ஐபிஎல் 2025 தொடருக்கான பிளேயர்கள் ஏலம் மிகப் பிரம்மாண்டமாக நிறைவடைந்திருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூப்பராக பிளேயர்களை இந்த ஏலத்தில் எடுத்திருக்கிறது. ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே ஆகியோரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சிஎஸ்கே, ரவிச்சந்திரன் அஸ்வினையும் ஏலம் எடுத்திருக்கிறது. இதனால் அஸ்வின் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடப்போகிறார். இதனால் அஸ்வின் - ஜடேஜா காம்போவான இந்திரன் சந்திரன் கூட்டணியை சேப்பாக்கம் மைதானத்தில் மீண்டும் பார்க்க முடியும். அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான தோனி (MS Dhoni) மீண்டும் ஒருமுறை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவதை பார்க்கலாம்.
அதிகபட்சமாக இந்த ஐபிஎல் தொடர் அவருக்கு கடைசி தொடராக இருக்கலாம். அதனால் அவரை வெற்றியுடன் வழியனுப்ப சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திட்டமிட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங், ஐபிஎல் ஏலத்துக்கு பிறகு பேசும்பொழுது, "தோனி ஐபிஎல் விளையாட ரெடியாகவே இருப்பதாகவும் அவரை வெற்றியுடன் வழி அனுப்ப சென்னை அணி திட்டமிட்டுள்ளதாகவும், தோனி விரும்பியதைப் போல் கடைசி போட்டி அவர் சேப்பாக்கம் மைதானத்திலேயே விளையாடுவார் என்றும் தெரிவித்திருந்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன் பேசும்பொழுது, தோனி விரும்பும் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடலாம் எனக் கூறியிருந்தார். இந்த சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சென்னை வரப்போகும் தேதி குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அவர் அதிகபட்சம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி சென்னை வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது மார்ச் 10ஆம் தேதிக்குள் அவர் சென்னைக்கு வந்து அடுத்த ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை சேப்பாக்கம் மைதானத்தில் தொடர்வார் என கூறப்படுகிறது. முழங்கால் வலியில் இருந்து மீண்டிருக்கும் தோனி இந்த முறை இம்பேக்ட் பிளேயர் ஆக மட்டுமே விளையாட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தோனிக்கு ஏன் ஐபிஎல் 2025 தொடர் கடைசியாக இருக்கும் என்றால் அவருக்கு இப்போது வயது 43 ஆகிவிட்டது. அதனால் முழு இருபது ஓவரும் களத்தில் நின்று பில்டிங் செய்வது சந்தேகம். முழங்கால் வலி பிரச்சனை அவரை தொந்தரவு படுத்திக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி முடிந்தது முழங்கால் வலி சிகிச்சைக்காக மும்பை சென்று இருந்தார். அதனால் இந்த ஐபிஎல் தொடர் அவருக்கு கடைசியாக இருக்கவே வாய்ப்பு என்பதால் முன்கூட்டியே சென்னை வந்து கடைசி ஐபிஎல் தொடருக்கு தோனி சிறப்பாக தயாராகவும் வாய்ப்பு உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ