வீட்டில் இருந்தபடி மாதம் ₹.20,000 வரை சம்பாதிக்கலாம்; Amazon-ன் புதிய திட்டத்தில்...
பிரபல ஈ-காமர்ஸ்(e-commerce) தளமான அமேசான்(Amazon), தனது இந்திய வாடிக்கையாளர் சேவைத் துறையில் 20,000 பருவகால வேலைகளை அறிவித்துள்ளது.
பிரபல ஈ-காமர்ஸ்(e-commerce) தளமான அமேசான்(Amazon), தனது இந்திய வாடிக்கையாளர் சேவைத் துறையில் 20,000 பருவகால வேலைகளை அறிவித்துள்ளது.
ஹைதராபாத், புனே, கோயம்புத்தூர், நொய்டா, கொல்கத்தா, ஜெய்ப்பூர், சண்டிகர், மங்களூர், இந்தூர், போபால், லக்னோ உள்ளிட்ட 11 இந்திய நகரங்களில் உள்ள இளைஞர் பெருமக்களுக்கு இந்த வேலை கிடைக்கும் எனவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக நாட்டில் 50000 தற்காலிக வேலைகளை அமேசான்(Amazon) அறிவித்த ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த வளர்ச்சி வந்துள்ளது.
READ | வேலை இல்லையா? கவலை வேண்டாம்; மணிக்கு ₹140 வரை சம்பாதிக்க ஒரு அரிய வாய்ப்பு!
வழங்கப்படும் பெரும்பாலான பதவிகள் தங்களது மெய்நிகர் வாடிக்கையாளர் சேவை திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதால், ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து பணிபுரியும் விருப்பம் இருக்கும் என்று அமேசான்(Amazon) குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு தேவையான குறைந்தபட்ச கல்வித் தகுதி 12-ஆம் வகுப்பு தேர்ச்சி என்பதால் பெரும்பான்மை மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் நிறுவனம் நம்புகிறது. எனினும் விண்ணப்பத்தாரர்கள் ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளில் ஒன்றில் சரலமாக தொடர்புகொள்ளும் திறமை கொண்டிருத்தல் வேண்டும் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த வேலைகள் மூலம் ஒரு நபருக்கு மாதத்திற்கு ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை கிடைக்கும் எனவும், இந்த தற்காலிக பணிகள் ஆறு மாதங்கள் வரை பொருந்தும் என்றும் தகவல்கள் மேலும் குறிப்பிடுகிறது.
தகவல்கள் படி மின்னஞ்சல், அரட்டை, சமூக ஊடகங்கள் மற்றும் தொலைபேசிகள் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் மூலம் வாடிக்கையாளர்களின் பிரச்சினைகளை ஊழியர்கள் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும் என தெரிகிறது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக "வளர்ந்து வரும் வாடிக்கையாளர் தேவைக்கு பதிலளிக்கும் விதமாக வாடிக்கையாளர் சேவை அமைப்பு முழுவதும் பணியமர்த்தல் தேவைகளை நாங்கள் தொடர்ந்து மதிப்பீடு செய்கிறோம். இந்திய மற்றும் உலகளாவிய விடுமுறை காலங்கள் தொடங்குவதால் அடுத்த ஆறு மாதங்களில் வாடிக்கையாளர் போக்குவரத்து மேலும் அதிகரிக்கும் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம்" என்று அமேசான்(Amazon) இந்தியா இயக்குனர் (வாடிக்கையாளர் சேவை) அக்ஷய் பிரபு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
READ | வீடு தேடி வரும் மதுபானம்... இனி Amazon மற்றும் BigBasket பயன்பாட்டிலும்!
தற்போது அமேசான் வழங்கும் பணிகள் தற்காலிகமானவை என்றபோதிலும், பணியாளர்களின் செயல்திறன் மற்றும் நிறுவனத்தின் வணிகத் தேவைகள் ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்த பின்னர், தற்காலிக பணியிடங்கள் நிரந்தர பணிகளாக மாற்றப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமேசான்(Amazon) அறிவித்துள்ளி இந்த பணியில் இணைவதற்கு ஆர்வமுள்ள வேட்பாளர்கள் 1800-208-9900 என்ற எண்ணில் அழைப்பதன் மூலம் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது seasonalhiringindia@amazon.com -க்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமும் விண்ணப்பிக்கலாம்.