Multiple Bank Accounts: இன்றைய உலகில் பண பரிமாற்றத்திற்கு வங்கிகளின் தேவை அதிகளவில் உள்ளது.  டிஜிட்டல் முறையில் சில நிமிடங்களில் நம்மால் ஒரு வங்கி கணக்கை திறக்க முடியும்.  வங்கி துறையில் வந்துள்ள புது புது அப்டேட்கள் வாடிக்கையாளர்களுக்கு நிறைய வசதிகளை வழங்கி வருகிறது. 24 மணி நேரமும் எங்கிருந்தும், யாருக்கு வேண்டுமானாலும் டிஜிட்டல் மூலம் பணம் அனுப்பும் வசதி, ஆன்லைனில் KYC பதிவு, ஆன்லைனில் புதிய வங்கி கணக்கு திறப்பு செயல்முறை என பல விஷயங்களை சொல்லலாம். வங்கியின் தேவை அதிகரித்து வரும் நிலையில், வங்கிகளின் எண்ணிக்கையும் அதிகமாகி உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | உங்கள் சிறுதாெழிலில் இருந்து அதிக வருமானம் பார்க்கலாம்! ‘இதை’ மட்டும் செய்யுங்கள்..


தற்போது நிறைய தனியார் வங்கிகள் தங்களது சேவையை வழங்கி வருகின்றன. இதனால் வாடிக்கையாளர்களும் நிறைய வங்கி கணக்குகளை திறக்கும் நிலை ஏற்படுகிறது.  ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை ஒரே சமயத்தில் பராமரிப்பது மிகவும் கடினம்.  ஏனெனில் ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமான வழிமுறைகளை வைத்துள்ளன. நிறைய வங்கி கணக்குகளை வைத்திருந்தால் என்ன என்ன பிரச்சனைகள் வரும் என்றும், அதனை எப்படி சமாளிப்பது என்றும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.  


மினிமம் பேலன்ஸ்


நிறைய கணக்குகளை வைத்திருப்பதில் ஏற்படும் முதல் சிக்கல் என்னவென்றால் ஒவ்வொரு வங்கி கணக்கிலும் குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் வைத்திருப்பதாகும்.  தற்போது பெரும்பாலான வங்கிகள் சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை அதிகப்படுத்தி உள்ளன. மேலும் இதனை பராமரிக்க தவறினால் அதற்கும் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.  மேலும், தற்போதைய டிஜிட்டல் உலகில் ஆன்லைன் மோசடி மற்றும் ஏமாற்று வேலைகளும் அதிகரித்து வரும் நிலையில், நிறைய வங்கி கணக்குளை வைத்திருப்பது இந்த மோசடியில் சிக்க வழிவகுக்கும். எனவே, ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குளை வைத்திருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.  


வங்கி கட்டணம்


ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருந்தால் ஏற்படும் அடுத்த பிரச்சனை வங்கிக் கணக்குகளின் செயலற்ற தன்மை ஆகும். பல வங்கி கணக்குகளை பயன்படுத்தும் போது, அதில் சில வங்கிகளை மட்டுமே அடிக்கடி பயன்படுத்துவோம். இதனால் மற்ற வங்கி கணக்குகள் பராமரிப்பின்றி இருக்கும்.  பிறகு நீண்ட நாட்கள் எந்தவித பரிவர்த்தனைகளும் இல்லாமல் போகும் போது வங்கி அந்த குறிப்பிட்ட கணக்கை நீக்கலாம் அல்லது மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர கூடுதல் கட்டணங்கள் வசூல் செய்யவும் வாய்ப்புள்ளது. இந்த பிரச்சனைகளை தவிர்க்க அவ்வப்போது அனைத்து வங்கி கணக்குகளிலும் குறைந்த தொகையில் பரிவர்த்தனை செய்து கொள்வது நல்லது.  


வங்கி சேவை


நிறைய வங்கிகள் வாடிக்கையாளரை தங்கள் வங்கிக்குள் கொண்டுவர நிறைய இலவச திட்டங்களை வழங்கி வருகின்றன.  அதில் சில சேவைகள் இலவசம் என்றாலும், சில சேவைகளுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படலாம். பெரும்பாலும் அவற்றை பற்றி வாடிக்கையாளர்களுக்கு தெரிவதில்லை. ஆரம்பத்தில் சிறிய தொகையாக இருக்கும் இவை, பின்னாலில் பெரிய தலைவலியாக மாற கூடும்.  எனவே ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்கு என்றாலும் அவற்றிலும் சில சேவை கட்டணம் இருக்கலாம். கவனமுடன் இருப்பது நல்லது. இரண்டு முதல் மூன்று வங்கிக் கணக்குகளை ஒரே நேரத்தில் நிர்வகிப்பது சிலருக்கு எளிதாக இருந்தாலும், அவற்றில் இருந்து சிறு சிறு தொகை கழிக்கப்படும் போது பெரிதாக கண்டுகொள்வதில்லை. எனவே, ஒவ்வொரு ரூபாயிலும் கவனம் செலுத்தி மோசடிகளில் இருந்தும் காப்பாற்றி கொள்வது நல்லது.  


மேலும் படிக்க | 30 வயதுக்கு மேலானவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சேமிப்பு திட்டம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ