Amazon, Flipkart-க்கு போட்டியாக வருகிறது பாரத் eMarket; ஒரு இந்திய படைப்பு!

இந்தியாவில் பூட்டுதல் மற்றும் கொரோனா நெருக்கடிக்கு இடையே சில்லறை விற்பனையாளர்களின் அமைப்பான அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பின் (CAIT)-மின் வணிக தளமான பாரத் இமார்க்கெட் அடுத்த மாதத்தில் தொடங்கப்பட உள்ளது.

Last Updated : May 5, 2020, 09:16 PM IST
Amazon, Flipkart-க்கு போட்டியாக வருகிறது பாரத் eMarket; ஒரு இந்திய படைப்பு! title=

இந்தியாவில் பூட்டுதல் மற்றும் கொரோனா நெருக்கடிக்கு இடையே சில்லறை விற்பனையாளர்களின் அமைப்பான அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பின் (CAIT)-மின் வணிக தளமான பாரத் இமார்க்கெட் அடுத்த மாதத்தில் தொடங்கப்பட உள்ளது.

CAIT பொதுச் செயலாளர் பிரவீன் காண்டேல்வால் செவ்வாய்க்கிழமை இந்த தகவலை தெரிவிதுள்ளார். இந்த போர்ட்டல் குறித்து பணிகள் மிக வேகமாக நடந்து வருவதாகவும், விற்பனையாளர்களின் பதிவு தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

முன்னதாக இந்த அமைப்பு கடந்த வாரம் போர்ட்டலின் பெயரை வெளியிட்டது. விநியோகஸ்தர்கள், மொத்த விற்பனையாளர்கள், பிராண்டுகள், சில்லறை விற்பனையாளர்கள் முதல் சிறு வணிகர்கள் வரை பாரத் இமார்க்கெட் மூலம் பொருட்கள் விற்பனைக்கு பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரத் இமார்க்கெட் ஆன்லைன் மளிகை விற்பனையுடன் தொடங்கும் எனவும், பின்னர் பிற வகை பொருட்களை பட்டியலிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CAIT-ன் இந்த சந்தை இடம் பிளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டீல் மற்றும் ரிலையன்ஸின் வரவிருக்கும் ஜியோமார்ட் போன்ற பெரிய நிறுவனங்களுடன் போட்டியிடும். கைத்தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான இந்திய அரசுத் துறையுடன் (DPIIT) கூட்டாக CAIT இந்த போர்ட்டலைத் தொடங்கும்.

போர்ட்டலில் பொருட்களைத் தேடிய பிறகு, முதலில் உங்கள் ஐந்து கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கடையில் இருந்து பொருட்களை வாங்குவதற்கான விருப்பத்தையும் இது அளிக்கிறது. மற்றும் இரண்டு மணி நேரத்தில் பொருட்கள் விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கூடுதல் நன்மையாக இந்த போர்ட்டலில் இருந்து பொருட்களை ஆர்டர் செய்வதற்கு நீங்கள் விநியோக கட்டணங்களை செலுத்த வேண்டியதில்லை.

இந்த போர்ட்டல் ஒரு முழுமையான உள்நாட்டு போர்ட்டலாக இருக்கும் என்றும் அதில் ஒரு ரூபாய் கூட வெளிநாட்டு முதலீடு இருக்காது என்றும் காண்டேல்வால் குறிப்பிட்டுள்ளார். CAIT விற்பனையாளர்களிடம் எந்த கமிஷனும் கட்டணமும் வசூலிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தளம் லக்னோ, கான்பூர் பிரயாகராஜ், கோரக்பூர், வாரணாசி, மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் ஒரு பைலட் திட்டமாக தொடங்கப்பட்டுள்ளதாக கண்டேல்வால் முன்பு தெரிவித்திருந்தார். அவரைப் பொறுத்தவரை, இந்த திட்டத்திற்கு சில்லறை விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பைலட் திட்டத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களைப் பயன்படுத்துவதன் மூலம் சேவைகள் சிறப்பாக இருக்கும் என்று அவர் கூறினார்.

Trending News