Zoom என்னும், வீடியோ கான்பரன்சிங் செயலி மிகவும் பிரபலமாகிவிட்டது, ஏனெனில் COVID-19 காரணமாக வீட்டிலிருந்து வேலை அதாவது work-from-home, என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன் காரணமாக நிறுவனங்கள் பெரிய அளவில் ஜூம் செயலியை பயன்படுத்துவதன் காரணமாக, ஜூமின் வருவாய் கடந்த ஆண்டை விட மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.


திங்களன்று, நிறுவனம் அதன் வருவாய் கடந்த ஆண்டை 326 சதவீதம் உயர்ந்து, 2.6 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்று அறிவித்தது. கடந்த காலாண்டில் செயலியின் விற்பனை 369 சதவீதம் அதிகரித்து 882.5 மில்லியன் டாலராக இருந்தது.


ஜூம் , என்பது ஒன்பது வருடத்திற்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட செயலி. இது  கொரோனாதொற்றுநோய் (Corona Virus) பரவலின் போது மிகவும் வளர்ச்சியை கண்ட பரவலாக அதிகம் பயன்படுத்தப்பட்ட பல செயலிகளில் ஒன்றாகும். தொலைதூரத்தில் பணியாற்றுவதன் மூலம்  சோர்வு  ஏற்படுவதாக உலகளாவிய அளவில் ஊழியர்கள் புகார் செய்தாலும், பல நாடுகளில் அலுவகத்திற்கு வந்து வேலை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு கட்டுபாடுகள்.


அமல்படுத்தப்பட்டுள்ளன.2021 ஆம் ஆண்டிலும் இந்த் நிலை தொடரும் என்று ஜூம் நிறுவனம் எதிர்பார்க்கிறது. 2021 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், நிறுவனம் 900-905 மில்லியன் டாலர்களுக்கு இடையில் வருவாய் கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது, இது முந்தைய மதிப்பீடுகளை விட மிக அதிகம். 


உலகின் பல்வேறு பகுதிகளிலும் தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. எனினும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு எப்போது திரும்புவர், அல்லது மாணவர்கள் பள்ளிக்குஎப்போது திரும்புவார்கள் என்பது குறித்து உறுதியாக எதுவும் கூற இயலாத நிலை தான் உள்ளது.


உலகளாவிய தடுப்பூசி நடவடிக்கைகள் வேகம் பெறும் நிலையில், தொற்றுநோயில் இருந்து உலகம் எவ்வாறு மீள்கிறது என்பதை பொறுத்து ஜூமின் எதிர்காலம் இருக்கும்.


ALSO READ | சமூக ஊடகங்கள், டிஜிட்டல் மீடியா, OTT-க்கான புதிய விதிகள்.. முக்கிய தகவல்கள்


தேசம், சர்வ்தேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR