காதலர் தினத்தன்று ‘இந்த’ தொழில் செய்தால் செம லாபம் பார்க்கலாம்!
பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி கொண்டாடப்படும் காதலர் தினத்தன்று, பல வணிகர்களுக்கு லாபம் இருக்கிறது. அதில், சில தொழில்கள் நல்ல லாபத்தையும் தரும். அவை என்னென்ன தொழில்கள் தெரியுமா?
இந்த உலகில் கொண்டாடப்படும் எந்த பண்டிகையை எடுத்துக்கொண்டாலும் அதன் பின்னால் ஒரு பெரிய வணிக காரணம் இருக்கும் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. உதாரணத்திற்கு கிறிஸ்துமஸ் தினத்தை எடுத்துக்கொண்டால் கேக்கிற்கும், சாக்லேட்டுகளுக்கும், பரிசு பொருட்கள் விற்கும் கடைகளுக்கும்தான் வணிகம் அதிகமாக நடைபெறும். இப்படி, காதலர் தினத்திற்கு பின்னாலும் பெரிய வணிக மார்கெட் இயங்குகிறது. இந்த காதலர் தின சீசனில் சில வியாபாரங்களை பெரிய லாபம் பார்க்கலாம். அவை என்னென்ன தெரியுமா?
பூக்கள் இல்லாமல் காதலர் தினமா?
காதல் என்றவுடனே அனைவருக்கும் நினைவிற்கு வருவது, ரோஜா பூக்கள்தான். “அந்த காலத்தில்தான் காதலர் தினத்தன்று பூ கொடுத்து ப்ரப்போஸ் செய்தனர்..இந்த காலத்திலும் அது தொடருமா..?” என்று கேட்டால், பெரும்பாலானோருக்கு இன்னும் பழைய காலத்து வழிமுறைகள் பிடித்திருக்கிறது என்பது பதிலாக இருக்கும். பையில் பணம் வைத்திருப்பவர்கள், தங்களின் அன்புக்குரியவர்களுக்கு ஒரு செண்டு ரோஜாப்பூவையோ, அல்லது அவர்களுக்கு பிடித்த பூவையோ வாங்கிக்கொண்டு போய் கொடுப்பர். சிம்ப்ளிசிட்டி பிடித்தவர்கள், ஒரே ரோஜாவை வாங்கிக்கொண்டு போய் கொடுப்பர். எப்படியோ, ரோஜாவிற்கு காதலர் தினத்தன்று தட்டுப்பாடு இருக்கும் என்பது உண்மையே. அதனால் ரோஜா வியாபாரம் செமையாக கலைக்கட்டும் என்பதில் ஐயமில்லை.
பேக்கிங்:
காதலர் தினத்தன்று பலர் கேக் வெட்டி கொண்டாடுவதுண்டு. ஒரு சிலர், ஸ்பெஷலாக சில அன்பு செய்திகளுடன் கேக் ஆர்டர் செய்வர். பேக்கிங் தெரிந்தவர்களுக்கு இது ஒரு பொற்காலம் ஆகும். இந்த நாளில் காதலர் தினத்திற்காக ஸ்பெஷல் ஆஃபர் போட்டு, கேக்குகளை விற்கலாம்.
ஆன்லைன் ப்ளாக்:
டிஜிட்டல் மார்கெட்டிங் தளம் தற்போது புதிய உயரங்களை தொட்டு வருகிறது. காதலர் தினம் வரவுள்ளதை அடுத்து புதிதாக ஒரு ப்ளாக் தளத்தை தொடங்கலாம். இதனை இலவசமாக தொடங்குவதற்கு என்று சில தளங்கள் இருக்கின்றன. அவற்றில் உங்கள் இணையதளத்தில் தொடங்கலாம். இந்த நாளில், காதலர்களுக்கான டிப்ஸ்களை பதிவிடுவது, காதலர் தின ரெசிபிகளை போடுவது ஆகியவை ஹிட் அடிக்கும். கிஃப்ட் ஐடியாக்கள், ப்ரப்போஸ் செய்ய ஐடியாக்கள் ஆகியவை பல பார்வையாளர்களை கவரலாம்.
மேலும் படிக்க | மிடில் கிளாஸ் மக்களுக்கு கொண்டாட்டம்: மத்திய அரசின் புதிய வீட்டு வசதி திட்டம்
பார்ட்டி அமைப்பாளர்கள்..
சென்னையில் பல இடங்களில் ஆங்காங்கே பார்டிக்கள் நடைபெறும். இதை சீசனுக்கு ஏற்றவாறு பார்ட்டி அமைப்பாளர்கள் அமைப்பர். அந்த வகையில், காதலர் தினத்தன்று காதலர்களுக்காக மட்டுமன்றி, சிங்கிள்ஸ்களுக்காகவும் பார்ட்டி ஏற்பாடு செய்து, அதற்காக தள்ளுபடி கொடுத்து டிக்கெட்டுகளை விற்கலாம். சிங்கிள்ஸ் மீட், கெட் டு கெதர் போன்றவை நல்ல பார்டிக்கான ஐடியாக்கள் ஆகும். இதை வைத்தும் சென்னை, மும்பை, பெங்களூரு போன்ற இடங்களில் பெரிய வணிகம் இயங்கி வருகிறது.
உணவகங்கள் எப்படி லாபம் பார்க்கின்றன?
உணவகங்களிலும் காதலர் தினம் ஒன்று பல சிறப்பு தள்ளுபடிகள் தரப்படுகின்றன. காதலர் தினத்தன்று ஜோடியாக வருபவர்களுக்கு காம்ப்ளிமன்ட்ரியாக உணவு கொடுப்பது, காம்போ ஆஃபர் போடுவது போன்ற விஷயங்கள் நடைபெறும். இரவு டின்னருக்கு காதலர் தினத்தன்று பல உணவகங்களில் ரிசர்வேஷன் செய்யப்பட்டு அதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படும்.
மேலும் படிக்க | PM Vishwakarma Yojana: தினமும் ரூ.500 தரும் அரசு.. நீங்களும் பெறலாம், இதோ விதிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ