கொரோனா தொற்றால் பணியிழந்த இளைஞர்களுக்கு பகுதி நேர வேலை அளிக்க அமேசான் இந்தியா (Amazon India) முன்வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு மணி நேரத்திற்கு ₹140 வரை சம்பாதிக்கலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா (COVID-19) காரணமாக அதிகமான மக்கள் வேலை இழந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அமேசான் பலருக்கு பகுதிநேர வேலை அளித்து சம்பாதிக்க வாய்ப்பளித்துள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. 


READ | வீடு தேடி வரும் மதுபானம்... இனி Amazon மற்றும் BigBasket பயன்பாட்டிலும்!...


இதுதொடர்பான அறிவிப்பில், உலகின் பெரிய பணக்காரரான ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) தனது ஃப்ளெக்ஸ் ஃப்ரீலான்ஸ் டெலிவரி திட்டத்தை (Flex Freelance Delivery Program) இந்தியாவில் 35-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளார். இந்த சேவையின் மூலம், பயனர்கள் தங்களது ஓய்வு நேரத்தில் ஒரு நாளைக்கு ரூ.120 முதல் ரூ.140 வரை சம்பாதிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட, ஃப்ளெக்ஸ் டெலிவரி திட்டம் (Flex Freelance Delivery Program), பயனர்கள் நிறுவனத்துடன் சேரவும், தன்னீட்சையாக வேலை செய்யவும் தொகுப்புகளை வழங்குகிறது.


முன்னதாக 3 நகரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இந்த சேவை கடந்த ஆண்டு ஜூன் 2019-ல் தொடங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த சேவை (2020 ஜூன் மாதத்தில்) 35 நகரங்களுக்கு விரிவு படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், மெட்ரோ நகரங்கள் மற்றும் மெட்ரோ அல்லாத நகரங்களான ராய்ப்பூர், ஹூப்ளி, குவாலியர் மற்றும் நாசிக் போன்ற மக்களுக்கு ஆயிரக்கணக்கான பகுதிநேர வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா காரணமாக பெரும்பாலான மக்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்கிறார்கள். இதன் காரணமாக வீட்டு விநியோகத்திற்கான தேவையும் அதிகரித்து வருகிறது. அதேவேளையில் பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் வேலையிழப்புக்கு காரணமாகியுள்ளது.


READ | Amazon, Flipkart-க்கு போட்டியாக வருகிறது பாரத் eMarket; ஒரு இந்திய படைப்பு!


இந்நிலையில் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ள இந்த சேவையில், பகுதிநேர வேலை செய்ய விரும்பும் பயனர்கள், விநியோக கூட்டாளிகள், பதிவுபெற்று தங்கள் அட்டவணையைத் தேர்வுசெய்து, தொகுப்புகளை வழங்கலாம். மேலும், இதை எளிதாக்க, அமேசான் ஃப்ளெக்ஸ் பயன்பாட்டைப் பயன்படுத்தி இந்த சேவையை நீங்கள் செய்யலாம். 


மேலும் தகவலுக்கு பயனர்கள் https://flex.amazon.in என்ற இணையதளத்தையும் பார்வையிடலாம். நிறுவனம் கூறுகையில், அவர்கள் தங்கள் ஃப்ளெக்ஸ் கூட்டாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முழு கவனிப்பையும் எடுப்பார்கள் என தெரிகிறது.