இனி வீட்டிலிருந்தே டீசல் ஆர்டர் செய்யலாம்: Door delivery செய்யப்படும்
புனேவைச் சேர்ந்த இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் சேதன் மற்றும் அதிதி போஸ்லே மொபைல் பெட்ரோல் பம்புகள் மூலம் டீசலை வீட்டுக்கு வழங்குகிறார்கள்.
உங்கள் ஹௌசிங் சொசைடியில் ஜெனரேட்டருக்கு டீசல் தேவைப்பட்டாலோ, அல்லது உங்களது ஏதாவது இயந்திரத்திற்கு அடிக்கடி டீசல் தேவைப்பட்டாலோ, நீங்கள் இனி அடிக்கடி பெட்ரோல் பங்கிற்கு செல்ல தேவையில்லை.
ரத்தன் டாடா ஆதரவு
ஒரு புதுமையான முயற்சியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு ஸ்டார்ட் அப் இதற்கான தீர்வை அளிக்கிறது. இந்த ஸ்டார்ட் அப்புக்கு ரத்தன் டாடா (Ratan Tata) தன் ஆதரவை அளித்துள்ளார். ரிபோஸ் எனர்ஜி என்ற இந்த ஸ்டார்ட் அப் மூலம் டீசலை வீட்டுக்கு வர வழைக்கலாம்.
வீடு வீடாக சென்று டீசல் டெலிவரி செய்யும் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம், ஆயில் மார்கெட்டிங் நிறுவனங்களுடன் சேர்ந்து டெல்லி, குருகிராம், ஹரியானா, உத்தரபிரதேசம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாபில் தனது சேவையைத் தொடங்கியுள்ளது. இந்த சேவை மற்ற நகரங்களுக்கும் பரவும் என நிறுவனம் கூறியுள்ளது.
புனேவைச் (Pune) சேர்ந்த இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் சேதன் மற்றும் அதிதி போஸ்லே மொபைல் பெட்ரோல் பம்புகள் மூலம் டீசலை வீட்டுக்கு வழங்குகிறார்கள்.
ALSO READ: கோசாலைக்கு நன்கொடை அளித்தால் வருமான வரி விலக்கு அளிக்கப்படும்
இதுதான் நிறுவனத்தின் திட்டம்
ரிபோஸ் எனர்ஜி ஸ்டார்ட்அப் (Startup) 2016 இல் தொடங்கப்பட்டது. அப்போதிருந்து, ரிபோஸ் எனர்ஜி சுமார் 130 நகரங்களில் 300 ரிப்போக்களைக் கொண்டுள்ளது. இவர்கள் மொபைல் பெட்ரோல் பம்ப் (RMPP) மூலம் சேவையைத் தொடங்கினார்கள். இந்த ஸ்டார்ட் அப்பின் திட்டம், வரும் காலத்தில், 3200 ரிப்போஸ் மொபைல் பெட்ரோல் பம்புகளை தயாரித்து, தேவைக்கேற்ப டீசலை மக்களின் வீடுகளுக்கு வழங்க வேண்டும் என்பதுதான்.
வீட்டு வாசலில் டெலிவரி வழங்கப்படுகிறது.
நிறுவனத்தின் இந்த சேவையைப் பற்றி பேசுகையில், சேதன், “எங்கள் கவனம் முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை கொண்டு சேர்ப்பதில் உள்ளது. வீட்டு வாசல் வரை டீசலை (Diesel) நாங்கள் கொண்டு செல்வதற்கான இந்த வசதிக்கான செலவுகளை வாடிக்கையாளர் ஏற்கக்கூடாது என்பதிலும் நாங்கள் கவனம் கொள்கிறோம். வேளாண் துறை, மருத்துவமனைகள், வீட்டுவசதி சங்கங்கள், கனரக இயந்திர வசதிகள், மொபைல் டவர்கள் மற்றும் பல நிறுவனங்களுக்கு ரிப்போ மொபைல் பெட்ரோல் பம்புகள் மூலம் டோர்ஸ்டெப் டெலிவரி வழங்கப்படுகிறது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR