், கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் வட்டிக்கு வட்டி விதிப்பச்தை தள்ளுபடி செய்து அதன் சுமையை ஏற்க அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • ஆறு மாத கால கத்திற்கு, ரூ .2 கோடி வரை கடன்களுக்கு வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளதாக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
Loan Moratorium: நீதிமன்றம் அரசின் நிதிக் கொள்கையில் தலையிட இயலாது-மத்திய அரசு title=

அரசின் நிதிக் கொள்கையில் நீதிமன்றங்கள் தலையிட இயலாது என்று வலியுறுத்திய மத்திய அரசு, தற்போது நிலவி வரும் கோவிட் -19 தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில் கடன் தவணை சலுகையை மேலும்,நீட்டிக்க இயலாது என்று உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

அக்டோபர் 2 ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வாக்குமூலத்தில், கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் வட்டிக்கு வட்டி விதிப்பதை தள்ளுபடி செய்து அதன் சுமையை ஏற்க அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

"ரூ .2 கோடி வரை கடன்களுக்கான வட்டிக்கு வட்டி மீதான தள்ளுபடி தவிர வேறு எந்த நிவாரணமும் வழங்க இயலாது என்றும், அவ்வாறு வழங்கினால், அது  பொருளாதாரத்தையும் வங்கித் துறையையும் பாதிக்கும் என்றும் " என்று அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தனது சமீபத்திய அறிக்கையில் கூறியுள்ளது.

ALSO READ | உலகில் இந்திய முஸ்லிம்கள் சகல உரிமைகளுடன் அதிக மகிழ்ச்சியாக உள்ளனர்: RSS தலைவர்

ஆறு மாத கால கத்திற்கு, ரூ .2 கோடி வரை கடன்களுக்கு வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளதாக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

சில்லறை மற்றும் எம்.எஸ்.எம்.இ (சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்) நிறுவனத்தை சேர்ந்த கடன் வாங்குபவர்களுக்கு வட்டி தள்ளுபடி பொருந்தும். தவிர, கல்வி, வீட்டுவசதி, நுகர்வோர் பொருட்கள் மற்றும் வாகனக் கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகைகளுக்காக தனிநபர்கள் வாங்கிய  கடன்களுக்கும் இந்த சலுகை உண்டு. 

 2020 மார்ச் 1 முதல் ஆறு மாதங்களுக்கு கடன் தவணை சலுகையை ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. தொற்று நோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வணிகங்கள் மற்றும் தனிநபர்கள் சந்திக்கும் நிதிப் பிரச்சினையை கருத்தில், கடன் தவணை செலுத்தும் சலுகை  அறிவித்து, அதற்கான ஆறு மாத கால அவகாசம் ஆகஸ்ட் 31 அன்று முடிந்தது.

மேலும் படிக்க | ஊரக பகுதியில் 100% குழாய் நீர் வழங்கும் மோடியின் கனவு திட்டத்தை நனவாக்கிய கோவா..!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News