ஒரு கோடி ரூபாயின் மதிப்பு 10, 15, 20 ஆண்டுகளில் என்ன? தெரியுமா
சேமிப்பு மற்றும் முதலீடு செய்வதற்கு முன்னதாக கவனத்தில் கொள்ள வேண்டிய அடிப்படை அம்சம் என்ன தெரியுமா? பணவீக்கம்…
வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பது ஒரு கலை என்றால், அதை எதிர்கால தேவைகளுக்காக திட்டமிட்டு சேமிப்பது மிகவும் முக்கியமான கலையாகும். லட்சக்கணக்கில் சம்பாதிப்பவர்கள் கூட சரியாக முதலீடு செய்யாததால், பிற்காலத்தில் பணப் பற்றாக்குறையால் திண்டாடுவதை பார்க்கிறோம்.
பலர் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் செலவளித்துவிட்டு, மிகவும் கறாராக சேமிப்பார்கள். ஆனால் அவர்களும் எதிர்காலத்தில் பணப் பற்றாக்குறையால் வருத்தப்படுவதைக் காண்கிறோம்.
வருமானம் என்னவாக இருந்தாலும், அதை முறையாக சேமிப்பதே நமது எதிர்காலத்திற்கும், குடும்பத்தின் நலனுக்கும் ஏற்றது. சேமிப்பு மற்றும் முதலீடு செய்வதற்கு முன்னதாக கவனத்தில் கொள்ள வேண்டிய அடிப்படை அம்சம் என்ன தெரியுமா? பணவீக்கம்…
Also Read | போலி ரூபாய் நோட்டுகள் புழக்கம் அதிகரிப்பு, அடையாளம் காண்பது எப்படி? - RBI
பணவீக்கம் என்பதை சுலபமாக புரிந்துக் கொள்ளலாம். இன்று ஒரு கோடி ரூபாய்க்கு நீங்கள் வாங்கும் பொருளை 20 ஆண்டுகளுக்கு பிறகு அதே தொகையில் வாங்கிவிட முடியுமா? அல்லது, நீங்கள் பத்தாம் வகுப்பு படிக்கும்போது கல்விக்கட்டணமாக செலுத்திய தொகையையும், இன்று உங்கள் குழந்தைக்கு நீங்கள் செலுத்தும் கல்விக் கட்டணத்தையும் ஒப்பிட்டுப் பார்ஹ்ட்தால் போதும்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் குழந்தையை உயர்கல்விக்கு அனுப்ப விரும்புகிறீர்கள், அதற்கான செலவு இன்று 15 லட்சம் ரூபாய் செலவாகும் என்றால் அதே இருபது வருடங்களில் 40 லட்சம் ரூபாய் செலவாகும். எனவே உங்கள் இலக்கு என்ன என்பதை கவனத்தில் கொண்டு அதை பூர்த்தி செய்வதற்கு பணவீக்கம் என்ன என்பதை தெரிந்துக் கொண்டு சேமிக்க வேண்டும்.
ஒரு கோடி ரூபாயைச் சேமிக்க விரும்பினால், பல எஸ்ஐபி கால்குலேட்டர்கள் அல்லது மாதாந்திர சேமிப்புக் கணக்கீடுகள் உள்ளன, அவை மாதாந்திர அடிப்படையில் நீங்கள் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதை அறிய உதவும். எடுத்துக்காட்டாக, 20 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் 10000 ரூபாய்க்கு முதலீடு செய்வதன் மூலம் ஒரு கோடி ரூபாய் சேமிக்க முடியும், ஆண்டுக்கு 12 சதவீத வளர்ச்சி விகிதம் என்ற கணிப்பின் அடிப்படையில் இந்த கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Also Read | அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்க போகும் இந்த “5” ரூபாய் நோட்டு உங்க கிட்ட இருக்கா..!!!
ஆனால், பணவீக்கம் நீண்ட காலத்திற்கு ஒரே மாதிரியாக இருக்கும் என்று குறைவாக மதிப்பிட்டு விட முடியாது. பணவீக்கம் ரூபாயின் வாங்கும் சக்தியை குறைக்கிறது என்பதையும் பணத்தின் மதிப்பு காலப்போக்கில் குறையும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
5 சதவீத பணவீக்கம் நாட்டில் இருப்பதாக எடுத்துக் கொண்டால், இன்றைய ஒரு கோடி ரூபாயின் மதிப்பு மதிப்பு சுமார் 48 லட்சம் ரூபாயாக இருக்கும்! 20,25 மற்றும் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு கோடி ரூபாய் மதிப்பு முறையே ரூ. 37.68 லட்சம், ரூ. 29.53 லட்சம் மற்றும் ரூ .23 23.13 லட்சம் என்று குறைந்துவிடும்.
பொருளாதாரத்தில் பொதுவான பணவீக்கம் 5-6 சதவீதமாக இருக்கலாம் என்பது பொதுவான கணக்கு. அதிலும், கல்வி மற்றும் மருத்துவத் துறைக்களில் பணவீக்கம் மிக அதிகமாக இருக்கும். அதாவது எதிர்காலத்தில் கல்விக்கும், மருத்துவ சிகிச்சைக்கும் செய்யப்படும் செலவு, பிற செலவுகளை விட அதிகமாக இருக்கும்.
எனவே, பணவீக்கம் உங்கள் முதலீடுகளைத் திட்டமிடுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது, குறிப்பாக வயதான காலத்தில் ஓய்வூதியம் தொடர்பான முதலீடுகளில் அதிக கவனம் செலுத்தவேண்டும். .
அரசாங்கம் சமீபத்தில் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் சில்லறை பணவீக்கம் 2021 மே மாதத்தில் 6.30 சதவீதமாக உயர்ந்துள்ளது, இது ரிசர்வ் வங்கி கணித்த 6 சதவீதத்திற்கு அதிகம் என்பதை கவனத்தில் ககொள்ள வேண்டும்!
Also Read | இந்த 500 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால் ஆயிரக்கணக்கில் அள்ளலாம்!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR