புதுடெல்லி: நாட்டில் மின்சார வாகனங்களின் (Electric vehicles) வணிகத்தில் நிறுவனங்கள் மிகவும் தீவிரமாக செயல்படுகின்றன. ஹீரோவின் (Hero) எலக்ட்ரிக் பைக்கிற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்திருக்கிறது. இனிமேல் ஈ-பைக்கின் டெலிவரிக்கு அதிக காலம் எடுக்காது.   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹீரோ எலக்ட்ரிக் (Hero Electric) தனது மின்சார பைக்குகளின் விநியோகத்தை விரைவுபடுத்துவதற்காக ஈ-மொபிலிட்டி ஸ்டார்ட்அப் (E-mobility startup), eBikeGO உடன் இணைந்துள்ளது என்று பி.டி.ஐ தெரிவித்துள்ளது. இந்த இணைப்பால் வாகனங்களின் (Vehicle) விநியோகம் எளிதாகும். இந்த ஒப்பந்தத்தின் மூலம், நிறுவனம் 1000 மின்சார பைக்குகளை வழங்கும்.  


ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்திடமிருந்து, ஈ-மொபிலிட்டி ஸ்டார்ட்அப் (E-mobility startup) பைக்குகளை வாங்கும். இவற்றில் 120 பைக்குகளை (Bike) ஏற்கனவே eBikeGOவுக்கு கொடுத்துவிட்டதாக Hero நிறுவனம் தெரிவித்துள்ளது.


Also Read | ஜாதிப் பெயரை காரில் எழுதிய Lucknow இளைஞருக்கு நோட்டீஸ்


இந்த கூட்டாண்மை மூலம், மின்சார வாகன தொழில்நுட்பம் (Technology) மற்றும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) ஆகியவை பெட்ரோல் (Petrol) முதல் மின்சாரம் வரை அனைத்தும் இயல்பாக செயல்படுத்தபப்டும். இரு நிறுவனங்களின் நிபுணத்துவத்துடன் இந்த முன்முயற்சி நல்ல பலனைத் தரும் என்று நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


”ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தில், கடைசி மைல் விநியோக இணைப்பை தீர்க்க மின்சார வாகனங்களுக்கு (Vehicles) செல்வதே சிறந்த வழி என்று நம்புகிறோம். எங்களிடம் பல கூட்டாளர்கள் உள்ளனர், அவர்கள் வணிகத்திற்காக மட்டுமல்லாமல், நுகர்வோருக்கு மலிவான விலையில் வாகனங்களை எவ்வாறு கொடுப்பது என்பதையும் பரிசீலித்து” ஹீரோ எலக்ட்ரிக் (Hero Electric) நிறுவனத்தின் எம்.டி., நவீன் முன்ஜால் தெரிவித்தார்.


இந்த ஒப்பந்தத்தின் மூலம், நாட்டில் 600 க்கும் மேற்பட்ட டீலர் நெட்வொர்க்குகள் மூலம் eBikeGO நிறுவனத்திற்கு, ஹீரோ எலக்ட்ரிக் Service support உட்பட எல்லாவிதமான ஆதரவையும் வழங்கும். மும்பை, பெங்களூரு, டெல்லி, அமிர்தசரஸ் மற்றும் ஜெய்ப்பூர் (Mumbai, Bengaluru, Delhi, Amritsar, Jaipur) ஆகிய இடங்களில் பைக்குகளை சந்தா அடிப்படையில் eBikeGO வழங்குகிறது. இந்த தொடக்கமானது 640 பயனர்களுடன் தொடங்கியது, இது இன்று எட்டு நகரங்களில் 18000 க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.


Also Read | Dubaiஇல் PUBG மொபைல் குளோபல் சாம்பியன்ஷிப், பரிசுத் தொகை 20 லட்சம் USD


பைக்குகளை வாடகைக்கு விடும் சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது


ஹீரோ எலக்ட்ரிக் தலைமை நிர்வாக அதிகாரி சோஹிந்தர் கில் கூறுகையில், பைக் வாங்குவதற்கு பதிலாக, பைக்கை வாடகைக்கு எடுக்கும் கலாசாரம் வேகமாக உருவாகி வருகிறது. EBikeGO உடன் கூட்டாளராக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் ஒன்றாக இணைந்து வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை வழங்க முடியும் என்று எதிர்பார்க்கிறோம். Nyx போன்ற பைக்கை அறிமுகப்படுத்தியதன் மூலம், ஹீரோ B2B வாடிக்கையாளர்களின் வரவேற்பையும் பெறுகிறது என்று சோஹிந்தர் கில் கூறுகிறார்.


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR